மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்.ஐ.பி லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய வணிக பிரீமியம் 52% அதிகரிப்பு

எஸ்.ஐ.பி லைஃப் இன்ஷூரன்ஸ்
ஜூன் 30,  2019 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான நிதி நிலை செயல்பாடு

 புதிய வணிக பிரீமியம் (NBP) 52% அதிகரிப்பு
106% y-o-y வளர்ச்சியுடன் பாதுகாப்பு பாலிசிகளின் பங்களிப்பு 10% முதல் 14% வரை அதிகரிப்பு
 தனிநபர் மதிப்பிடப்பட்ட பிரீமியத்தில் (IRP) தனியார் சந்தை பங்களிப்பு 35% வளர்ச்சி
 செயல்பாட்டு  செலவு  9.7% லிருந்து 7.4%  ஆக குறைவு
  13 வது மாத நிலைத்தன்மையின் விகிதம் 2% அதிகரித்து 82.47% லிருந்து 84.46% ஆக உயர்வு
 லாபம் 5% அதிகரித்து  ரூ. 3.7 பில்லியன் ஆக  உயர்வு
புதிய வணிகத்தின் மதிப்பு (VoNB) 49% அதிகரித்து  ரூ. 3.7 பில்லியன்  ஆக உயர்வு
புதிய வணிகத்தின் மதிப்பு வரம்பு 19.0% லிருந்து 19.9% ஆக அதிகரிப்பு



Source: Life insurance council
VNB and VNB margin for Q1 FY20 and Q1 FY19 are based on management estimates
Operating expense ratio = Operating expenses / Gross Written Premium (GWP)
Total cost ratio = (Operating expenses + Commission + Provision for doubtful debt and bad debt written off) /GWP

The persistency ratios are calculated as per IRDA/ACT/CIR/MISC/035/01/2014 circular dated 23rd January 2014. Single Premium and Fully Paid-Up policies are considered in above calculation. Group Business where persistency is measurable is included. Persistency Ratios for the period ended June 30, 2019 and June 30, 2018 are 'For the Quarter' Persistency Ratios are calculated using policies issued in March to May period of the relevant years.

Effective tax rate assumes that a proportion of the projected profits are tax exempt on account of tax deductions available on income from dividends and tax free bonds.

N.B: Refer the section on definitions, abbreviations and explanatory notes

எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இயக்குநர்கள் குழு ஜூன் 30, 2019 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. ஜூலை 23, 2019 செவ்வாயன்று மும்பையில்  நடந்த இயக்குநர்கள் குழு  கூட்டத்தைத் தொடர்ந்து பங்குச் சந்தைககளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை முடிவுகளின் விவரம் இந்த வெளியீட்டில் இணைக்கப்பட்டுள்ளது.

வணிக வளர்ச்சி மற்றும் சந்தை பங்கு (Business growth and market share)
2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில் புதிய வணிக பிரீமியம் (NBP) 52% அதிகரித்து  ரூ. 31.5 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இது 2018-19 ம் ஆண்டின்  முதல் காலாண்டில் ரூ.  20.8 பில்லியன்  கோடியாக இருந்தது.
2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில்  தனிநபர் மதிப்பிடப்பட்ட  வணிக பிரீமியம் (IRP) 32% அதிகரித்து  ரூ. 16.2 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இது 2018-19 ம் ஆண்டின்  முதல் காலாண்டில் ரூ.  12.1 பில்லியன்  ஆக  இருந்தது.
2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில்  தனிநபர்  புதிய  வணிக பிரீமியம்  41% அதிகரித்து  ரூ. 18.7 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இது 2018-19 ம் ஆண்டின்  முதல் காலாண்டில் ரூ.  13.3 பில்லியன்  ஆக  இருந்தது.

சீரான திட்ட கலவை மூலம் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு வணிகத்தில் நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில்  மொத்த பாதுகாப்பு புதிய  வணிக பிரீமியம் (Total protection new business premium)  106% அதிகரித்து  ரூ. 4.4 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இது 2018-19 ம் ஆண்டின்  முதல் காலாண்டில் ரூ.  2.1 பில்லியன்  ஆக  இருந்தது. 2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில்  மொத்த பாதுகாப்பு புதிய  வணிக பிரீமியத்தின் பங்களிப்பு    10.2% அதிகரித்து 13.8% ஆக உயர்ந்துள்ளது. இது 2018-19 ம் ஆண்டின்  முதல் காலாண்டில்  10.2% ஆக இருந்தது.

செலவு குறைப்பு (Cost Efficiency)

மொத்த செலவு விகிதம் (Total Cost ratio) 2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில் 11.2% ஆக குறைந்துள்ளது. இது, 2018-19 ம் ஆண்டின்  முதல் காலாண்டில்   13.8% ஆக இருந்தது.

கமிஷன் விகிதம், 2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில் 3.7% ஆக குறைந்துள்ளது. இது, 2018-19 ம் ஆண்டின்  முதல் காலாண்டில்  4.1% ஆக இருந்தது.

செயல்பாட்டு செலவு, 2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில் 7.4% ஆக குறைந்துள்ளது. இது, 2018-19 ம் ஆண்டின்  முதல் காலாண்டில்  9.7% ஆக இருந்தது.

லாப நிலை (Profitability)

2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில் புதிய வணிகத்தின் மதிப்பு (Value of New Business -VoNB)  49% அதிகரித்து ரூ. Rs. 3.3  பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
புதிய வணிகத்தின் மதிப்பு வரம்பு 0.9%  அதிகரித்து 2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில் 17.9% ஆக உள்ளது. இது, 2018-19 ம் ஆண்டின்  முதல் காலாண்டில்  17.0 ஆக இருந்தது.

நிகர லாபம்  5%  அதிகரித்து ரூ. 3.5 பில்லியன் (Q1 FY 2019) லிருந்து  ரூ. 3.7 பில்லியன் (Q1 FY 2020) ஆக அதிகரித்துள்ளது

நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (Assets under Management)

நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 22%  அதிகரித்து ரூ. 1,202.8 பில்லியன் (ஜூன் 30, 2018) லிருந்து ரூ.1,469.5 பில்லியன்  (ஜூன் 30, 2019) ஆக  உள்ளது.

நிகர மதிப்பு மற்றும் மூலதன நிலை (Net worth and capital position)

நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 16% அதிகரித்து, ஜூன் 30 2019-ல்  79.4 பில்லியன் ஆக உள்ளது. இது   ஜூன் 30, 2018 -ல்  ரூ. 68.2 பில்லியன் ஆக இருந்தது. .

 ஜூன் 30 2019 நிலவரப்படி சால்வன்சி விகிதம் 2.17 ஆக உள்ளது. சட்டப்படி இது 1.5 ஆக இருந்தால் போதும்.

பங்கு மூலதனம் மூலமான வருமானம் (RoE) 2019-20 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில் 19.2% ஆக உள்ளது. இது, 2018-19 ம் நிதி ஆண்டு முதல் காலாண்டில்   21.2% .

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...