ரூ.5 லட்சம் வரை
வருமான வரி கிடையாது - மத்திய பட்ஜெட்
2019-20 அறிவிப்பு
2019-20 அறிவிப்பு
நடப்பு 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்தியஅரசின்பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ஜூலை 5, 2019 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மாதசம்பளம் பெறுபவர்கள், வரிக்கு உட்படும் வருமானம்ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது. இது பிப்ரவரி 2019 இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுதான். அந்த வகையில் புதிது அல்ல.
ரூ. 5 லட்சம் வரை வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு வரித் தள்ளுபடி ரூ.12,500 வழங்கப்படுகிறது. இந்த வரித் தள்ளுபடி வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு கிடையாது. அந்த வகையில் இந்த அறிவிப்பால் பயன் அடைபவர்கள் எண்ணிக்கை குறைவாகும்.
இந்தப் பிரிவினரின் எண்ணிக்கை மொத்தம் வருமான வரி கட்டுபவர்களில் சுமார் 16 சதவிகிதமாக உள்ளது.
6 ஜூலை, 2019