மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்திய இணையதள பயன்பாட்டாளர்களில் மூன்றில் ஒருவர் இணைய தாக்குதலால் பாதிப்பு - கே7 கம்ப்யூட்டிங்

இந்திய இணையதள பயன்பாட்டாளர்களில்
மூன்றில் ஒருவர் இணைய தாக்குதலால் பாதிப்பு

கே7 கம்ப்யூட்டிங் வெளியிட்ட
இணைய ஆபத்து கண்காணிப்பு அறிக்கையில் தகவல்
மெட்ரோ நகரங்களுக்கு இணையாக 2-ம் கட்ட நகரங்களும் பாதிப்பு;
கூகுள் பிளே ஸ்டோர் மூலமான அச்சுறுத்தலில் பாட்னா முன்னிலை

நடப்பு 2019-20ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்திய இணையதள பயன்பாட்டாளர்களில் மூன்றில் ஒருவர் தொடர் இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கே7 கம்ப்யூட்டிங் வெளியிட்ட இணைய ஆபத்து கண்காணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இணைய பாதுகாப்பு தொடர்பான மிகப்பெரிய மற்றும் ஆழமான ஆய்வு இதுவாகும். இந்த ஆய்வு தென்னிந்திய மெட்ரோ நகரங்களான சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக அளவிலான இணைய தாக்குதல்கள் முதல் கட்ட நகரங்களைக்காட்டிலும் நாடு முழுவதும் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள 2-ம் கட்ட நகரங்களில் அதிக அளவில் உள்ளது.


கே 7 கம்ப்யூட்டிங்கின் இணைய ஆபத்து கண்காணிப்பு அறிக்கை  காலாண்டு அறிக்கையாகும். இது இந்தியாவின் சிக்கலான இணைய பாதுகாப்பு குறித்த நுண்ணறிவான பார்வையை வழங்குகிறது. மேலும் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர்களுக்கான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் இணைய பாதுகாப்பு பரிந்துரைகளையும் வழங்குகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கே 7 கம்ப்யூட்டிங், ஏறக்குறைய 7 மில்லியன் தனித்துவமான சாதனங்களிலிருந்து நிஜ-உலக டெலிமெட்ரி தரவு மற்றும் பாதுகாப்பு நிகழ்வு விசாரணை தரவு ஆகியவற்றை  கே 7 ஆய்வகங்களில் ஆய்வு செய்து ஒரு அட்டவணை வடிவத்தில் வழங்கி உள்ளது. மெட்ரோ, பிராந்தியங்களில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் கட்ட 20 இந்திய நகரங்களில் எண்டர்பிரைசஸ், மொபைல், மேக், விண்டோ மற்றும் ஐஓடி போன்ற அனைத்து முக்கியமான கூறுகளையும் இந்த அறிக்கை கண்காணிக்கிறது.

இந்த அறிக்கையின்படி, முதல்கட்ட நகரங்களில், சென்னை இணைய தாக்குதலில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த காலாண்டில் 48 சதவீத இணைய தாக்குதல் சென்னையில் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இதே காலக்கட்டத்தில் கொல்கத்தாவில் 41 சதவீதமும், இந்திய தலைநகரான டெல்லியில் குறைந்த அளவிலான இணைய தாக்குதல் 28 சதவீதமும் நடைபெற்றுள்ளது. இந்த அறிக்கையின்படி, மெட்ரோ நகரங்களில் இந்த இணைய தாக்குதல்கள் அலுவலக வேலை நாட்களான திங்கட்கிழமையில் துவங்கி, வெள்ளிக்கிழமை வரை அதிக அளவில் நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது. நேரத்தைப் பொறுத்தவரை மெட்ரோ நகரங்களில் இணைய ஆபத்து நேரம் மாலை 4 மணி அளவில் உள்ளது. இணைய பாதுகாப்பானது காலை 6 மணி அளவில் உள்ளது.

இணைய பாதிப்பு சதவீதத்தில் சராசரியாக முதல் 12 இடங்களில் 2-ம் கட்ட நகரங்கள் உள்ளன. இவை மெட்ரோ நகரங்களான முதல் கட்ட நகரங்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த முதல் காலாண்டில், பாட்னாவில் அதிக அளவான 48 சதவீத இணைய தாக்குதலும், அதனைத் தொடர்ந்து குவாகத்தி 46 சதவீதம், லக்னோ 45 சதவீதமும் நடைபெற்றுள்ளது. இவற்றுடன் ஒப்பிடுகையில் திருவனந்தபுரம் மிகவும் பாதுகாப்பாக 35 சதவீத இணைய தாக்குதல் மட்டுமே நடைபெற்றுள்ளது.


இது குறித்து கே7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே. புருஷோத்தமன் கூறுகையில், கே7 ஆய்வகத்தின் இணைய ஆபத்து கண்காணிப்பு, நாடு முழுவதும் எப்போதும் உருவாகி வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகிறது. மேலும் இணைய பாதுகாப்பிற்கான அணுகுமுறையில் அதிக செயல்திறன்மிக்க வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்கிறது.முதல் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் அதிக அளவிலான இணைய தாக்குதல்கள் நடைபெற்று வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். எதிர் நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் குறிப்பிட்ட நுண்ணறிவை பயன்படுத்த எங்கள் பங்குதாரர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தொழில்துறையில் ஒரு முன்னோடியாக, கே 7 கம்ப்யூட்டிங் தொடர்ந்து இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்புவதோடு, இணைய பாதுகாப்பு சூழலை உருவாக்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அபாயங்களைக் குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் இதர முக்கிய விவரங்கள் வருமாறு˜-

நிறுவன பாதுகாப்பின்மை

ஆரக்கிள் வெப்லொஜிக் பாதிப்புகள் சிவிஇ-2019-2725 மற்றும் சிவிஇ-2019-2729 ஆகியவற்றை பல சேவையகங்கள் இன்னும் இணைக்கவில்லை என்பதால் தவறான சேவையகங்களால் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

ஒரே நெட்வொர்க் சூழலில் பாதுகாப்பில்லாத ஒரு கணினி இருக்கும்போது, அது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

பொதுவாக போதுமான கணினி உள்ளமைவு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு காரணமாக, தொலைநிலை டெஸ்க்டாப் நெறிமுறை அடிப்படையிலான தாக்குதல்கள் நாட்டில் ஒரு முக்கிய வகை இணைய அச்சுறுத்தலாகத் தொடர்கின்றன.

விண்டோஸ் தாக்குதல்

ரான்சம்வேர் மற்றும் பைல்லெஸ் தாக்குதல்கள் நாட்டில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருவது பிரச்சினையாக உள்ளது. ரான்சம்வேர்-ஆஸ்-ஏ-சர்வீஸ்-ன் வருகை, ரான்சம்வேரின் தாக்குதல்களை வேகமாக வளர உதவுகிறது.

Wrm.Gamerue.LNK என்னும் வைரஸ், இதுவரை கண்காணிக்கப்பட்டவைகளில் மிகவும் முக்கியமானதாகும்.

மேக் தாக்குதல்

விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பெரும்பாலான இணைய தாக்குதலுக்கு முக்கிய இலக்காக இருந்தபோதிலும், தற்போது ஆப்பிள் ஹோம்கிரவுன் ஆபரேட்டிங் சிஸ்டம் மீது இணைய தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேக் கணினிகளில் ட்ரோஜன் வைரஸ் தாக்குல் 72 சதவீதம், ஆட்வேர் வைரஸ் 18 சதவீதம் மற்றும் தேவையில்லாத புரோகிராம்கள் மற்றும் தேவையில்லாத அப்ளிகேஷன்ஸ் மூலம் 9 சதவீத வைரஸ் தாக்குதல்கள் ஏற்படுகின்றன.

மொபைல் தாக்குதல்

இந்திய சேவை வழங்குனரான ஜியோ வழங்கும் ஜியோ-4ஜி-ஆபர் மொபைலில் தேவையில்லாத புரோகிராம்கள் மூலம் அதிக அளவிலான இணைய தாக்குதல் பாதிப்பு உள்ளது.  ஜியோ மொபைல் பயனர்களுக்கு புதிய மற்றும் பெரிய இணைய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் மூலம் இணைய தாக்குதல்கள் அதிக அளவில் அதிகரித்துள்ளதால், ஆன்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இவை குறிப்பாக போட்டோ எடிட்டர், அழகுபடுத்தும் அப்ளிகேஷன்கள், மியூசிக் பிளேயர், ஈக்குவலைசர், போலி மானிட்டர் அல்லது உளவு அப்ளிகேஷன்கள் மற்றும் பொய்யான வைரஸ் பாதுகாப்பு அப்ளிகேஷன்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படுகிறது.

இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடி) தாக்குதல்

இன்டர்நெட் ஆப் திங்ஸ் சாதன உற்பத்தியாளர்கள் மற்றும் பயனர்களில் பெரும்பாலோர் சரியான பாதுகாப்பின் அவசியம் குறித்து அறியாதவர்களாகக் காணப்படுகிறார்கள், இதனால் பெரிய அளவிலான தாக்குதல்களுக்கு இது வழிவகுக்கிறது.

பெரிய வங்கிகள், அரசு நிறுவனங்கள், ஓட்டல்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இயற்கை வள பயன்பாட்டு நிறுவனங்களில் இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட் ஆப் திங்ஸ் நெட்வொர்க்குகளை அகற்ற ஏபிடி குழுக்கள் அதிக அளவில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் போனட் தாக்குதல்களை பயன்படுத்துகின்றன.

மேலும் இந்த அறிக்கையில், இன்டர்நெட் ஆப் திங்ஸ் சாதனங்களில் அதிக அளவில் பாதிக்கக்கூடியதாக ரவுட்டர்கள், அதனைத் தொடர்ந்து பிரிண்டர்கள், நெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ், ஐபி கேமிராக்கள், மீடியா பிளேயர், செட்-டாப் பாக்ஸ்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி ஆகியவை இருப்பது தெரிய வந்துள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...