மொத்தப் பக்கக்காட்சிகள்

லஷ்மி விலாஸ் பேங்க், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஆர்.பி.ஐ. தடை..!


லஷ்மி விலாஸ் பேங்க, வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு:

லஷ்மி விலாஸ் பேங்க் (Lakshmi Vilas Bank - LVB), 27/9/19 முதல் ரிசர்வ் வங்கியால், உடனடி திருத்த செயல் திட்டம் (Prompt Corrective Action plan), வங்கியில் தொடங்கப்படுவதாக தனது அனைத்து பங்குதாரர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறது. எவ்வாறாயினும், உடனடி திருத்த செயல் திட்டம் என்பது வங்கியின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது (Moratorium) என்று அர்த்தமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்

வங்கி சாதாரண வணிகத்தை  மேற்கொள்ள முடியும் என்பதை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம். வைப்புத் தொகை போடுபவர்களின் (depositors) செயல்பாடுகளுக்கு எந்தத் தடையும் இல்லை.
Src: BS



பெரு நிறுவனங்கள் (Corporates) மற்றும் பிற சிக்கலில் மற்றும் உயர் இடர்ப்பாடு கொண்ட  துறைகளைத் (stressed and high risk sectors) தவிர அனைத்து பிரிவுகளுக்கும் கடன் வழங்கும் நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ள முடியும். இந்தத் திருத்த செயல் திட்டம் பல்வேறு பரிந்துரைகள் மற்றும் / நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. அ) வாராக் கடன்களை (NPA) மீட்டெடுப்பது ஆ) செலவுகளைக் குறைத்தல் இ) மூலதனத்தை அதிகரித்தல் ஈ) இடர்ப்பாடு கொண்ட சொத்துகளை (Risk Weighted Asset  -RWA) குறைத்தல் ) லாபத்தை மேம்படுத்துதல் போன்றவையாகும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வங்கியின் நிர்வாகம் செயல்படுத்துகிறது.

அண்மையில் முடிவடைந்த பங்கு முதலீட்டாளர்களின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) 27/9/19 அன்று, பங்கு மூலதன பயன்முறையின் மூலம் ரூ.1,000 கோடி வரை, மேலும் மூலதனத்தை அடுக்கு I / அடுக்கு II பத்திரங்கள் (Tier I / Tier II bonds.) மூலம் ரூ.500 கோடி வரை திரட்ட வங்கிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.  வங்கி தனது மூலதனத்துக்கும் இடர்ப்பாடு கொண்ட சொத்துகளுக்குமான விகிதத்தை (capital to risk weighted assets ratio – CRAR) உயர்த்தும் மூலதனத்தை திரட்ட பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது. இதேபோல் வங்கி வாராக்கடன்களை மீட்க உத்திகளை வகுக்கிறது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலை வங்கியின் நிர்வாகம் வரவேற்கிறது. மற்றும் வங்கியின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியத்தை (financial health) மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளது.

இந்த விஷயங்களில், எல்.வி.பி தனது வாடிக்கையாளர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறது, இது மற்றவர்களின் உதவியோடு வங்கியின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கத்தை அடைய வங்கிக்கு உதவும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...