அர்விந்த் ஸ்மார்ட்பேசஸ் & ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் ரூ.
250 கோடி முதலீட்டில் வாங்கக் கூடிய மலிவு விலை வீடுகள் & நடுத்தர வருமான வருமானப் பிரிவினருக்கான வீட்டு வசதி திட்டம்
அஹமதாபாத்தை
தலைமையிடமாகக் கொண்ட
லால்பாய் குழுமத்தின்
(Lalbhai group) ஓர் அங்கமான அர்விந்த் ஸ்மார்ட்பேசஸ்
(Arvind SmartSpaces Limited - ASL), இந்தியாவின்
முன்னணி ரியல்
எஸ்டேட் மேம்பாட்டு
நிறுவனங்களில் ஒன்று.
இது, ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் நிறுவனத்தின் முழு துணை நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல்
அட்வைசர்ஸ் லிமிடெட் நிர்வகிக்கும் ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் அபோர்டபிள்
ரியல் எஸ்டேட் ஃபண்ட் 1 (HDFC Capital Affordable Real
Estate Fund 1 - H-CARE 1)
உடன் வர்த்தக கூட்டாண்மை மேற்கொண்டுள்ளதாக
அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டு இந்தியாவில் வாங்கக் கூடிய விலையுள்ள வீடுகள்
(affordable housing) மற்றும்
நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கான வீட்டு வசதித் திட்டங்களை மேம்படுத்துவதில் கவனம்
செலுத்துகிறது, அதேநேரத்தில், வீடுகளின் சரியான தரம் மற்றும் சரியான நேரத்தில் வீட்டை
ஒப்படைப்பதை உறுதி செய்யும். இந்தத்
திட்டம், சிறப்பு நோக்க திட்ட நிறுவனமான “அரவிந்த் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட்”(Arvind
Homes Private Limited) மூலமாக ரூ.250 கோடி ஆரம்ப முதலீட்டில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் திருமதி. ரேணு சுத் கர்னாட் (Ms. Renu Sud Karnad, Managing
Director, HDFC Ltd) கூறும்போது, “இந்தியாவில்
வீட்டுவசதி ஒரு
முக்கியத் தேவையாக
உள்ளது. நகரமயமாக்கலுடன் வாங்கக்
கூடிய விலையிலான வீடுகளின் தேவை கணிசமாக
அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெ.சி.டி.எஃப், இந்தியா முழுவதும்
உள்ள முன்னணி
ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு நெகிழ்வான
நீண்ட கால
மூலதனத்தை வழங்குவதன்
மூலம் இந்தியாவில்
வாங்கக் கூடிய மலிவு விலை
வீடுகளின் தேவை-வழங்கல் இடையை உள்ள இடைவெளியை (demand-supply
gap) நிவர்த்தி
செய்யும் முயற்சியில்
உள்ளது. எங்கள்
நோக்கம் மற்றும் மதிப்புகளுடன்
இணைந்த அர்விந்த்
ஸ்மார்ட்ஸ்பேசஸ் போன்ற
டெவலப்பர்களுடன் கூட்டுசேர
நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”
ஹெச்.டி.எஃப்.சி கேப்பிஃப்டல் அட்வைசர்ஸ் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர். மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. விபுல் ரூங்தா (Mr. Vipul Roongta, MD
& CEO of HDFC Capital Advisors Limited) கூறும்போது,
“அர்விந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ்
நிறுவனத்துடனான எங்கள்
கூட்டு, உயர்தர
மலிவு மற்றும்
நடுத்தர வருமானப்
பிரிவினருக்கன வீடுகளை
செலவு குறைந்த
முறையில் கட்டுவது
மற்றும் மேம்படுத்துவதில் கவனம்
செலுத்தும். இது
ஹெச்.டி.எஃப்.சி
கேப்பிட்டல் நிறுவனத்தின் சிறந்த
மதிப்பிடப்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுடன்
கூட்டு சேருவதற்கான வர்த்தக உத்தியுடன்
ஒத்துப்போகிறது.”
அர்விந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ் நிறுவனத்தின் சேர்மன் திரு. சஞ்சய் லால்பாய், (Mr. Sanjay Lalbhai,
Chairman, Arvind SmartSpaces) இந்தக் கூட்டு குறித்து கருத்து தெரிவிக்கும் போது,
“இந்தக் கூட்டு
கிடைத்ததில் நாங்கள்
மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது
புதிய திட்டங்களில்
வளர்ச்சி மற்றும்
முதலீடுகளை அதிகரிக்க
உதவும். இந்திய
வணிகத் துறையில் மிகவும் நம்பகமான
இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் இது
இணைந்திருப்பது அனைத்து
பங்குதாரர்களுக்கும் நீண்ட
கால மதிப்பை
உருவாக்கும் என்று
நாங்கள் நம்புகிறோம்.
ஹெச்.டி.எஃப்.சி
கேப்பிட்டல் மற்றும்
அர்விந்த் நிறுவனங்களால்
முதலீடு செய்யப்படும்
புதிய நீண்ட
கால நிதிகள்,
செயல்பாடுகளின் அளவிலும்,
நிறுவனத்தின் புதிய
திட்ட அளவிலும் மாற்றத்தைக் கொண்டு
வருகின்றன. நம்பிக்கை
மற்றும் சிறப்பு
மரபுகளை தொடர்ந்து
கட்டமைக்கவும் ஒருங்கிணைக்கவும்
இந்தக் கூட்டு உதவும்.’’
அர்விந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ்-ன் நிர்வாக இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியுமான திரு. கமல் சிங்கல் (Mr. Kamal Singal, Managing
Director and CEO of Arvind SmartSpaces) கூறும்போது‘’
இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு
(proposed structure)
நிறுவனத்தில் மூலதன
இடையூறுகளை நீக்குவதோடு மட்டுமல்ல,
குறுகிய கால மற்றும் நடுத்தர கால வணிக சுழற்சிகளைக் கவனித்துக்கொள்வதற்காக அதன் பேலன்ஸ்
ஷீட்டில் தேவையற்ற அழுத்தங்களை செலுத்தாமல், வணிகத்திற்கு நீண்டகால மூலதனம் கிடைக்கப்பெறுவதை
உறுதி செய்ய இது போதுமான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருக்கிறது”.
அர்விந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ் பற்றி (About Arvind SmartSpaces):
லால்பாய் குழுமம்,
80 ஆண்டுகள் பழமையான
பாரம்பரியமிக்கது. இதன் ஓர் அங்கமாக 2008 ஆம்
ஆண்டில் நிறுவப்பட்ட
அரவிந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ்
அஹமதாபாத்தை தலைமையிடமாகக்
கொண்ட இந்தியாவின்
முன்னணி ரியல்
எஸ்டேட் மேம்பாட்டு
நிறுவனங்களில் ஒன்றாகும்.
நாடு முழுவதும்
சுமார் 70 லட்சம்
(7 million) சதுர
அடி ரியல்
எஸ்டேட் சொத்து
உருவாக்கத்துடன், இந்த
நிறுவனம் தனது
வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு
மதிப்பு சேர்க்கும்
ரியல் எஸ்டேட்
தீர்வுகளை வழங்குவதில்
கவனம் செலுத்துகிறது
மற்றும் நாட்டின்
முன்னணி கார்ப்பரேட்
ரியல் எஸ்டேட்
நிறுவனமாக வேகமாக
வளர்ந்து வருகிறது.
இந்த நிறுவனம் அஹமதாபாத்,
காந்திநகர், பெங்களூரு
மற்றும் புனே
போன்ற நகரங்களில் ரியல்
எஸ்டேட் சொத்துகளைக் கொண்டுள்ளது.
அர்விந்த்-ன் வலுவான
பிராண்ட் பெயரால்
இது வளர்ந்து
வருகிறது
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட
திட்டங்கள் மூலம்
பெறப்பட்ட நம்பகத்தன்மை
மூலம் , மேலும்
விரிவுபடுத்தவும், மேலும்
வளரவும் தீவிரமான திட்டங்களைக்
கொண்டிருக்கிறது.
ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் பற்றி (About HDFC Ltd):
இந்தியாவின்
முன்னோடி வீட்டுவசதி
நிறுவனமான ஹவுசிங் டெவலப்மென்ட்
ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்
லிமிடெட் (ஹெச்.டி.எஃப்.சி)
72 லட்சத்துக்கும் மேற்பட்ட
குடும்பங்களுக்கு சொந்த
வீடு கிடைக்க உதவியுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சியின்
வலிமை அதன்
மதிப்பு கூட்டப்பட்ட
சேவைகளாகும். இந்தச்
சேவைகள், பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் சிறப்புக் குழு மூலம்
வழங்கப்படுகிறது. ஹெச்.டி.எஃப்.சி தொடர்ந்து வாடிக்கையாளர் நட்பு சேவைகளின் நீண்ட வரலாற்றைக்
கொண்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி
தொழில்நுட்ப உதவியுடன்
வீட்டுக் கடன் வழங்கும் ஒரு மாதிரி
வீட்டு வசதி நிதி
நிறுவனம் (model housing finance
company) என்று
விவரிக்கப்பட்டுள்ளது. வளரும் நாடுகளுக்கான
ஆசியா, ஆப்பிரிக்கா
மற்றும் கிழக்கு
ஐரோப்பா முழுவதும்
ஆலோசனை பணிகளை
அளித்து வருகிறது. ஹெச்.டி.எஃப்.சி வழங்கிய வீட்டுக் கடன் சராசரி ரூ 27.8 லட்சம். பிரதான்
மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் (நகர்ப்புற) கீழ் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம்
பயனாளிகளைக் கடக்கும் முதல் நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி.
ஹெச்.டி.எஃப்.சி
கேப்பிட்டல் அட்வைசர்ஸ் பற்றி (About
HDFC Capital Advisors):
ஹெச்.டி.எஃப்.சி
லிமிடெட்-ன் 100 சதவிகித துணை நிறுவனமாக ஹெச்.டி.எஃப்.சி
கேப்பிட்டல் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் (HDFC Capital Advisors
Limited), உள்ளது. இந்த நிறுவனம், ரியல் எஸ்டேட் தனியார் பங்கு நிதி உதவிக்கான முதலீட்டு மேலாண்மை சேவைகளை வழங்குகிறது.
மற்றும் நாட்டின்
மிகப்பெரிய நிதி
மேலாளர்களில் ஒருவராக
உள்ளது. செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட
பிரிவு II மாற்று முதலீட்டு ஃபண்ட்களான
(Category II Alternative Investment Fund),
ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் அபோர்டபிள் ரியல் எஸ்டேட் ஃபண்ட் 1 மற்றும் ஹெச்.டி.எஃப்.சி
கேப்பிட்டல் அபோர்டபிள் ரியல் எஸ்டேட் ஃபண்ட் 2-ன் (HDFC
Capital Affordable Real Estate Fund 1 (H-CARE 1) and HDFC Capital Affordable
Real Estate Fund 2 (H-CARE 2) முதலீட்டு மேலாளராக இருக்கிறது.
ஹெச்
– கேர் ஃபண்ட்களின் முதன்மை முதலீட்டாளர்கள்
அபுதாபி முதலீட்டு
ஆணையத்தின் (Abu Dhabi Investment
Authority -ADIA) முழுக்க சொந்தமான
துணை நிறுவனமும்,
தேசிய முதலீட்டு
மற்றும் உள்கட்டமைப்பு
நிதியமும் (National Investment and
Infrastructure Fund -NIIF)) அடங்கும்
ஹெச்
– கேர் 1 மற்றும் ஹெச் – கேர் 2 ஃபண்ட்கள், இந்தியாவின் முன்னணி 20 நகரங்களில் வாங்கக்
கூடிய மலிவு விலை வீடுகள் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடியிருப்பு திட்டங்களை
குறிவைத்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (US$1.1
billion) உருவாக்கி உள்ளது. இந்தத்
தளத்தின் முதன்மை
நோக்கம், இந்தியாவில்
வாங்கக் கூடிய விலையிலான மலிவு விலை வீடுகள்
மற்றும் நடுத்தர
வருமான வீடுகளை
அபிவிருத்தி செய்வதற்கான
நிலம் மற்றும்
முன் ஒப்புதல்
கட்டத்தில் உள்ள
டெவலப்பர்களுக்கு நீண்ட
கால, பங்கு
மூலதனம் மற்றும் பங்கு மூலதனம்
மற்றும் கடன் பத்திர மூலதனத்தை வழங்குவதாகும்.
தற்போது,
கிட்டத்தட்ட 1 பில்லியன்
அமெரிக்க டாலர்
முதலீடுகள், இந்தியா
முழுவதும் உள்ள
முன்னணி டெவலப்பர்களுடன்
மலிவு விலை வீடுகள் மற்றும்
நடுத்தர வருமானம்
கொண்டவர்களுக்கான வீடுகளை அளிக்க உறுதிபூண்டுள்ளன.
ஹெச்.டி.எஃப்.சி
கேப்பிட்டல் லிமிடெட், சமீபத்தில்
ஹெச்.டி.எஃப்.சி
அபோர்டபிள் ரியல்
எஸ்டேட் மற்றும்
தொழில்நுட்ப திட்டத்தை
(HDFC Affordable Real Estate and Technology Program -
H@ART) அறிமுகப்படுத்தியது. H@ART, மலிவு
விலை வீடுகள் மற்றும் சுற்றுச்சூழல்
அமைப்பினுள் புதுமை
மற்றும் செயல்திறனை
மேம்படுத்தும் ரியல் எஸ்டேட்
தொழில்நுட்ப நிறுவனங்களில்
வழிகாட்டி, பங்குதாரர்,
முதலீடு செய்ய
முயல்கிறது.
கூடுதல் விவரங்களுக்கு, Contact:
Mr. Jagdish Dalal