எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்ட் லாக், அன்லாக் செய்வது எப்படி?
எஸ்.எம்.எஸ் மூலமாக தற்போது ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்யலாம் என இந்தியாவின் தனித்துவ அடையாள
அமைப்பு (Uidai) கூறியுள்ளது.
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும்
மிகவும் முக்கியமான ஒரு அத்தாட்சியாக இருந்து வரும் நிலையில், அதனைதொடர்ந்து
நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில்,இந்தியாவின் தனித்துவஅடையாள அமைப்பு,எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக் / அன்லாக் செய்யும் வழிமுறையை கண்டுப்பிடித்துள்ளது.
எஸ்.எம்.எஸ் மூலமாக ஆதார் கார்டை லாக் செய்யும் முறை :
ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிலிருந்து,
ஒரு முறை பயன்படுத்தும்
பாஸ்வேர்டைகோரும் வகையில் கெட் ஓடிபி என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை வரிசையாக உள்ளீடு செய்து,1947 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.
எஸ்.எம்.எஸ் அனுப்பியவுடன்,இந்தியாவின் தனித்துவஅடையாள
அமைப்பு, ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டுஎண்ணை
தங்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பும்.
அதன் பின்னர், “லாக் யு.ஐ.டி என டைப் செய்து,ஸ்பேஸ் விட்டு,உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை வரிசையாக உள்ளீடு செய்து,தனித்துவ அடையாள
அமைப்பு அனுப்பிய ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு எண்ணையும் வரிசையாக உள்ளீடு செய்து,1947 என்ற எண்ணிற்கு மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.
எஸ்.எம்.எஸ் அனுப்பிய உடன்,தனித்துவ அடையாள அமைப்பு, உங்களது ஆதார் கார்டை லாக் செய்வதுடன், அதை உறுதிப்படுத்தும்
வகையில், உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பும்.
இதன் மூலம் உங்களதுஆதார் கார்ட் லாக் செய்யப்பட்டுவிட்டது என்பதை நீங்கள் அறியலாம்.
எஸ்.எம்.எஸ் மூலமாக ஆதார் கார்டை அன்லாக் செய்யும் முறை :
ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிலிருந்து,
ஒரு முறை பயன்படுத்தும்
பாஸ்வேர்டைகோரும்
வகையில் கெட் ஓடிபி என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு, உங்கள் வெர்ச்சுவல் ஐ.டி எண்ணின் கடைசி ஆறுஎண்களை வரிசையாக உள்ளீடு செய்து,1947 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.
அதன் பின்னர், “அன்லாக் யுஐடி எனடைப் செய்து,ஸ்பேஸ் விட்டு,உங்கள் வெர்ச்சுவல் ஐடி எண்ணின் கடைசி ஆறு எண்களை வரிசையாக உள்ளீடு செய்து,தனித்துவ அடையாள அமைப்பு அனுப்பிய ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டுஎண்ணையும் வரிசையாக உள்ளீடு செய்து,1947 என்ற எண்ணிற்கு மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.
எஸ்.எம்.எஸ் அனுப்பியவுடன், தனித்துவ அடையாள அமைப்பு, உங்களது ஆதார் கார்டை அன்லாக் செய்ததற்கான, குறுஞ்செய்தியை உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பும்.
இதன் மூலம் உங்களது ஆதார்
கார்ட் அன்லாக் செய்யப்பட்டுவிட்டது என்பதை நீங்கள் அறியலாம்.
இதில் மிகமுக்கியமாக, ஒருமுறை லாக் செய்துவிட்டால், மீண்டும் அன்லாக் செய்யும் வரை உங்களது ஆதார் கார்டை நீங்கள் பயன்படுத்த இயலாது.
மேலும், உங்களது மொபைல் எண், ஒரு ஆதார் கார்டுக்கு மேல் இணைக்கப்பட்டிருந்தால், லாக் செய்யும் நேரத்தில்,ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களைஉள்ளீடு செய்வதற்கு பதிலாக, கடைசி எட்டு எண்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
அன்லாக் செய்யும் நேரத்தில்,உங்கள் வெர்ச்சுவல் ஐடி எண்ணின் கடைசி ஆறு எண்களை உள்ளீடு செய்வதற்கு பதிலாக, உங்களது மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
ஆதார் கார்டை லாக் / அன்லாக் செய்ய, இன்டர்நெட் சேவை தேவையில்லை என தனித்துவ அடையாள
அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக