மொத்தப் பக்கக்காட்சிகள்

முத்தூட் ஃபைனான்ஸ் என்.சி.டி ரூ. 1,000 கோடி வருமானம் 9.25% முதல் 10.00%



 முத்தூட் ஃபைனான்ஸ் என்.சி.டி மூலம்
ரூ. 1,000 கோடி திரட்டுகிறது

முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் (Muthoot Finance Ltd) தனது 21- வது பாதுகாப்பான பங்குகளாக  மாற்ற முடியாத கடன் பத்திர (Non-Convertible Debentures - NCD) பொது வெளியீட்டை அறிவித்துள்ளது. அடிப்படையில் ரூ. 100 கோடிக்கு இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. அதிக தேவையிருந்தால் கூடுதலாக ரூ. 900 கோடி வரைக்கும் திரட்டப்படும். ஆக மொத்தம் என்.சி.டி. வெளியீடு மூலம் ரூ. 1,000  கோடி திரட்டப்படுகிறது. 

இந்த என்.சி.டி. வெளியீடு செப்டம்பர் 27 தொடங்கி அக்டோபர் 25-ல் நிறைவு 
பெறுகிறது. கடன் பத்திரங்கள் வேண்டி அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டால் முன்னதாக நிறைவு செய்யப்படும் அல்லது குறைவாக விண்ணப்பிக்கப்பட்டால் வெளியீடு  நீடிக்கப்படும். இதற்கான முடிவை இயக்குநர் குழு அல்லது என்.சி.டி. குழு முடிவு செய்யும்.

முத்தூட் ஃபைனான்ஸ்  நிர்வாக இயக்குனர் திரு. ஜார்ஜ் அலெக்சாண்டர் (Mr.George Alexander Muthoot, Managing Director, Muthoot Finance) கூறும் போது, இந்தக் கடன் பத்திர வெளியீடு, நிறுவனத்துக்கு நீண்ட கால நிதியைத் திரட்ட உதவும். மேலும், கடன்  திரட்டுவதில் பன்முகப்படுத்தவும் நிறுவனத்திற்கு உதவும். முந்தைய என்.சி.டி வெளியீடுகள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிக  ஆதரவும் பெற்றன.’’

அவர் மேலும் கூறும் போது,, “ சிறு மற்றும் உயர் மதிப்பு தனிநபர் முதலீட்டாளர்களுக்கு இந்த என்.சி.டி வெளியீடு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதாவது,  மொத்த வெளியீட்டில் அவர்களுக்கு நாங்கள்  80%  சதவிகிதம் ஒதுக்கியுள்ளோம். முதலீடுகளுக்கு ஒப்பிடத்தக்க குறைவான, மாற்று வழிகள்  இருக்கும்போது, நிலையான மற்றும் கவர்ச்சிகரமான நீண்ட கால வருவாய் அளிக்கும் இந்த என்.சி.டிகள் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்..”

இந்த வெளியீட்டுக்கு இரண்டு  தரக்குறியீடு நிறுவனங்கள் - கிரிசில் லிமிடெட் மற்றும் இக்ரா  லிமிடெட்  தரக்குறியீடு வழங்கி உள்ளன. இரு ஏஜென்சிகளும் என்.சி.டி வெளியீட்டுக்கு ‘ஏஏ/ நிலையானது (AA/Stable) நீண்ட கால கடன் மதிப்பீட்டை வழங்கியுள்ளன. இந்த மதிப்பீட்டு அளவுகோல் ‘நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மற்றும் மிகக் குறைந்த கடன் அபாயத்தை கொண்டிருக்கிறது’ என்பதைக் குறிக்கிறது.

இந்த என்.சி.டிகள் பி.எஸ். பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். ஒதுக்கீடு என்பது முதலில் வருபவர்களுக்கு முதல் சேவை என்கிற அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பான இந்த என்.சி.டி.க்களுக்குமாதம் தோறும்அல்லதுஆண்டுக்கு ஒரு முறைவட்டி வருமானம் பெறும் வசதி உள்ளது. அல்லது முதிர்வின் போது, மொத்தமாக பெறுதல் உள்ளிட்ட பத்து முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. ஆண்டுக்கு வட்டி வருமானம் 9.25% முதல் 10.00%  வரை கிடைக்கும்.
இந்த என்.சி.டி வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, முதன்மையாக நிறுவனத்தின் கடன் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.

எடெல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் . கே. கேப்பிட்டல் சர்வீசஸ் லிமிடெட் ஆகியவை இந்த வெளியீட்டுக்கு முன்னணி மேலாளர்களாக உள்ளனர்.ஐ.டி.பி.ஐ டிரஸ்டீசிப் சர்வீசஸ் லிமிடெட் இந்த வெளியீட்டுக்கான கடனீட்டு அறங்காவலர் (Debenture Trustee) ஆவார். லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்த வெளியீட்டிற்கான  பதிவாளர் ஆவார்.

For Further information, please contact:
Dimple Momaya,
Adfactors Public Relations Pvt Ltd
Contact: +9198207 62036

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...