மொத்தப் பக்கக்காட்சிகள்

யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் அ முதல் ஃ வரை ஃபண்ட் அலசல்


யூ.டி.ஐ வேல்யூ  ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் -  சந்தை முழுவதும் வாய்ப்புகளைத் தேடும் ஃபண்ட்!

நிதி நிபுணர்கள்பரவலான  ஃபண்ட்களில் (Diversified funds) முதலீடு செய்ய வேண்டும் என அடிக்கடி முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள்முதலீட்டாளர்களை  லார்ஜ் கேப் ஃபண்ட்கள் கவர்ந்திழுக்க ஆரம்பித்திருக்கிறது.  

காரணம், பங்குச் சந்தையின் மதிப்பில் (Market capitalization) அவற்றின் மதிப்பு  சுமார் 80 முதல் 85 சதவிகிதமாக இருக்கிறது. லார்ஜ் கேப் பங்குகள், பரந்த பங்குச் சந்தை / குறியீடுகளை (Broader markets/Indices) குறிப்பதாக இருக்கிறது. இந்த லார்ஜ் கேப் ஃபண்ட்களை முதலீட்டாளர்கள் அங்கீகரிக்க வேண்டும்


முதலீட்டு அணுகு முறைகள் 

இந்த லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் பல்வேறு முதலீட்டு அணுகு முறைகள் (Growth Vs. Value - வளர்ச்சி வெர்சஸ் மதிப்பு) அல்லது ஒட்டு மொத்த சந்தையில் சில சுழற்சிகளில் வாய்ப்புகள் உள்ளன. இவை நிதி மேலாளர்களுக்கு (Fund manager )பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில் பிரத்யேக முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த முதலீட்டு பாணி, முதலீட்டுக் கலவையின் இடர்ப்பாட்டை (Risk) குறைக்கிறது.

இது போன்ற ஃபண்ட்களில் ஒன்றுதான், யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (UTI Value Opportunities Fund). இந்தப் பிரிவு ஃபண்ட்கள், பல்வேறு பங்குச் சந்தை மதிப்பை கொண்டுள்ள, குறிப்பிட நிறுவனப் பங்குகளில் உள்ளார்ந்த மதிப்பின் (Intrinsic value) அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிகின்றன.

மல்டி கேப் ஃபண்ட் 

இதன் அர்த்தம், ''மதிப்பு'' பாணி (“Value” style) முதலீடாக இருக்கிறது. இதனை மல்டி கேப் ஃபண்ட்  (Multi-cap Fund) என நாம் அழைக்கிறோம்.இங்கே,  ''மதிப்பு'' என்பது ஒரு நிறுவனப் பங்கை அதன் உள்ளார்ந்த மதிப்பை விட குறைந்த விலைக்கு வாங்குவதாக உள்ளது. உள்ளார்ந்த மதிப்பு என்பதை, ஒரு நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்காக பல்வேறு காலக் கட்டத்தில் உருவாக்கி உள்ள பண வரத்தின் (Cash flows) தற்போதைய  மதிப்பு என எளிமையாக குறிப்பிடலாம். குறைத்து மதிப்பிடப்பட வணிகங்களை, இரு முறைகளில் கண்டுபிடிக்க முடியும்முதல் முறை என்பது நிறுவனத்தின் போட்டித் தன்மையின் நிலைத்தன்மையை சந்தை அங்கீகரிக்காமல் இருக்கும் நிலையாகும். இரண்டாவது முறை என்பதுநிறுவனம் நீண்ட காலத்தில் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக இருக்கும். வணிக சுழற்சி காரணங்களால் இந்த நிறுவனங்கள் சவால்களை சந்தித்து வரும்

கடந்த காலங்களில் இந்தச் சவால்களை நிறுவனங்கள் சமாளித்து வந்தவையாக இருக்கும். அதேநேரத்தில், நிறுவனத்தின் முக்கிய வணிகம்  வலிமையானதாக இருப்பதோடு, சிறப்பான எதிர்காலம் (பண வரத்துகள், வருமான விகிதங்கள்) இருக்கும்

இந்த நிலையில், குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு சரியான நேரமாக இருக்கும். இந்த முறைகளிலும் மலிவான விலையில் பங்குகளை வாங்க வாய்ப்பு இருக்கிறது

யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், அதிக உள்ளார்ந்த மதிப்பு மற்றும் நீண்ட காலத்தில் அதிக பண வரத்தை உருவாக்க கூடிய நிறுவனப் பங்குகளில் கவனம் செலுத்தி வரும்.

4.87 லட்சம் முதலீட்டாளர்கள்
யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், கடந்த 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிலவரப்படி, 4.87 லட்சம் முதலீட்டாளர்களுடன் 4,181 கோடி ரூபாய் இந்த ஃபண்டின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஃபண்ட்-க்கான பங்குகள் தேர்ந்தெடுக்க நிறுவனத்தின் சந்தை மதிப்பு நெகிழ்வு தன்மையுடன் (Flexibility) கையாளப்படுகிறது. முதலீட்டுக் கலவையில், லார்ஜ் கேப் பங்குகள் அதிகமாக இருந்தாலும், மாறுபடும் மதிப்பீட்டின் அடிப்படையில் மிட் கேப் நிறுவனப் பங்குகளும் இடம் பெறுகின்றன. 2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டில் சுமார்  74 சதவிகித தொகை லார்ஜ் கேப் பங்குகளிலும் மீதியை மிட் & ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறது.
டாப் பங்குகள்..!

இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஐடிசி, சன் பார்மா, இண்டஸ் இந்த் பேங்க், பார்தி ஏர்டெல் மற்றும் சிப்லா போன்ற நிறுவனப் பங்குகள் 50%க்கும் அதிகமாக இடம் பெற்றுள்ளன

யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், பங்குச் சந்தை சார்ந்த போர்ட்போலியோவை வலுவானதாக உருவாக்க விரும்பும்  மற்றும் நீண்ட காலத்தில் மூலதன வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது

இதில், நடுத்தரக் காலம் முதல் நீண்ட காலம் வரையில் ஓரளவுக்கு இடர்ப்பாட்டை சந்திக்கும் திறன் கொண்ட (Moderate risk-profile) மற்றும் நியாயமான வருமானம் (Reasonable outperformance) எதிர்பார்க்கும்  முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது.
  

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...