எம்.எஸ்.எம்.இ கடன்கள்வழங்குவது சிறப்பாக தொடர்ந்துவளர்ச்சி கண்டுவருகிறது
மாநிலங்கள் வாரியாக எம்.எஸ்.எம்.இ வாய்ப்பு மற்றும் இடர்ப்பாடு ஆய்வு சிறப்பம்சங்கள்:
· இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ கடன் வழங்குவதில் குஜராத்மாநிலம் சிறந்து விளங்குகிறது
· சந்தை அளவில் மகாராஷ்டிரா மாநிலம் மிக உயர்ந்தஇடத்தில் உள்ளது
· சந்தை வளர்ச்சியில் ஆந்திரப் பிரதேசம் மிகஉயர்ந்த இடத்தில் உள்ளது
· குறைந்த வாரா கடன் விகிதத்தைபராமரிப்பதில் குஜராத் முதலிடம் வகிக்கிறது
· எம்.எஸ்.எம்.இ கடன் தரத்தில் டெல்லி மிக உயர்ந்த இடத்தில் உள்ளது
டிரான்ஸ்யூனியன் சிபில் - சிட்பி எம்.எஸ்.எம்.இ பல்ஸ் அறிக்கை (TransUnion CIBIL- SIDBI MSME Pulse Report) யின் ஆறாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2019 மார்ச் உடன் முடிந்த காலாண்டில் வழங்கப்பட்ட கடன், 12.4% வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் மொத்தக் கடன் 2015 மார்ச் முதல் 2019 மார்ச் வரையிலான ஐந்தாண்டு கால கட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 13.3% அதிகரித்து ரூ. 253 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
மொத்தக் கடனில் அரசாங்க கடன்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மற்றும் தனிநபர் கடன்கள் உள்ளன.
தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தக்கடன்கள் (நுகர்வோர் கடன்கள், தனிநபர்களுக்கு வணிக கடன்கள் மற்றும் பிற கடன்கள்), கடந்த நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக வளர்ச்சி 22% வளர்ச்சி கண்டுள்ளது. வணிகநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் (எம்.எஸ்.எம்.இ மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்) ஆண்டுக்கு சராசரியாக 13.4% மற்றும் அரசாங்க கடன்கள் ஆண்டுக்கு சராசரியாக10.6% வளர்ச்சி கண்டுள்ளன. ஒப்பீட்டளவில் தனிநபர்களுக்கு அதிக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.குறிப்பிடத்தக்க அளவுக்கு வாராக் கடன்கள் (NPAs- non-performing asset) குறைந்துள்ளதால் இந்த வளர்ச்சிப் போக்கு ஏற்பட்டுள்ளது.
வணிக கடனில் ஒட்டு மொத்த வாராக் கடன்கள் மார்ச்2919 இல் 16.0% ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 17.2% ஆக அதிகமாக இருந்தது. நடுத்தர மற்றும் பெரிய பிரிவுகளில் மார்ச் 2018 முதல் ஜூன் 2018 வரையிலான காலக ட்டத்தில் வாராக் கடன்கள் அளவு உச்சத்தை எட்டியது. வணிகக் கடன் துறை மீட்சிக்காண தொடங்கிய பிறகு 2018 ஜூன் காலாண்டுக்கு பிறகு படிப்படியாக வாராக் கடன்கள் குறையத் தொடங்கின.
எம்.எஸ்.எம்.இ பல்ஸ் அறிக்கை குறித்து சிட்பி-ன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. முஹம்மத் முஸ்தஃபா (Mr.Mohammad Mustafa, Chairman and Managing Director, SIDBI) கூறும் போது“வணிக கடன்கள் வழங்குவது தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்ததும், வாராக் கடன்களைக் குறைத்ததும் எம்.எஸ்.எம்.இ துறை வளர்ச்சியின் மிகவும் நம்பிக்கைக்குரிய அடையாளமாக உள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வணிகத்திற்காக தனிநபர்களுக்கு கடன்கள் வழங்கும் விகிதத்தை அதிகரிப்பதற்கான போக்கு இன்னும் சுவாரஸ்யமானது, இது தனிநபர்களுக்கு ஆதரவாக கடன்கள் வழங்குவதில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வியாபாரம் செய்வதை எளிதாக்குகின்றன (ease of doing business). குறிப்பாக, எம்.எஸ்.எம்.இக்கள் வணிக வளர்ச்சியை அதிகரிப்பதற்கான கடன்களை விரைவாகவும் எளிதாகவும் பெற முடியும்.”
எம்.எஸ்.எம்.இ பல்ஸ்-ன் இந்தப் பதிப்பானது எம்.எஸ்.எம்.இ கடன்கள் வழங்கல் குறித்த மாநில வாரியான செயல்திறன் பகுப்பாய்வு குறித்த ஆய்வை உள்ளடக்கியது.
எம்.எஸ்.எம்.இ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான மாநிலங்களின் திறனை தர வரிசைப்படுத்தும் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட “கடன் வாய்ப்பு” மற்றும் “இடர்ப்பாடு குறியீட்டு” (“Credit Opportunity” and “Risk Index”)_அளவுகள் அடிப்படையில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 50 கோடி வரை என எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மொத்தம் வழங்கப்பட்ட கடன்கள், கணக்குகள் மற்றும் நுகர்வோர் அடிப்படையில் எம்.எஸ்.எம்.இ பல்ஸ் தரவரிசை மாதிரி (MSME Pulse ranking model) சந்தை அளவின் அடிப்படையில் பார்க்கப்பட்டது.
.
நிதியாண்டு 2014-15 முதல் நிதியாண்டு 2018-19 வரையிலான காலத்திற்கான சந்தை வளர்ச்சியை அடையாளம் காண ஆண்டுக்கு ஆண்டு (YOY) அதிகரிக்கும் மாற்றங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. இடர்ப்பாடு குறியீட்டின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர் இருக்கும் பகுதி, தரம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ கடன் வழங்குவதற்கான செயல்திறன் மற்றும் வளர்ச்சி திறன் ஆகியவற்றின் அடிப்படையில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என ஆய்வு முடிவுகள் காட்டுகிறது. அடுத்த இடங்களில் ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன. எம்.எஸ்.எம்.இ கார்ப்பரேட் கடன்களில் அதிக திறன் கொண்ட பிற மாநிலங்களாக .மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை உள்ளன.
மாநிலங்கள் வாரியாக கடன் வளர்ச்சி குறித்து டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. சதீஷ் பிள்ளை (Managing Director and CEO of TransUnion CIBIL – Mr. Satish Pillai) கூறும்போது, “கடன் வாய்ப்பு, எம்.எஸ்.எம்.இ கடன்கள்வளர்ச்சியின் சாத்தியம் மற்றும் இடர்ப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாநில அளவிலான செயல்திறன்
கண்டறியப்பட்டன. தொடந்து கடந்த நான்கு ஆண்டுகளாக (2015-16 முதல் 2018-19 வரை (குஜராத் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், சந்தை அளவில் மகாராஷ்டிரா மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது, கூடவே அதன் வாராக் கடன் களும் கடன் இடர்ப்பாட்டின் அதிகரிப்பை சுட்டிக்காட்டுகின்றன. எம்.எஸ்.எம்.இ கடன்களின் கூர்ந்த கண்காணிப்புமற்றும் சரியான நேரத்தில் இடர்ப்பாட்டை அடையாளம் காண்பது மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்றவை ஆரோக்கியமான எம்.எஸ்.எம்.இ கடன் வளர்ச்சியையும் நிலையான பொருளாதார வளர்ச்சியையும் அடைவதற்கு முக்கியமானவையாகும்.”
எம்எஸ்எம்இ பல்ஸ் ஆறாம் பதிப்பு முக்கிய அம்சங்கள்(MSME Pulse Sixth Edition Highlights)
· இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ. 116.7 லட்சம் கோடிகள் (Total credit exposure in India stood at Rs. 116.7 lakh crores): 2019 மார்ச் நிலவரப்படி, இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ. 116.7 லட்சம் கோடிகளாக உள்ளன. இதில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் 55% ஆக அதாவது ரூ. 64.1 லட்சம் கோடிகளாக உள்ளன. மீதி ரூ. 52.6 லட்சம் கோடி கடன்கள் தனிநபர்களுக்கு (நுகர்வோர் கடன்கள் ,வணிகக் கடன்கள், சில்லறை, விவசாயம் மற்றும் முன்னுரிமை துறை கடன்கள்) வழங்கப்பட்டவையாக உள்ளன.
· கடன் வளர்ச்சி தொடர்கிறது (Credit growth resumes in earnest): 2019 மார்ச் காலாண்டில், வர்த்தக கடன் வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 12.4% அதிகரித்துள்ளது. பெரிய நிறுவனங்கள் (ரூ.100 கோடிக்கு மேல் கடன்) குறிப்பிட்டத்தக்க அளவு அதிகமான வளர்ச்சியை பெற்றிருந்தன. இந்தப் பிரிவு, 11.8% வளர்ச்சி கண்டு, தொடர்ந்து அதிக வளர்ச்சியை பெறும் என்கிற அறிகுறியை வெளிக்காட்டியுள்ளது. நுண் நிறுவனங்கள் (ரூ. 1 கோடிக்கு குறைவான கடன்கள்) மற்றும் எஸ்எம்இ நிறுவனங்கள் (ரூ. 1 கோடி முதல் ரூ. 25 கோடிகள்) பிரிவுகளுக்கு ரூ. 15.8 லட்சம் கோடி கடன்கள் (மொத்தம் வழங்கப்பட்ட கடன்களின் இப்பிரிவுகளின் பங்களிப்பு 24.9%) வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகள் முறையை ஆண்டு கணக்கில் 19.8% மற்றும் 15.6% வளர்ச்சிக் கண்டுள்ளன. நடுத்தர நிறுவனங்களில் (ரூ. 25 கோடிகள் முதல் ரூ. 100 கோடிகள்), 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரை 5.5% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
· எம்.எஸ்.எம்.இ பிரிவில் கடன் வாய்ப்பு மற்றும் இடர்ப்பாட்டு குறியீட்டில் குஜராத் முதலிடம் (Gujarat tops credit opportunity and risk index in MSME Segment) :
இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ கடன் வழங்குவதற்கான செயல்திறன் மற்றும் வளர்ச்சி திறன் ஆகியவற்றின் அடிப்படையில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதற்கு அடுத்த இடங்களில் ஆந்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகியவை உள்ளன. எம்.எஸ்.எம்.இ கார்ப்பரேட் கடன்களில் அதிக திறன் கொண்ட பிற மாநிலங்களாக .மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை உள்ளன. 2018-19 ஆம் நிதியாண்டில் சந்தை வளர்ச்சியில் ஆந்திரா மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. சந்தை வளர்ச்சி மற்றும் இதர அம்சங்கள் 2016-17 முதல் 2018-19 வரையிலான காலத்தில் தரவரிசை கணிசமாக மேம்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ தர வரிசையில் ஹரியானா மற்றும் கர்நாடகா சம மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. ஆனால், ஹரியானா நுகர்வோர் செயல்பாடுகள் மற்றும்மதிப்பெண் தரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சந்தை அளவு மற்றும் சந்தை வளர்ச்சியில் சிறப்பாக நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சந்தை வளர்ச்சியில் ஹரியானாவின்தர வரிசைகணிசமாக முன்னேறியுள்ளது. சிறந்த சிபில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் தரவரிசை மூலம் அளவிடப்படும் எம்.எஸ்.எம்.இ.-க்களில் குறைந்த இடர்பாட்டில் டெல்லி மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.
இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ கடன் வழங்குவதற்கான செயல்திறன் மற்றும் வளர்ச்சி திறன் ஆகியவற்றின் அடிப்படையில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதற்கு அடுத்த இடங்களில் ஆந்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகியவை உள்ளன. எம்.எஸ்.எம்.இ கார்ப்பரேட் கடன்களில் அதிக திறன் கொண்ட பிற மாநிலங்களாக .மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை உள்ளன. 2018-19 ஆம் நிதியாண்டில் சந்தை வளர்ச்சியில் ஆந்திரா மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. சந்தை வளர்ச்சி மற்றும் இதர அம்சங்கள் 2016-17 முதல் 2018-19 வரையிலான காலத்தில் தரவரிசை கணிசமாக மேம்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ தர வரிசையில் ஹரியானா மற்றும் கர்நாடகா சம மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. ஆனால், ஹரியானா நுகர்வோர் செயல்பாடுகள் மற்றும்மதிப்பெண் தரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சந்தை அளவு மற்றும் சந்தை வளர்ச்சியில் சிறப்பாக நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சந்தை வளர்ச்சியில் ஹரியானாவின்தர வரிசைகணிசமாக முன்னேறியுள்ளது. சிறந்த சிபில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் தரவரிசை மூலம் அளவிடப்படும் எம்.எஸ்.எம்.இ.-க்களில் குறைந்த இடர்பாட்டில் டெல்லி மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.
· வாராக் கடன்களின் அதிகரிப்பால் மகாராஷ்டிரா 6 வது இடத்திற்கு இறங்கியது ( Maharashtra slips to Rank 6 due to increase in NPAs):
மகாராஷ்டிராமாநிலம், சந்தை அளவில்மிக உயர்ந்ததரவரிசையில் உள்ளது, மேலும் கடன்நிலுவை, மொத்தகணக்குகள் மற்றும்கடன் வாங்குபவர்களின்எண்ணிக்கையில் முதலிடம்வகிக்கிறது. வளர்ச்சியில்சிறிதளவு குறைவுமற்றும் வாராக் கடன்களின் அதிகரிப்புகாரணமாக, தரவரிசையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இகார்ப்பரேட் கடன் பிரிவில்வாராக் கடன்கள் அதிகரிப்புகாரணமாக இது 2018-19 ஆம் நிதியாண்டில்6 வது இடத்திற்குசரிந்தது.
எம்.எஸ்.எம்.இ கடன் வழங்கும் வாய்ப்பு மற்றும் இடர்ப்பாட்டு தூண்களில் சிறந்த மாநிலங்கள் (Top States in MSME lending opportunity and risk pillars)
|
* எம்.எஸ்.எம்.இ கடன்கள் வழங்குவதில் குறைந்த வாராக் கடன்களை பராமரிப்பதில்குஜராத் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது
· தனிநபர்களுக்கு கடன் வழங்குவதில் தொடர்ச்சியான வளர்ச்சி (Continued growth in individual lending):
இந்தியாவின் மொத்தக் கடன்கள் 2015 மார்ச் முதல் 2019 மார்ச் வரையிலான ஐந்தாண்டு கால கட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக (CAGR) 13.3% அதிகரித்து ரூ. 253 டிரில்லியன் (INR 253 trillion) என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளது. மொத்தக் கடன்களில் அரசாங்க கடன்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மற்றும் தனிநபர்கள் பெற்றகடன்கள் ஆகியவைஉள்ளன. தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தக்கடன்கள் ((நுகர்வோர் கடன்கள், தனிநபர்களுக்கு வணிக கடன்கள் மற்றும் பிற கடன்கள்), கடந்த நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக வளர்ச்சி 22% வளர்ச்சி கண்டிருக்கிறது. வணிகநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் (எம்.எஸ்.எம்.இ மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்) ஆண்டுக்கு சராசரியாக 13.4% வளர்ச்சி கண்டுள்ளன. இதே கால கட்டத்தில் அரசாங்க கடன்கள் ஆண்டுக்கு சராசரியாக 10.6% வளர்ச்சி கண்டுள்ளன. ஒப்பீட்டளவில்தனிநபர்களுக்கு அதிக கடன்கள் வழங்கப்பட்டு, அது முன்னணியில் உள்ளது. குறிப்பிடத்தக்க அளவுக்கு வாராக் கடன்கள் (NPAs- non-performing asset) குறைந்துள்ளதால் இந்த கடன் வளர்ச்சிப் போக்கு ஏற்பட்டுள்ளது
பீகார், ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் குறைந்த அளவு எம்.எஸ்.எம்.இ கடன்கள் வழங்கப்பட்டுகிறது (Low MSME credit penetration observed in Bihar, Odisha and Uttar Pradesh):
மாநிலங்களில்கடன்கள் வழங்கப்பட்டிருப்பது (Credit penetration) எம்.எஸ்.எம்.இகடன் / மாநிலவைப்பு மற்றும்எம்.எஸ்.எம்.இகடன் / மாநிலமொத்த உள்நாட்டுஉற்பத்தி விகிதம்என வரையறுக்கப்படுகிறது. இது பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மிகவும் குறைவாக உள்ளன. எனவே கடன்கள் வழங்குவதற்கான வாய்ப்புகள் இந்த மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளன..
சிட்பி பற்றி..! (About SIDBI)
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank of India - SIDBI) சிட்பி, இது, நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) பிரிவின் மேம்பாடு, நிதி மற்றும் அபிவிருத்திக்கான பிரதான நிதி நிறுவனம். மேலும், இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. சிட்பியின் வணிகம் என்பது நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) பிரிவை சார்ந்துள்ளது. சிட்பி, எம்.எஸ்.எம்.இ துறைக்கு தேவையான நிதி உதவி மற்றும் மேம்பாட்டு தேவைகளை அளித்து செய்து வருகிறது.
டிரான்ஸ்யூனியன் சிபில் பற்றி..!
இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனமாக டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) உள்ளது. இது சர்வதேச அளவிலான கடன் தகவல்களை மிகப் பெரிய களஞ்சியமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் , அனைத்து முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிச் சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் உட்பட 3,000- க்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் 100 கோடிக்கும் (1000 million) மேற்பட்ட கடன் பதிவுகளை பராமரித்து வருகிறது. இந்த அமைப்பின் நோக்கம் என்பது வணிகம் விரைவாகவும், குறைந்தக் கட்டணத்தில் கடன் தகவல்களை அளித்து தகவல் தீர்வுகளை கொடுப்பதாக உள்ளது. இந்த அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு கடன் சார்ந்த இடர்ப்பாட்டை நிர்வகிக்க உதவி செய்வதன் மூலம், செலவுகளைக் குறைக்கவும், லாபத்தை கூட்டவும் சரியான வணிக உத்திகளை திரட்ட உதவுகிறது. நுகர்வோர் மற்றும் வணிக கடனாளர்களுக்கு விரிவான, நம்பகமான தகவல்களை அளித்து, தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கான முடிவை சுலபமாக எடுக்க உதவுகிறது. தகவல்களின் சக்தி (Power of Information) மூலம் டிரான்ஸ்யூனியன் சிபில், அதன் உறுப்பினர்களுக்கு கடன் குறித்த தகவல்களை அளிப்பதோடு, அனைவருக்கும் நிதிச் சேவை மூலம் வலிமையான பொருளாதாரத்தை உருவாக்க உதவுகிறது.
இந்தத் தகவலை இந்தஅமைப்பு நல்லது என்று அழைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக