மொத்தப் பக்கக்காட்சிகள்

யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் – செல்வம் உருவாக்கத்தில் 30 ஆண்டுக் கால வரலாறு ரூ. 10 லட்சம், ரூ.11.25 கோடியாக உயர்வு


யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம்   செல்வம் உருவாக்கத்தில் 30 ஆண்டுக் கால வரலாறு
ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்ட போது செய்யப்பட்ட  ரூ. 10 லட்சம் முதலீடு,  2019  ஜூலை 31 –ல் ரூ.11.25  கோடியாக உயர்வு
யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் (UTI Mastershare Unit Scheme), இந்தியாவின் முதல் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் (Equity Oriented Fund). இது  கடந்த 1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 30 ஆண்டுக் காலத்துக்கும் மேலாகச் செல்வம் உருவாக்கத்தில் (Wealth creation)  ஈடுபட்டு வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது,  யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இது அனைத்து பங்குச் சந்தை சுழற்சிகளிலும் அதாவது கரடிச் சந்தை மற்றும் காளைச் சந்தைகளில் இடைவிடாது தொடர்ந்து ஆண்டு தோறும் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை வெளியே எடுக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டட் ஈக்விட்டி (Open ended equity) ஃபண்ட் ஆகும். இதில், திரட்டப்படும் நிதி பெரும்பாலும், அதிகப் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட, அந்தந்த துறைகளில் முன்னணியில் உள்ள லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் (Large cap. companies) முதலீடு செய்யப்படுகிறது.
 நியாயமான விலையில் வளர்ச்சி (Growth at Reasonable Price - GARP) என்கிற முதலீட்டுப் பாணியில், இந்த ஃபண்டில் முதலீட்டுக்கான நிறுவனப் பங்குகள்  தேர்வு செய்யப்படுகின்றன.  இதன் அர்த்தம்,  வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள அதேநேரத்தில், தற்போது நியாயமான குறைந்த விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதாகும். அதாவது, நிறுவனங்களின் வருமானம் எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பங்குகளின் மதிப்பீடு நியாயமானதாகவும் இருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய நிலையில் முதலீட்டுக் கலவையில் (Portfolio) வாங்கி சேர்க்கக் கூடியதாக இருக்கும்.
அடிப்படையில் வலுவான மற்றும் கடன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் தொடர்ந்து வருமான வளர்ச்சி, லாபத்தில் கூடுதல் கவனம் செலுத்துதல், மூலதனம் மூலம் அதிக வருமானம் சம்பாதிக்கும் மற்றும் அதிக செயல்பாட்டுப் பண வரத்தைக் கொண்ட நிறுவனப் பங்குகள் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு யூ.டி.ஐ. மாஸ்டர்ஷேர்  யூனிட் ஸ்கீம்-ல் முதலீடு செய்யப்படுகிறது.  
 இது போன்ற நிறுவனங்கள், எதிர்கால விரிவாக்கத்துக்கான பண வரத்தைச் சுலபமாக உருவாக்குவதோடு, முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்ட அல்லது கடன் வாங்குவதற்கு ஏற்கெனவே உள்ள பங்குகளை விற்பனை செய்யத் தேவை இருக்காது. இது போன்ற நிறுவனங்களின் பங்கு விலை நீண்ட காலத்தில் சிறப்பானதாக இருக்கும்.
இந்த ஒருங்கிணைந்த ஜி.ஏ.ஆர்.பி பிளஸ் காம்பெட்டிவ் ஃப்ரான்சைஸி (GARP plus Competitive Franchise) முறையில் யூ.டி.ஐ. மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம்-க்கு நிறுவனப் பங்குகள் தேர்வு செய்யப்படுகின்றன.  
1.      நிறுவனத்தின் வளர்ச்சி திறனை நீண்ட காலத்தில் குறைத்து மதிப்பீடு செய்திருக்கும் அல்லது பங்கு விலையைக் குறைத்து பங்குச் சந்தை மதிப்பீடு செய்திருக்கும்.     

2.   தேவை சுழற்சியைச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், ஒழுங்குமுறை அமைப்புகளின் சிக்கல்களைத் தீர்த்து வைத்தல் அல்லது செலவு குறைப்பு மூலம் போட்டி நிறுவனங்களைச் சமாளித்தல், துணிச்சலான உற்பத்தித் திறன் விரிவாக்கம் போன்றவை மூலம் வளர்ச்சிக்கான உத்தியை வகுக்கும்.

3.     தொழிலைத் தொடங்க, அதிக வணிக மூலதனம்  தேவைப்படும் நிலையிலும், கவனமாக முதலீடு செய்து, அந்தத் துறை சார்ந்த நிறுவனங்களிலேயே சிறப்பாகச் செயல்படும் நிறுவனப் பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்வது.

4.     பண வரத்தை மீண்டும் முதலீடு செய்யும்,  அதிக ஆர்.ஓ.சி.இ (RoCE - Return on Capital Employed) கொண்ட நிறுவனப் பங்குகளைக் கண்டறிந்து முதலீடு செய்வது.

5.  குறிப்பிட்ட ஒரே துறைக்குள் ஒப்பீட்டு அளவில் கவர்ச்சிகரமான பங்காக இருப்பது

இதுமுதலீட்டாளர்களுக்கு தரமான நிறுவனப் பங்குகளைக் கொண்ட முதலீட்டுக் கலவை, மூலம்  நீண்ட காலத்தில் குறைவான ஏற்ற இறக்கத்தில் செல்வத்தை உருவாக்கும் வாய்ப்பை  வழங்குகிறதுயூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம்,   லார்ஜ் கேப் ஃபண்ட் (Large Cap Fund) என வகைப்படுத்தப்படுத்துள்ளது.  
இதன் முதலீட்டுக் கலவையில் அதிகப் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட பங்குகளான ஹெச்.டி.எஃப்.சி பேங்க்ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்இன்ஃபோசிஸ்டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்,  லார்சன் அண்ட் டூப்ரோ ஹெச்.டி.எஃப்.சி  லிமிடெட், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஐ.டி.சி,  ஆக்சிஸ் பேங்க், பார்தி ஏர்டெல்  போன்ற பங்குகள் இதன் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றுள்ளன. போர்ட்ஃபோலியோவில் இந்த முக்கிய 10 நிறுவனப் பங்குகளின் பங்களிப்பு கிட்டத்தட்ட 50% ஆக உள்ளது.
2019, ஜூலை 31 ஆம் தேதி நிலவரப்படி,  இந்தத் திட்டத்தில் தனியார்த் துறை வங்கிகள், கிராமப்புற வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC), தகவல் தொழில்நுட்பம், தொழில் உற்பத்தி போன்ற துறை சார்ந்த பங்குகள் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. எரிசக்தி, நிதிச் சேவைகள் மற்றும் நுகர்வோர் பொருள்கள் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் குறைவாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. 
2019, ஏப்ரல் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டில் நிர்வகிக்கப்படும் மொத்த தொகை ரூ.  6,000 கோடிக்கு மேல் உள்ளது. இந்த ஃபண்ட் 5.86  லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
2019, ஜூலை 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டில் நிர்வகிக்கப்படும் மொத்த தொகை ரூ. 5,800 கோடிக்கு மேல் உள்ளது. இந்த ஃபண்ட் 5.92  லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஃபண்ட் நீண்ட காலத்தில், மூலதன அதிகரிப்பை இலக்காகக் கொண்டதாக அல்லது வருமான அளிப்பை கொண்டதாக இருக்கிறது. இந்த ஃபண்ட், ஆரம்பம் முதல், தொடர்ந்து ஆண்டு தோறும் இடைவெளி விடாமல் டிவிடெண்ட் வழங்கி வருகிறது. யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம்   கடந்த 15 ஆண்டுக் காலத்தில் ரூ. 3,000 கோடிக்கு மேல் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட், அதன் திரட்டப்பட்ட நிதியில் 80%க்கு மேல் லார்ஜ் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்வதை நீண்ட காலமாகப் பின்பற்றி வருகிறது. இதையே எதிர்காலத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். குறைந்த ஏற்ற இறக்கத்தில் நிலையான செயல்பாட்டை இந்த ஃபண்ட் கொண்டிருக்கிறது.
யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம்ஆரம்பம் முதல்,2019 ஜூலை 31 ஆம் தேதி வரையில்  ஆண்டுக்குச் சராசரியாக (CAGR)) 15.48%  வருமானம் கொடுத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் அதன் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் ஆன எஸ்&பி பிஎஸ்இ 100 (S&P BSE 100), மொத்த வருமான குறியீடு ( Total Return Index – TRI) 13.96% வருமானம் கொடுத்துள்ளது.  
இந்த யூ.டி.ஐ  மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்ட போது செய்யப்பட்ட  ரூ. 10  லட்சம் முதலீடு,  கடந்த 32 ஆண்டுக் காலத்தில் ரூ.11.25  கோடியாக  உயர்ந்துள்ளது. அதாவது, 112 மடங்கு வருமானத்தைக் கொடுத்து உள்ளது. இந்தக் கால கட்டத்தில் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் எஸ்&பி பிஎஸ்இ 100 ரூ.7.28 கோடிதான் வருமானம் தந்திருக்கிறது. 
யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், பங்குச் சந்தை சார்ந்த போர்ட்ஃபோலியோ (core equity portfolio) உருவாக்க விரும்பும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.  கூடவே நிலையான மற்றும் தொடர்ந்த வருமான வளர்ச்சியை லார்ஜ் கேப் முதலீட்டுக் கலவை மூலம் விரும்புகிறவர்கள் மற்றும் நீண்ட காலத்தில், தொடர்ச்சியான டிவிடெண்ட், மூலதன வளர்ச்சியை விரும்புகிறவர்களுக்கு ஏற்ற ஃபண்ட் ஆக இருக்கிறது.



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...