Banning of Unregulated Deposit Schemes Ordinance, 2019
முறைப்படுத்தப்படாத
டெபாசிட்டுகள் தடைச்
சட்டம்
2019
முக்கிய அம்சங்கள்
·
‘டெபாசிட்டுகள் என்றால், கடன்
அல்லது
வேறு
எந்த
வடிவத்திலோ குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு
பணமாகவோ அல்லது
சொத்துகளாகவோ வேறு
பொருளாகவோ திருப்பித் தரப்படும் என்ற
வாக்குறுதியுடன்
முன்கூட்டியே பெறப்படும் பணம்’
என்று
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
·
இந்த
வரையறையால், எந்த
வடிவத்தில் திட்டத்தை அறிவித்தாலும் அந்தத்
திட்டம் இந்தச்
சட்டத்தின்கீழ் வந்துவிடும். எனவே,
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு டெபாசிட்டுகளைப் பெறும்
அனைவரும், இந்தச்
சட்டத்தின்கீழ் வந்துவிடுவார்கள்.
·
தங்க நகைச்
சேமிப்புத் திட்டங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும்
டெபாசிட்டுகளை, நகைக்கான முன்பணம் டெபாசிட் கணக்கில் வரும்.
·
இந்தச் சட்டத்தின்படி, மோசடிப் புகார்
உறுதியானதும், 180 நாள்களுக்குள் மோசடி
நிறுவனத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்து,
அதை
விற்று
வரும்
தொகையை
வாடிக்கையாளர் களுக்குத் திருப்பி அளிக்க
வேண்டும்.
·
முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத நிதி
நிறுவனங்களின் முழுத்
தகவல்களும் திரட்டுவதற்கு என தனி ஓர்
அமைப்பு ஏற்படுத்தப்படும்.
·
அந்த
அமைப்பால் திரட்டப்பட்ட தகவல்களை ஆய்வுசெய்து, அவற்றில் சந்தேகத்துக்குரிய நிறுவனங்களின் தகவல்கள் மேல்நிலையில் இருக்கும் சிறப்பு அதிகார
அமைப்புக்குத் தெரியப்படுத்தப்படும். அதன்
சிறப்பு அதிகாரி, மாநிலச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவராக இருப்பார்.
·
புகார்களில் குறிப்பிட்டுள்ளபடி மோசடி
நடந்திருந்தால், இந்த
வழக்குகளை விசாரிப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு
தொடுக்கப்பட்டு, விசாரணை நடக்கும். இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும்.
·
புதிய
சட்டத்தின் படி,
, ஆர்.பி.ஐ., செபி
உள்ளிட்ட ஒன்பது
கண்காணிப்பு அமைப்புகளுக்கு பொதுவாக ஒரு
ஆன்லைன் போர்ட்டல் கொண்டுவரப்படும். எந்த
நிதி
நிறுவனம் தொடங்கப்பட்டாலும், இந்த
போர்ட்டலில் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம்.
·
அப்படிப் பதிவுசெய்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டால் அதுகுறித்த தகவல்,
அனைத்து கண்காணிப்பு அமைப்புகளுக்கும் செல்லும். இதன்
மூலம்,
மோசடி
குற்றச் சாட்டுக்குள்ளானவர், மீண்டும் அதேபோன்ற மோசடியில் ஈடுபடுவது தடுக்கப்படும்.
·
இந்தச்
சட்டத்தின்படி, முறைப்படுத்தப் படாத
நிதி
நிறுவனங்கள் இயங்குவதும், டெபாசிட்டுகள் பெறுவதும் தடை
செய்யப்படும்.
·
அத்தகைய நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு 2 முதல்
7 ஆண்டுகள் வரை
சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும்
ரூ. 3
முதல்
ரூ. 10 லட்சம் ரூபாய் வரை
அபராதம் விதிக்கப்படும்.
·
மேலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட டெபாசிட்டுகளைப் போல்
இரு
மடங்கு
தொகை
அபராதமாக விதிக்கப்படும்.
·
மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களுக்கு 5 முதல்
10 ஆண்டுகள் வரை
தண்டனை
விதிக்கப்படும்.
·
எந்த
ஒரு
தனிநபரும், தெரிந்தே மோசடியில் ஈடுபடுவது, வாடிக்கையாளர்களை ஏமாற்றி ஏதாவது
நிதி
மோசடித் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ப்பது போன்ற
தவறுகளைச் செய்தால், அவர்களும் இந்தச்
சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர்.
·
மோசடி
நிதி
நிறுவனங்களின் விளம்பரங்களை பத்திரிகைகள் வெளியிட்டால், அதே
பத்திரிகை, அதே
அளவு
விளம்பரத்தின் மூலம்,
`அது
மோசடி
நிறுவனம்’ என்ற
செய்தியை விளம்பரமாக வெளியிட வேண்டும்.