சைனஸ் பாதிப்புக்கு மூக்கு மேல் பலன் தரும் குறட்டைப் பழத் தைலம்..
இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் சைனஸ் பாதிப்பு இருக்கிறது. அவர்கள் குறட்டைப் பழத் தைலத்தை தினசரி காலை, மாலை இரு முறை மூக்கில் ஒரு சொட்டு விட்டு வர பாதிப்பு படிப்படியாக குறையும்.
மேலும் இந்த எண்ணெயை வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இந்தத் தைலம் நாட்டு சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கிப் பயன்படுத்தலாம்.
குறட்டைப் பழத் தைல செய்முறை
நாட்டு சித்த மருந்துக் கடைகளில் குறட்டைப்பழம் கிடைக்கும். அது, சாப்பிடுவதற்கு உகந்த பழம் அல்ல. ஆனால், அதன் தைலம் மருத்துவக் குணம் நிரம்பியது.
குறட்டைப் பழச்சாறு 1 லிட்டர், சமபங்கு நல்லெண்ணெய். இதில் 20 கிராம் இடித்த மிளகு போட்டுக் காய்ச்ச வேண்டும். சாறு வற்றி எண்ணெய் பிரியும் பதத்தில் இறக்கி புட்டியில் சேமித்துக் கொள்ளுங்கள்.
வாரம் ஒருமுறை தலைக்கு இதனைத் தேய்த்து எண்ணெய்க் குளியல் போட்டால், மூக்கடைப்பு, தலைவலியுடன் வரும் குறட்டை நீங்கும்.
குறட்டைப் பழத்துக்கு இன்னொரு பெயர் 'சவுரிப்பழம்’. ஏனென்றால், இந்தத் தைலத்தின் பக்கவிளைவு... அடர்த்தியான கூந்தல் வளர்ச்சி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக