எஸ்.பி.ஐ முக்கிய கட்டண மாற்றங்கள்: பண இருப்பை பார்ப்பதற்கும் கட்டணம்...!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ (SBI) முக்கிய கட்டண மாற்றங்களை செய்துள்ளது.
ஏ.டி.எம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளிலும்,
சேவைக் கட்டணத்திலும்
எஸ்.பி.ஐ வங்கி புதிய மாற்றங்களை செய்துள்ளது.
இந்த மாற்றங்கள், 2019, அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஏ.டி.எம்-மில் பணமெடுப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம்:
1. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ரொக்கம் இருக்க வேண்டும் என்பது எஸ்.பி.ஐ வங்கியின் விதிமுறை.
அதன்படி, ஒருவரது வங்கிக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை என்பது ரூ.25,000க்குள் இருந்தால் அந்த வாடிக்கையாளர் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் ஐந்து முறையும், இதர வங்கியின் ஏடிஎம்களில் இருந்து எட்டு முறையும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம்.
அதேப்போல, ஒரு வாடிக்கையாளரது
வங்கிக் கணக்கில் மாத சராசரி தொகை ரூ.25,000க்கு மேல், ரூ.1 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-மில்
அளவிலாத பணம் எடுக்கும் வாய்ப்புகளும், இதர வங்கி ஏடிஎம்களில் கட்டணமின்றி எட்டு முறையும் பணமெடுக்க அனுமதிக்கப்படுவர்.
அதேப்போல, நடப்புக் கணக்கில் மாத சராசரி இருப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர்களுக்கு அளவில்லாத எஸ்.பி.ஐ மற்றும் இதர வங்கி ஏ.டி.எம்-களில் பணமெடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
அதே சமயம், எஸ்.பி.ஐ நிர்ணயித்த எண்ணிக்கையை தாண்டி எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-மில்
இருந்து நீங்கள் பணமெடுத்தால் ரூ.10 மற்றும் ஜி.எஸ்.டியும், இதர வங்கி ஏ.டிஎ.ம்மில் நிர்ணயித்த எண்ணிக்கையைத் தாண்டி பணமெடுத்தால் ரூ.20 மற்றும் ஜிஎஸ்டியும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அபராதமாக பிடித்தம் செய்யப்படும்.
அதேநேரத்தில், நிர்ணயித்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் ஏ.டி.எம்களை பயன்படுத்தும் போது, பணமெடுப்பதைத்
தவிர்த்து பிற விஷயங்களை ஏ.டி.எம்மில் மேற்கொள்ளும் போது அதாவது பண இருப்பை பார்ப்பது /பரிசோதித்தல், பின் எண்ணை மாற்றுதல் போன்றவற்றுக்கு
எஸ்.பிஐ. வங்கியில் ரூ.5 மற்றும் ஜி.எ.ஸ்டியும், இதர ஏ.டிஎ.ம்கள் என்றால் ரூ.8 மற்றும் ஜி.எஸ்.டியும் வசூலிக்கப்படும்.
உங்கள் வங்கிக் கணக்கில் பணமில்லாமல், பரிவர்த்தனை முடியும் போது அதற்காக ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும்.
நீங்கள் எஸ்.பி.ஐயில், சம்பளக் கணக்கை வைத்திருந்தால், உங்களுக்கு எஸ்.பி.ஐ மற்றும் இதர வங்கி ஏ.டி.எம்களிலும் அளவில்லா பணப்பரிமாற்றம்
செய்து கொள்ளும் சலுகை இன்று முதல் வழங்கப்படுகிறது.