மொத்தப் பக்கக்காட்சிகள்

நாடார்கள் ஏன் திருமண விழாவிற்கு புரோகிதம் செய்ய பிராமணர்களை அழைப்பதில்லை?

தமிழகத்தில் கொங்கு வெள்ளாளர், வாணியர், ஆயிர வைசியர்
நகரத்தார், தமிழ் முஸ்லிம்கள், நாடார்கள் ஆகிய தமிழ் இனத்தார்  வணிக சமூகங்களாக அறியப்படுகின்றனர்.

இவர்களில் நாடார்கள் கணிசமான எண்ணிக்கையில் தமிழக வணிக தலங்களில் தடம் பதித்துள்ளனர்.  

நாடார்கள் தங்களது இல்லங்களில் நடைபெறும் எந்தவொரு விழாவிற்கும் புரோகிதம் செய்வதற்கு பிராமணர்களை அழைப்பதில்லை. வரலாறு அறியா சிறு எண்ணிக்கையிலான நாடார்கள் பிராமணர்களை அழைக்கிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது,


என்றாலும் தொண்ணூறு விழுக்காட்டினர் புரோகிதம் செய்வதில்லை.

இதற்கு நாடார்களின் சுயமரியாதையும் ஒரு காரணமாக அமைகிறது. பட்டிவீரன்பட்டி டபிள்யூ. பி.. சௌந்திர பாண்டியனார், விருதுநகர் வி.வி. ராமசாமி போன்றோர் பிராமணீய பழக்க வழக்கங்களை நாடார்களை அண்ட விடாமல் செய்ததில் பெரும்பங்காற்றினர். வரலாற்று ரீதியான பிராமண எதிர்ப்பும் நாடார்களை பிராமணர்களை புரோகிதம் செய்வதற்கு நெருங்க விடவில்லை

திருமண விழாவில் கூறப்படும் இப்படியான இழி மந்திரங்களை ஏற்றுக்கொள்வதற்கு எந்த நாடாரும் முன் வரவில்லை. சான்றாக, கீழ்க்காணும் சம்ஸ்கிருத மந்திரம்

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா: "..

அதாவது, திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது திருமணம்  செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை மணந்து விட்ட  ( தணிக்கை!) பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இவ்விளக்கங்களை நாடார் உறவின்முறைகளும், சமூகப் பெரியோர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, கட்டுக்கோப்போடு நிகழ்த்தப்பெறும் திருமண விழாவிலோ அல்லது வேறு எந்த மங்கல விழாவிலோ நாடார்கள் பிராமணப் புரோகிதர்களை புரோகிதம் செய்ய அனுமதிப்பதில்லை. வழக்கமாக சமூக பெரியவர் தான் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இவ்வழக்கங்கள் இன்று வரை கடைபிடிக்கப் பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.

- Yaaroo
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...