மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் சட்டம் – 2019:புதிய அதிரடி மாற்றங்கள் - சேர்மன் கே.ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்


TNRERA தமிழ்நாடு ரியல் எஸ்டேட் சட்டம் – 2019:

சென்னை ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில்  தமிழ்நாடு ரியல் எஸ்டேட் சட்டம் – 2019  குறித்த விழிப்பு உணர்வு கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) சேர்மன் கே.ஞானதேசிகன் ..எஸ் (ஓய்வு) பேசினார்.
 
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சேர்மன் 
கே.ஞானதேசிகன் 
காலத் தாமதத்துக்கு தீர்வு..!

ரியல் எஸ்டேட்டை பொறுத்த வரையில் இந்தியா முழுக்க பிராஜெட் கால தாமதம் பெரும் பிரச்னையாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவிகித வீடுகள் கால தாமதமாகதான் ஒப்படைக்கப்படுகின்றன.

இந்தக் கால தாமதம் என்பது மூன்றாண்டு, நான்காண்டு என  சாதாரணமாக இருக்கிறது. இப்படி கால தாமதம் ஏற்படுவதால் அதனை வாங்கியவர்கள் / முதலீடு செய்தவர்கள் ஒரு புறம் வீட்டு வாடகை கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம் குடிபோகாத  நிலையில் வீட்டுக்கு  மாதத் தவணை (இ.எம்.ஐ) கட்டிக்கொண்டிருப்பார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வாக  ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டு முதல்  தமிழ்நாடு ரியல் எஸ்டேட் சட்டம் – 2019 அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

 முக்கிய நோக்கங்களாக ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்துவது, வீடு வாங்குபவர்களை பாதுகாப்பது ஆகும்.

 ஒரே இடத்தில் எட்டு (8)  அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மேற்படும் கட்டுமானம் அல்லது 500 சதுர மீட்டருக்கு மேற்படும் கட்டுமானங்கள் கட்டாயம் ரெராவில் பதிவு செய்ய வேண்டும்.

 பில்டர் என்பர் பெரும் பண வசதி படைத்த பெரிய மனிதராக இருப்பார். அதேநேரத்தில், வீடு வாங்குபவர்கள் பெரும்பாலும் நடுத்தர வருமான பிரிவினராக குறிப்பாக முதல் முறை வீடு வாங்குபவர்களாக இருப்பார்கள்.

அவர்களை பில்டர்கள் ஏமாற்றாமல் இருக்க இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம் இருக்கிறது.

இந்த ரெரா அமைப்பில் அனைத்து ரியல் எஸ்டேட் பிராஜெக்ட்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு ரெராவின் இணைய தளத்தில்  (www.tnrera.in/index.php) புதிய பிராஜெக்ட்களின் அப்ரூவல் பிளான்கள், பில்டர்கள் பற்றிய விவரங்கள், நிறைவு சான்றிதழ் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.
 கடையாக யார் பெயரில் இருக்கிறதோ அவர் பெயரில் பட்டா மற்றும் வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல்  சொத்துகளை பத்திரப் பதிவு செய்யக் கூடாது என சார்பு பதிவாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். 

இப்போது அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்களிலும் கார்பெட் ஏரியா அடிப்படையில்தான் அடுக்குமாடி குடியிருப்புகளின் அளவுகளை குறிப்பிட வேண்டும் என கொண்டு வந்திருக்கிறோம்.

 திறந்த வெளி கார் நிறுத்துமிடம், பொதுப் பயன்பாட்டு இடங்கள், ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் பிரிக்கப்படாத மனை (யூ.டி.எஸ்) ஆகியவற்றை பில்டர்கள் தெளிவாக குறிப்பிட்டு அந்த விவரங்கள் ரெரா இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பதிவு சான்றிழ் வழங்கப்படுகிறது.

வீடுகள் கால தாமதமாக ஒப்படைக்கும்பட்சத்தில் பில்டர்கள்வீட்டை வாங்கியவர்கள் செலுத்திய தொகைக்கு ஆண்டுக்கு 10.7% வட்டி வழங்க வேண்டும்வீட்டை வாங்குபவர்கள் பணத்தை தாமதமாக கொடுத்தால் அவர்களும் இதே அளவு வட்டி கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 1,000 பிராஜெக்ட்கள் மூலம் சுமார் 70,000 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் ரெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரெரா சட்டத்தின் கீழ்  ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது

வீடு வாங்கும் வாடிக்கையாளர்கள் சார்பில் வக்கீல்கள், ஆடிட்டர்கள், கம்பெனி செகரட்டரிகள் ஆஜராகி வாதிடலாம்

அனைத்து ரியல் எஸ்டேட் விளம்பரங்களிலும் ரெரா பதிவு குறிப்பிடுவது கட்டாயம். பதிவு எண் இல்லாமல் செய்யப்படும் விளம்பரங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

 பதிவு செய்யாத பிராஜெட்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். அந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்க கூடாது என சார்பு பதிவாளர்களுக்கு தகவல் அனுப்பி வருகிறோம்.

வீடு வாங்குபவர்களில் 2/3 பேரின் அனுமதி இல்லாமல் பில்டர்கள் கட்டுமானத்தின் வடிவமைப்பை மாற்ற முடியாது.''



இந்தக் கூட்டத்துக்கு முதலீட்டு ஆலோசகரும் பங்குச் சந்தை நிபுணருமான திரு.  .நாகப்பன் தலைமை தாங்கினார்.




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...