மொத்தப் பக்கக்காட்சிகள்

சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க்-ன் நிகர லாபம், 2019-20 முதல் காலாண்டில் 48.6% அதிகரித்து ரூ. 41 கோடியாக உயர்வு


சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க்-ன் நிகர லாபம், 2019-20 முதல் காலாண்டில் 48.6% அதிகரித்து ரூ.  41 கோடியாக உயர்வு

புதுடெல்லி ஆகஸ்ட், 8, 2019:  சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க் லிமிடெட்  (Satin Creditcare Network Limited – SCNL - BSE: 539404; NSE: SATIN],  முன்னணி நுண்கடன் (microfinance)  நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் முடிவடைந்த 2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு (Q1FY20) நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த முதல் காலாண்டில் இதன் ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய லாபம் (PAT - நிகர லாபம்) 48.6% அதிகரித்து ரூ. 41 கோடியாக (2018-19 முதல் காலாண்டில் ரூ.28  கோடி)  உயர்ந்துள்ளது.

இதே கால கட்டத்தில், இந்த நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் (PBT) 55.7% அதிகரித்து ரூ. 64  கோடியாக 2018-19 முதல் காலாண்டில் ரூ. 41  கோடி) உயர்ந்துள்ளது. இதன் மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio (CRAR) சாதனை அளவாக வலிமையாக 30.5%  ஆக உள்ளது. இந்த நிதி நிலை முடிவுகள் இன்று புது டெல்லியில் நடந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிலை செயல்பாடு - ஒருங்கிணைந்த அடிப்படையில்  : (Financial Performance – On consolidated basis)

ரூ. கோடியில்  2019-20
முதல் காலாண்டு 2018-19 முதல் காலாண்டு  உயர்வு %
மொத்த கடன் போர்ட்ஃபோலியோ (GLP) 7,139 6,026 18.5%
நிகர வட்டி வருமானம்  201 174 15.6%
வரிக்கு முந்தைய வருமானம்  (PBT) 64 41 55.7%
வரிக்கு பிந்தைய வருமானம் (PAT) 41 28 48.6%
சொத்து மூலமான வருமானம் (RoA) 2.4% 1.7% 45.3%
மூலதனம் மூலமான வருமானம்  (RoE) 13.4% 11.7% 14.2%

கிளைகள், வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு 

 விவரங்கள் 2019-20
முதல் காலாண்டு 2018-19 முதல் காலாண்டு  உயர்வு %
கிளைகள் எண்ணிக்கை  1,228 1,017 20.7%
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 36,04,373 30,02,567 20.0%
செயல்படும் மாவட்டங்கள் எண்ணிக்கை 368 325 13.2%

வணிகச் செயல்பாடு (Business Performance):  நிறுவனரால் (Promoter) வாரான்ட்களை மாற்றுவது மூலம் ரூ. 60 கோடி பங்கு மூலதனம் செலுத்தப்பட்டது மற்றும்  விருப்ப முன்னுரிமை பங்குகள் (OCCRPS) மூலம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ. 335 வீதம் இண்டஸ் இந்த் வங்கியால் ரூ. 45 கோடி நிறுவனத்தில் செலுத்தப்பட்டது.
· விநியோக நேரத்தில் (time of disbursement) 57% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டது.
· இண்டஸ் இந்த் வங்கி உடனான வணிகம் ரூ. 647 கோடியை எட்டியுள்ளது
· சமூக தரக்குறியீடு மேம்பாட்டு- sA -ஐ மைக்ரோஃபினான்ஸா (Microfinanza) நிறுவனத்திடமிருந்தும், C1 நடத்தை விதிமுறைகளுக்கான அங்கீகாரத்தை (COCA) இக்ரா (ICRA)  நிறுவனத்திடமிருந்தும் பெற்றுள்ளது
· நியாயமான நடைமுறைகள் குறியீடு, கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் அடிப்படையில் நுண்கடன் நிறுவனங்களுக்கு இடையே நுண் கடன் நிறுவனங்கள் நெட்வொர்க் (Microfinance Institutions Network – MFIN) அமைப்பால் நடத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை குறியீடு மதிப்பீட்டில் அனைத்து நுண் கடன் நிறுவனங்களில் ‘முதல் இடம்’ பெற்றுள்ளது
· லோன் டோஸ்ட் (Loan Dost) என்கிற செயலி (app) அடிப்படையிலான டிஜிட்டல் கடன் வழங்கும் முறையில் இப்போது சம்பளம் வாங்குபவர்களோடு சுய தொழில் செய்பவர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.
· இந்தியா  முழுக்க  368 மாவட்டங்களில் 36 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை அளித்து வருகிறது.
· காலாண்டில் ரூ. 1,428 கோடி நிதி திரட்டப்பட்டது மற்றும் ரூ. 1,428 கோடிக்கு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
· தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை மேம்பாட்டுகளுடன் போர்ட்ஃபோலியோ தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது
· துணை நிறுவனங்கள் :
· தாராஷ்னா ஃபைனான்ஷியல் சர்வீசஸ்  (Taraashna Financial Services) நிறுவனம், வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனமாக (NBFC) மாற்றப்பட்டுள்ளது.
· சாடின் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்  (Satin Housing Finance Limited ) மூலம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 100 கோடியை தாண்டியிருக்கிறது.
· சாடின் ஃபின்சர்வ் லிமிடெட்  (Satin Finserv Limited) மூலம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.30  கோடியை தாண்டியிருக்கிறது
நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை செயல்பாடுகள் குறித்து நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஹெச் பி சிங் Mr. H P Singh, Chairman and Managing Director) கூறும் போது, “ வங்கிசாரா நிதிச் சேவை துறை, எதிர்கொண்டு வரும் சவாலான சூழ்நிலைய மீறி நாங்கள் வலுவான வளர்ச்சியை வழங்கினோம். நிகர லாபம் 48.6% அதிகரித்து ரூ.41 கோடியாக அதிகரித்துள்ள சாதனையை நிகழ்த்தியிருக்கிறோம்.

இந்த நிறுவனம், தனது கிராமப்புற எல்லைகளை மேம்படுத்துவதன் மூலம்  அனைத்து கடன் தீர்வுகளையும் வழங்கும் நிறுவனமாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பாக சாடின், தனித்தனி துணை நிறுவனங்களான வீட்டு வசதி கடன் வழங்குவதில் கவனம் செலுத்தும் சாடின் ஹவுசிங் ஃபைனான்ஸ் (Satin Housing Finance) மற்றும் வணிகக் கடன் வழங்க தாராஷ்னா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (Taraashna Financial Services) மற்றும் எம்.எஸ்.எம்.இ பிரிவில் கவனம் செலுத்த  சாடின் ஃபின்சர்வ் (Satin Finserv) ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்,  உள்ள நகர் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து வலுவாக செயல்பட்டு வருகிறோம். இதை அடைய, நாங்கள் புவியியல் விரிவாக்கம், போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல், சொத்து தரம் மற்றும் நிதி நிறுவனங்களுடன்  உத்தி  ஆகிய  நான்கு முக்கிய விஷயங்களில் எங்கள் வணிக உத்தியை உருவாக்கியுள்ளோம்.”

அவர் மேலும் கூறும் போது “ வருவாயை அதிகரிக்க பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில், தொழில்நுட்பத்தை நோக்கி குறிப்பிடத்தக்க முதலீட்டை சாடின் செய்துள்ளது.

தொழில்நுட்பத்துக்குள் நுழைந்த முதல் நுண் கடன் நிறுவனமாக அதிநவீன உள் டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. நுண் கடன் பிரிவில் நகரம் சாரா வணிகத்தில் நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.”

சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க் லிமிடெட் பற்றி (About Satin Creditcare Network Limited)


சாடின்  கிரெடிட்கேர் நெட்ஒர்க் லிமிடெட்  ((SCNL or Satin),  இந்தியாவின் முன்னணி நுண்கடன் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.. இது 22 மாநிலங்களில் சுமார் 80,768 கிராமங்களில் இயங்கி வருகிறது.  இந்த நிறுவனத்தின் குறிக்கோள், குடும்பங்களின் அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஒரே தீர்வாக விளங்குவதாக இருக்கிறது.

இந்த நிறுவனம், நுண் கடன் அல்லா பிரிவில் நிதித் திட்டங்களை (குறிப்பாக எம்.எஸ்.எம்.இ கடன்கள்) அளித்து வருகிறது. மேலும், எஸ்.சி.என்.எல்-ன் 100% துணை நிறுவனமான  தாராஷ்னா சர்வீசஸ் லிமிடெட் (Taraashna Services Limited)  மூலம் வணிகக் கடன் அளித்து வருகிறது. 2017  ஏப்ரல் மாதத்தில் எஸ்.சி.என்.எல், முழுமையான துணை நிறுவனமாக வீட்டு வசதிக் கடன் வழங்கும் சாடின் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் அல்லது எஸ்.ஹெச்.எஃப்.எல் (Satin Housing Finance Limited or SHFL) உருவாக்கியது. இதன்  மூலம் வாங்கக் கூடிய விலையிலான குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு (affordable housing segment) வீட்டுக் கடன் வழங்கி வருகிறது.

2019 ஜனவரி மாதத்தில் எம்.எஸ்.எம்.இ (MSME) வணிகத்தை தொடங்க  தனியை வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனத்துக்கான ( NBFC)   உரிமத்தை சாடின் ஃபின்சர்வ் லிமிடெட் என்கிற பெயரில் பெற்றது. இளைஞர்களான மில்லினியன்களை (millennials) இலக்காக வைத்து டிஜிட்டல் வழி கடன் செயலி லோன் டோஸ்ட்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

2019 ஜூன் நிலவரப்படி எஸ்.சி.என்.எல், 1,228 கிளைகளை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் 22 மாநிலங்களில் இயங்கி வருகின்றன. மொத்தம் 11,085 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். மொத்தம் 36 லட்சம் பேருக்கு சேவை அளித்து வருகிறது. எஸ்.சி.என்.எல், உத்தரப் பிரதேசம், பீகார், வடகிழக்கு இந்தியா, மத்திய பிரதேசம் போன்றவற்றில் மிகவும் வலிமையாக செயல்பட்டு வருகிறது.

Disclaimer
This document may contain certain forward looking statements within the meaning of applicable securities law and regulations. These statements include descriptions regarding the intent, belief or current expectations of the Company or its directors and officers with respect to the results of operations and financial condition of the Company. Such forward-looking statements are not guarantees of future performance and involve risks and uncertainties, and actual results may differ from those in such forward-looking statements as a result of various factors and assumptions which the Company believes to be reasonable in light of its operating experience in recent years. Many factors could cause the actual results, performances, or achievements of the Company to be materially different from any future results, performances, or achievements. Significant factors that could make a difference to the Company’s operations include domestic and international economic conditions, changes in government regulations, tax regime and other statutes. The Company does not undertake to revise any forward-looking statement that may be made from time to time by or on behalf of the Company

Satin Creditcare Network Ltd.
CIN: L65991DL1990PLC041796
Corporate Office: 1st& 3rd Floor, Plot No. 97, Sector 44, Gurugram – 122 003
Landline No: +91 124 471 5400
Registered Office: 5th Floor, KundanBhawan, Azadpur Commercial Complex, Azadpur, Delhi-110 033
E-mail ID: communications@satincreditcare.com
Website:www.satincreditcare.com


For further information, please contact:


Ms. Asleen Kaur
Satin Creditcare Network Ltd
Mob: 9711306384
asleen.kaur@satincreditcare.com Mr. Harsh Trivedi
Adfactors PR
(M): 9987218372
harsh.trivedi@adfactorspr.com




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...