மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய வணிக பிரீமிய வசூல் ரூ. 7,817 கோடி



எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் புதிய வணிக பிரீமிய வசூல், 2019  செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த  அரையாண்டில், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட ஆரோக்கியமாக 40% அதிகரித்து ரூ.7,817 கோடியாக உயர்வு.
 
இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்று
  எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் (SBI Life Insurance). இதன் புதிய வணிக பிரீமிய வசூல் 2019 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த அரையாண்டில் 40% அதிகரித்து ரூ. 7,817 கோடியாக உயர்ந்துள்ளது. இது  2018 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த அரையாண்டில் ரூ. 5,573 கோடியாக இருந்தது. 

இந்த நிறுவனம், பாதுகாப்பு (protection) பாலிசிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பாதுகாப்பு பாலிசிகள் மூலமான புதிய வணிக பிரீமிய வசூல், 2019 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த  அரையாண்டில் ரூ.929 கோடியாக அதிகரித்துள்ளது. 2018 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த  அரையாண்டில் இது 59% அதிகரித்து ரூ. 586 கோடியாக இருந்தது.  

தனிநபர் புதிய வணிக பிரீமிய வசூல் 30% அதிகரித்து ரூ.4,848 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ.3,719 கோடியாக இருந்தது.

 எஸ்.பி.ஐ லைஃப்  நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் (நிகர லாபம்), 2019 செப்டம்பர் 30 உடன் முடிந்த அரையாண்டில் ரூ.502 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் சால்வன்ஸி விகிதம் (solvency ratio) தொடர்ந்து சிறப்பாக உள்ளது. அது,  2019 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த அரையாண்டில் 2.20 ஆக சிறப்பாக உள்ளது. சட்டப்படி இந்த விகிதம் 1.50 ஆக இருந்தால் போதுமானது

 எஸ்.பி.ஐ லைஃப்  நிறுவனம், நிர்வகிக்கும் தொகை (AUM) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இது 2019 செபடம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 23% அதிகரித்து ரூ.1,54,758 கோடியாக உள்ளது. இது இது 2018 செபடம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 1,26,166 கோடியாக இருந்தது. 

இந்த நிறுவனத்தின் கடன்:பங்கு மூலதன விகிதம் ( Debt-Equity Mix) 77:23 ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின்  91%  கடன் பத்திர முதலீடுகள் AAA  தரக்குறியீடு மற்றும் சாவரின் ஆவணங்களாக (Sovereign Instruments) உள்ளன.

இந்த நிறுவனம், பரந்துபட்ட விநியோக நெட் ஒர்க்-ஐ கொண்டிருக்கிறது.  பயிற்சி பெற்ற காப்பீடு நிபுணர்கள் 1,78,589 பேருடன் இந்தியா முழுக்க 923  அலுவலகங்களை கொண்டிருக்கிறது. 

மேலும், வங்கிகள் மூலம் பாலிசி விநியோகம்  (Bancassurance Channel), முகவர்கள் மூலம் விநியோகம்தரகர்கள், நுண்  முகவர்கள், பொது சேவை மையங்கள், இணைய தளங்கள், இன்ஷுரன்ஸ் சந்தைப்படுத்தும் அமைப்புகள், நேரடி வணிகம் என பல வகைகளில்  ஆயுள் காப்பீட்டு பாலிசியை விநியோகம் செய்து வருகிறது.

2019 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த அரையாண்டின் செயல்பாடுகள் (Performance for the half year ended September 30, 2019)

  புதிய வணிக பிரீமியம் (NBP)  40% அதிகரிப்பு

 தனிநபர் புதிய வணிக பிரீமிய வசூலில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது. வளர்ச்சி 30%, மற்றும் சந்தைப் பங்களிப்பு 22.3%

தனிநபர் மதிப்பிடப்பட்ட பிரீமியத்தில் (IRP) தனியார் சந்தை பங்களிப்பு 22% வளர்ச்சி

பாதுகாப்பு பாலிசிகளில் புதிய வணிக பிரீமிய வளர்ச்சி 59%

செயல்பாட்டு  செலவு  7.8% லிருந்து 6.5%  ஆக குறைவு

  13 வது மாத நிலைத் தன்மையின் விகிதம் 2.61% அதிகரித்து 83.20% லிருந்து 85.81% ஆக உயர்வு

 நிலைத் தன்மையின் விகிதம் அதிகரிப்பு: 13 வது மாதம் 2.61% அதிகரித்து 85.81%  &  13 வது மாதம் 3.58% அதிகரித்து 67.94%

 இந்திய எம்பெடட் மதிப்பு (IEV) 24% அதிகரித்து ரூ. 26,145 கோடி

 புதிய வணிகத்தின் மதிப்பு  (VoNB) 33% அதிகரித்து ரூ. 943 கோடி

புதிய வணிகத்தின் லாப வரம்பு 19.2% லிருந்து 20.2%

Disclaimer

Except for the historical information contained herein, statements in this release which contain words or phrases such as 'will', ‘expected to’, etc., and similar expressions or variations of such expressions may constitute 'forward-looking statements'. These forward-looking statements involve a number of risks, uncertainties and other factors that could cause actual results, opportunities and growth potential to differ materially from those suggested by the forward-looking statements. 

These risks and uncertainties include, but are not limited to, the actual growth in demand for insurance and other financial products and services in the countries that we operate or where a material number of our customers reside, our ability to successfully implement our strategy, including our use of the Internet and other technology our exploration of merger and acquisition opportunities, our ability to integrate mergers or acquisitions into our operations and manage the risks associated with such acquisitions to achieve our strategic and financial objectives, our growth and expansion in domestic and overseas markets, technological changes, our ability to market new products, the outcome of any legal, tax or regulatory proceedings in India and in other jurisdictions we are or become a party to, the future impact of new accounting standards, our ability to implement our dividend policy, the impact of changes in insurance regulations and other regulatory changes in India and other jurisdictions on us. SBI Life Insurance Company Limited undertakes no obligation to update forward looking statements to reflect events or circumstances after the date thereof.

This release does not constitute an offer of securities.

For investor queries please call Sangramjit Sarangi at + 91 22 6191 0281or email investorrelations@sbilife.co.in

For further press queries please call Santosh Setty at +91-22-6191 0034 / Minakshi Mishra at +91-22-6191 0140or emailsantosh.setty@sbilife.co.in /  minakshi.mishra@sbilife.co.in



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...