மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியாவில் அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4 வது இடம்


இந்தியாவில் அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4 வது இடம், கடந்த மூன்று மாதங்களில் 35% வளர்ச்சி: ரேஸர்பே-தி எரா ஆஃப் ரைசிங் ஃபின்டெக்அறிக்கை

o   இந்திய நகரங்களில், 2019 ஜூன் மாதத்துடன் முடிந்த மூன்று மாதங்களில்  டிஜிட்டல் பரிவர்த்தனையில் சென்னை 6 வது இடத்தில் உள்ளது
o   சென்னையின் யூ.பி.ஐ பரிவர்த்தனைகள்  2019 ஜனவரி-பிப்ரவரி-மார்ச் முதல்  2019 ஏப்ரல்-மே-ஜூன் வரை 57% அதிகரித்துள்ளன.
o   எஸ்.எம்.இ நிறுவனங்கள் பி 2 பி பணப்பரிவர்த்தனைகளுக்கு பட்டுவாடா இணைப்புகள் மற்றும் பட்டுவாடா பக்கங்களை விரும்புகின்றன

சென்னை  இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா தீர்வு நிறுவனம் ரேஸர்பே  (Razorpay), இந்த நிறுவனம், சென்னையில் அதன் இரண்டாவது பதிப்பான ‘தி எரா ஆஃப் ரைசிங் ஃபின்டெக்(The Era of Rising Fintech’) அறிக்கையை இன்று அறிமுகப்படுத்தியது. இந்த அறிக்கை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பகுப்பாய்வு செய்கிறது மற்றும் நுகர்வோர் மற்றும் வணிகங்கள் எவ்வாறு டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்கின்றன என்பதையும், பணம் செலுத்தும் தொழில்நுட்பத்தில் சாத்தியமான விஷயங்களை பற்றி காலாண்டுக்கு ஒரு முறை நுட்பமான விவரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அதிக பங்களிப்பு செய்யும் மாநிலங்களில் தமிழகம் 4 வது இடத்தில் உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அளவில் சென்னை 57% அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது, அடுத்த இடங்களில் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் ஈரோடு நகரங்கள் உள்ளன.
ரேஸர்பே அறிக்கையிலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சென்னை ஏற்றுக்கொள்வது குறித்த வேறு சில சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் இங்கே.
இந்த அறிக்கையில் உள்ள அனைத்து கண்டுபிடிப்புகளும் ரேஸர்பே பிளாட்பாரத்தில் 2019 ஜனவரி முதல் ஜூன் வரை நடைபெற்ற பரிவர்த்தனைகளின் அடிப்படையில் அமைந்தவை

சென்னை:
-          2019, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பி2எம் (P2M) பிரிவில்55% என மதிப்பிடப்பட்ட பங்கைக் கொண்டுள்ளன, அதைத் தொடர்ந்து நெட்பேங்கிங் (24%) மற்றும் யூ.பி.ஐ(20%) ஆக உள்ளது.

-          யூ.பி.ஐ பரிவர்த்தனைகள், முந்தைய காலாண்டோடு ஒப்பிடும்போது கடந்த காலாண்டில்57% அதிகரித்துள்ளன

-          கூகிள் பே (Google Pay)2019, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 72% பங்களிப்புடன் மிகவும் விருப்பமான யூ.பி.ஐ பயன்முறையாகத் தொடர்கிறது(2019 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலிருந்து59% அதிகரித்துள்ளது)

-          2019, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் போன்பி ( PhonePe) 14% பங்களிப்பு செய்திருந்தாலும், இது 2019 ஜனவரி, பிப்ரவரி, மார்ச்க்குப் பிறகு66% அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது

-          2019, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சி கண்ட முதல் 3 துறைகள்: உணவு மற்றும் பானங்கள் (31%), கேமிங் (13%) மற்றும் நிதிச் சேவைகள் (12%). கேமிங் தொழில், கடந்த காலாண்டில் உலகக் கோப்பை மற்றும் ஐ.பி.எல், மற்ற விளையாட்டு நிகழ்வுகள் காரணமாக 244% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

-          2019, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சி கண்ட முதல் 3 துறைகள்:உணவு மற்றும் பானங்கள் (36%), நிதிச் சேவைகள் (15%) மற்றும் சுற்றுலா மற்றும் பயணங்கள் (10%)
-          சென்னை புதிய பரிவர்த்தனை முறைகளான eNACH/ eMandates மற்றும் யூ.பி.ஐ போன்றவற்றை வரவேற்றிருக்கிறது.

-       சென்னை எஸ்.எம்.இக்களுக்கான பரிமாற்ற  முறைகளாக பட்டுவாடா இணைப்புகள் மற்றும் பட்டுவாடா பக்கங்கள் (Payment links and Payment Pages) மாறி வருகின்றன

இந்தியா:
-      அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் ஹைதராபாத், மும்பை, புனே மற்றும் டெல்லி நகரங்களில் உள்ளன.

-      முதல் 5 மாநிலங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்  ஆகியவை அடங்கும்

-      தேசிய அளவில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பி2எம் பிரிவில் அதிக பங்களிப்பு கொண்டுள்ளன. இவற்றின் பங்களிப்பு 2019, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்50% ஆகவும் 2019, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பங்களிப்பு 56% ஆக உள்ளன. கார்டுகளின் பயன்பாடு, 2019, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலிருந்து 2019, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்  22% வளர்ச்சி கண்டுள்ளது.

-      பரிவர்த்தனையில்  யூ.பி.ஐ34%  மற்றும் நெட் பேங்கிங் 13%  பங்களிப்புடன் உள்ளன. யூ.பி.ஐ பங்களிப்பு கடந்த இரண்டு காலாண்டுகளில் 71% வளர்ச்சி கண்டுள்ளது

-          - கூகிள் பே 57% பங்களிப்புடன் மிகவும் விரும்பப்படும் யூ.பி.ஐ பயன்பாடாக தொடர்கிறது. போன்பே26% பங்களிப்பு செய்திருந்தாலும், இது 2019, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்குப்  பிறகு அதிகபட்ச  வளர்ச்சி 82% கண்டுள்ளது. 2019, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுடன் ஒப்பிடும் போது, மற்ற, BHIM (8%) மற்றும் Paytm (7%) ஆகியவை யூ.பி.ஐ பங்களிப்பில் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
-       2019, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சி கண்ட முதல் 3 துறைகள்: உணவு மற்றும் பானம்(29%), கேமிங் தொழில்(15%, 2019, ஜனவரி, பிப்ரவரி, மார்ச்-ல் 6% ஆக இருந்தது) மற்றும் நிதிச் சேவைகள்(14%)

-      2019, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சி கண்ட முதல் 3 துறைகள்:  உணவு மற்றும் பானம்(31%), நிதிச் சேவைகள்(21%) மற்றும் பயணங்கள் (9%)

-      வாலட்களின் (wallets) பங்களிப்பு 2019, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலிருந்து 2019, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்  17% வளர்ச்சி கண்டுள்ளது. ஓலா மணி தான் அதிக பங்களிப்பு செய்த வாலட்.


ரேஸர்பே நிறுவனத்தின்  இணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல்  அதிகாரி ஹர்ஷில் மாத்தூர் (  Harshil Mathur, Co-founder & CEO, Razorpay) கூறும் போது, இந்தியாவில் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும், மேலும் ஆண்டுக்கு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7% வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. கடந்த காலாண்டில் 69% பங்களிப்புடன் வளரும் துறைகளில் கடன் வழங்கல் ஒன்றாகும் என்பதை நாங்கள் கவனித்தோம். இணையத்திற்கான யூ.பி.ஐ பயன்பாடு அதிகரித்து வருவதால், டிஜிட்டல் பட்டுவாடாகளுக்கான தேவை சென்னையில் வணிக வளர்ச்சியை விட அதிக உள்ளது. இது வளர்ந்து வரும் நம்பிக்கை, பாரம்பரிய வணிகங்களின் மாறிவரும் மனநிலை மற்றும் ஃபின்டெக் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு மற்றும் பொதுத் துறை அதிகாரிகளின் கவனம் செலுத்தும் முயற்சி ஆகியவற்றின் சான்றாகும்..
வரும் மாதங்களில், டிஜிட்டல் பண பட்டுவாடாவில் சென்னை ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். ஃபின்டெக் மாற்றும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, ரேஸர்பே இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறது.
வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 40% டிஜிட்டல் பரிவர்த்தனை அடுக்கு 2 (Tier 2) வணிகங்கள் மற்றும் நுகர்வோரால் இயக்கப்படும் என்று ரேஸர்பே கணித்துள்ளது.
நிதி சேவைகளில், கடன் வழங்குவது கடந்த காலாண்டில்76% பங்களிப்புடன் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் ஒரு புதிய வளர்ச்சித் துறையாக இருக்கும். இதைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் துறை இருக்கும்.
அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் நிதி சேவைகளை பெறுவதால், இந்தச் சேவைகளை அரசு ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது மற்றும் சேவை வழங்குபவர்களும் மிக முக்கியத்துவம் பெறுகிறார்கள். நிதிச் சார்ந்த நுட்பங்களில் ஒழுங்குமுறைகள் ஏற்படும் போது, மேலும் புதுமைகள் படைக்கப்படும் என ரேஸர்பே நம்புகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை விரிவுபடுத்த மத்திய அரசாங்கம் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.
வங்கி துறையில்  நிதிச் சேவை தொழில்நுட்ப திறனை இந்தியா கட்டவிழ்த்து விட, வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் புதுமை ஆகியவை நடப்பு 2019 ஆம் ஆண்டில் முக்கியமாக இருக்கும்.
வரும் 2021 ஆம் ஆண்டிற்குள்  மொபைல் மூலமான பண பரிமாற்ற அளவு 10 மடங்கு அதிகரிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம்ஆண்டில் இந்தியாவின் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் 15% டிஜிட்டல்பண பரிமாற்றங்கள் மூலம்பாயும் என்று ரேஸர்பேஅறிக்கை எதிர்பார்க்கிறது

ரேஸர்பே சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் பற்றி:

ரேஸர்பே  (Razorpay) இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா தீர்வு நிறுவனம். இது எந்த ஒரு இந்திய வணிகத்திற்கும் பண பரிமாற்றத்திற்கு புதுமையான மற்றும் விரைவான தீர்வுகளை அளிக்கிறது. 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் 3,50,000 க்கும் மேற்பட்ட வணிகங்களுக்கு தொழில்நுட்ப  தீர்வுகளை வழங்கி வருகிறது. ஐ..டி ரூர்க்கி-ன் பழைய மாணவர் ஷஷாங்க் குமார் & ஹர்ஷில் மாத்தூர் ஆகியோரால் நிறுவப்பட்டது. சிலிக்கான் வேலியின் மிகப்பெரிய தொழில்நுட்ப முடுக்கி, ஒய் காம்பினேட்டரின் (Y Combinator) ஒரு பகுதியாக இருக்கும் இரண்டாவது இந்திய நிறுவனம் ரேஸர்பே ஆகும்.

டைகர் குளோபல், சீக்வோயியா இந்தியா, ரிப்பிட் கேபிடல், ஒய்காம்பினேட்டர், மாஸ்டர்கார்டு மற்றும் மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் (Tiger Global, Sequoia India, Ribbit Capital, YCombinator, MasterCard and Matrix Partners) போன்ற முன்னணி முதலீட்டாளர்கள் சீரிஸ் , பி& சி மூலம் மொத்தம்100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். பணம் செலுத்துவதை எளிதாக்குவதற்கான ரேஸர்பேயின் பணியில் ஸ்னாப்டீல், இன்மொபி& ஃப்ரீசார்ஜ் நிறுவனர்கள், விசா& பிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாகிகள் மற்றும் இணைய தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் ஜஸ்டின் கான் மற்றும் டிகான் பெர்ன்ஸ்டாம் (Snapdeal, InMobi & Freecharge founders, Visa & Flipkart’s leadership executives and internet entrepreneurs & investors Justin Kan and Tikhon Bernstam) உள்ளிட்ட சுமார் 33 ஏஞ்சல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

டெவலப்பர் சார்ந்த பண பரிவர்த்தனை நுழைவாயில் என்று அறியப்பட்ட ரேஸர்பே24x7 ஆதரவு, ஒரு வரி ஒருங்கிணைப்புக் குறியீடு மற்றும் சிறந்த புதுப்பிப்பு அனுபவங்கள் போன்ற அத்தியாவசியங்களில் கவனம் செலுத்துகிறது.

For more information, please contact:
Hepsibah Rozario  || hepsibah.rozario@razorpay.com || +91 - 8884913468
Shalini Chandrasekharan || shalini.chandrasekharan@razorpay.com || +91-7829212112
Aafia Feroze || aafia.feroze@adfactorspr.com|| +91- 9902491526

###


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...