மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு
2019 செப்டம்பரில்
ரூ.8,262 கோடி
2019 செப்டம்பரில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையில்
ரூ.8,262 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்
மாதத்தில் ரூ.8,230 கோடி முதலீடு
செய்யப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்டில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 2019 செப்டம்பரில் ரூ.96,000
கோடி
குறைந்து, ரூ.24.50,786.76
கோடியாக உள்ளது.
இது கடந்த ஆகஸ்ட்
மாதத்தில் ரூ.25,47,593.76 கோடியாக
இருந்தது,.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் விலக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்
முதலீட்டின் நிகர
மதிப்பு ரூ.1.5
லட்சம்
கோடி.
லிக்விட் ஃபண்டில் மட்டும் ரூ.1.4 லட்சம் கோடி
முதலீடுகள் விலக்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி அமைப்பு தெரிவித்துள்ளது.
காலாண்டு முடியும் காலத்தில் கார்ப்பரேட் மற்றும் வங்கிகள் வரி
மற்றும் டிவிடெண்ட் காரணங்களுக்காக தங்களது லிக்விட் ஃபண்ட்
முதலீடுகளை விலக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
Mutual Funds - SIP September 2019