மொத்தப் பக்கக்காட்சிகள்

பேங்க் ஆஃப் பரோடா, வீட்டுக் கடன் வட்டியை ஆர்.பி.ஐ-ன் ரெப்போ விகிதத்துடன் இணைக்கிறது.


பேங்க் ஆஃப் பரோடா, சில்லறை வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கிறது

வட்டி விகித குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க  புதிய வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது


இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கி, பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda). இது, பாரத் ரிசர்வ் வங்கியின்  ரெப்போ விகிதத்துடன் (Reserve Bank of India’s repo rate) இணைக்கப்பட்ட புதிய வகை வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வீட்டுக் கடன் மாறுபடும் வட்டி விகிதத்தை வெளிப்புற அளவுகோலான  ரெப்போ விகிதத்துடன் நேரடியாக இணைக்கும். இதன் மூலம் நிதிக் கொள்கை விகிதத்தின் (monetary policy rate.) நியாயமான மற்றும் வெளிப்படையான பரிமாற்றத்தை உறுதிப்படுத்த இந்த நேரடி இணைப்பு உறுதி அளிக்கும்.

இப்போது, இந்தப் புதிய மாறுபாட்டின் மூலம், வாடிக்கையாளர்கள், வங்கியின் நிதித் திரட்டும் செலவான எம்.சி.எல்.ஆர் (MCLR) உடன் இணைக்கப்பட்ட  வட்டி விகிதம் அல்லது வெளிப்புற அளவுகோலான ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதம், இதில் எதை வேண்டுமானலும் தேர்வு செய்யலாம்.  தற்போது, எம்.சி.எல்.ஆர் உடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் திட்டத்துக்கான வட்டி  8.45% தொடங்கி கிடைக்கிறது, இது எம்.சி.எல்.ஆர் 0.15% (15 அடிப்படை புள்ளிகள்) குறைக்கப்பட்ட பின்னர் 2019, ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய வகை வீட்டுக் கடன்கள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதமான 8.35% தொடங்கி  கிடைக்கும், இதனால் தற்போதைய எம்.சி.எல்.ஆர்  விகிதத்தை விட 0.10% (10 அடிப்படை புள்ளிகள்) குறைவாக  கூடுதல் நன்மை கிடைக்கும். இந்த நடவடிக்கை, ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதத்தை (ரெப்போ) 0.35%  (35 அடிப்படை புள்ளிகள்) குறைத்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான 5.40% ஆக குறைத்திருப்பதால் எடுக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா பற்றி (About Bank of Baroda)

1908, ஜூலை 20 இல் நிறுவப்பட்ட பேங்க் ஆஃப் பரோடா மத்திய அரசுக்கு சொந்தமான வங்கி. இது,  இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வதோதராவை (முன்னர் பரோடா என்று அழைக்கப்பட்டது) தலைமையிடமாகக் கொண்ட நிதிச் சேவை அமைப்பாகும். பேங்க் ஆஃப் பரோடா இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாகும். இந்த வங்கிக்கு 9,500-க்கு மேற்பட்ட கிளைகள், 13,400-க்கு மேற்பட்ட ஏ.டி.எம் மையங்கள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட சுய சேவை மின்-லாபிகள் (e-lobbies) உள்ளன.


இந்த வங்கி, 21 நாடுகளில் பரந்து விரிந்து 100 கிளைகள் / துணை நிறுவனங்களின் அலுவலகங்களைக் கொண்ட ஒரு சர்வதேச வங்கியாக உள்ளது. பி.ஓ.பி ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (BOB Financial Solutions Limited (முந்தைய பி.ஓ.பி கார்டுகள் லிமிடெட் - BOB Cards Ltd) பி.ஓ.பி கேபிட்டல் மார்க்கெட்ஸ் (BOB Capital Markets) மற்றும் பி.ஓ.பி அஸெட் மேனேஜ்மென்ட் கோ லிமிடெட் (BOB Asset Management Co. Ltd) உள்ளிட்ட நிறுவனங்களையும்  இந்த வங்கி கொண்டுள்ளது. ஆயுள் காப்பீடு வணிகத்திற்காக பேங்க் ஆஃப் பரோடா, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் (India First Life Insurance) நிறுவனத்துடன் கூட்டுக் கொண்டுள்ளது.

நைனிடால் வங்கியின் (Nainital Bank) பங்கு மூலதனத்தில் இந்த வங்கி 98.57% கொண்டுள்ளது.  பரோடா உத்தர் பிரதேஷ் கிராமின் பேங்க் (Baroda Uttar Pradesh Gramin Bank), பரோடா ராஜஸ்தான் கிராமின் பேங்க் (Baroda Rajasthan Gramin Bank) மற்றும் பரோடா குஜராத் கிராமின் பேங்க் (Baroda Gujarat Gramin Bank) ஆகிய மூன்று பிராந்திய கிராம வங்கிகளுக்கும், இந்த வங்கி நிதியுதவி அளித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு பார்வையிடவும் www.bankofbaroda.com   

பேஸ்புக் https://www.facebook.com/bankofbaroda/

ட்வீட்டர் https://twitter.com/bankofbaroda

இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/officialbankofbaroda/


லிங்க்ட்இன்  https://www.linkedin.com/company/bankofbaroda/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...