மொத்தப் பக்கக்காட்சிகள்

டிசிபி பேங்க் 2019-20 முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ. 81 கோடி


டிசிபி பேங்க், 2019-20 முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு

டிசிபி பேங்க் லிமிடெட் (BSE: 532772; NSE: DCB) –ன் இயக்குநர் குழு கூட்டம் மும்பையில் ஜூலை 16, 2019 அன்று நடந்தது. அதில், 2019-20 முதல் காலாண்டு (Q1 FY 2020) நிதி நிலை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

2019-20   முதல் காலாண்டு நிதி நிலை முக்கிய முடிவுகள்(Q1 FY 2020 Highlights):

a)    2019-20 முதல் காலாண்டில் வங்கியின் வரிக்கு பிந்தைய லாபம் (Profit After Tax - நிகர லாபம்) ரூ. 81  கோடி. இது 2018-19 முதல் காலாண்டில் ரூ. 70 கோடியாக இருந்தது. 

b)    2019-20 முதல் காலாண்டில் வங்கியின் வரிக்கு முந்தைய லாபம் (Profit Before Tax ) நிலையான வளர்ச்சி மூலம் ரூ. 126  கோடியாக அதிகரித்துள்ளது. இது 2018-19 முதல் காலாண்டில் ரூ. 108 கோடியாக இருந்தது. 

c)    செயல்பாட்டு லாபம் (Operating Profit) ரூ. 167 கோடி, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 141 கோடியாக இருந்தது.     
                                       
                              
d)    வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ. 305 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 273 கோடியாக இருந்தது.

e)    வட்டி சாரா வருவாய் (Non-Interest Income) ரூ. 87 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 83 கோடியாக இருந்தது

f)     செலவு வருமான விகிதம் (Cost Income Ratio) 2019-20 முதல் காலாண்டில் 2.79% அதிகரித்து அதாவது 57.46%லிருந்து 60.25% ஆக உயர்ந்துள்ளது.

g)    பங்கு மூலதனம் மூலமான வருமானம் (Return on Equity - ஆண்டு கணக்கில்) 2019-20 ஆம் முதல் காலாண்டில் 11.17% ஆக உள்ளது. இது 2018-10 ஆம் முதல் காலாண்டில் 10.75% ஆக இருந்தது.                               
                        
h)    வழங்கப்பட்ட நிகர கடன்கள் (Net Advances – கார்ப்பரேட் பேங்கிங் தவிர்த்து), 2019 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 21,006 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 17,663  கோடியாக இருந்தது. இது 19% வளர்ச்சியாகும். 

i)      வழங்கப்பட்ட நிகர கடன்கள் (Net Advances – கார்ப்பரேட் பேங்கிங் சேர்த்து), 2019 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 24,044 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 21,243  கோடியாக இருந்தது. இது 13% வளர்ச்சியாகும். 

j)      2019 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, வங்கியின் டெபாசிட்கள் (Deposits) 15% அதிகரித்து ரூ. 28,789 கோடியாக உள்ளது. வங்கியின் வாடிக்கையாளர் டேர்ம் டெபாசிட் 31% வளர்ந்துள்ளது. இதேபோல் வாடிக்கையாளர் டெபாசிட் 26% அதிகரித்துள்ளது.

k)     மொத்த டெபாசிட்டில் முன்னணி 20 டெபாசிட்தாரரின் பங்களிப்பு (Total Deposit from top 20 depositors) 2018, மார்ச் 31-ல் 14.87% ஆக இருந்தது. அது 2019, மார்ச் 31-ல் 12.01% ஆக குறைந்துள்ளது. இது 2019, ஜூன் 30-ல் இன்னும் குறைந்து 10.13% ஆக உள்ளது.

l)      காசா விகிதம் (CASA ratio), 2019 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 24.53ஆக உள்ளது. இது, 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 24.63% ஆக இருந்தது . சேமிப்பு கணக்குகளின் (Savings Accounts) வளர்ச்சி 16% ஆகும்.


m)  நிகர வட்டி வரம்பு (Net Interest Margin), 2019-20 முதல் காலாண்டில்3.67% ஆக உள்ளது. இது 2018-19 முதல் காலாண்டில் 3.90% ஆக இருந்தது. நீண்ட கால மறுநிதிஉதவி (long term refinance) காரணமாக நிகர வட்டி வரம்பு சற்று குறைந்துள்ளது.

n)    மொத்த  வாராக் கடன் விகிதம் (Gross NPA ratio), ஜூன் 30, 2019 நிலவரப்படி  1.96ஆக இருக்கிறது. இது, ஜூன் 30, 2018 நிலவரப்படி 1.86% ஆக இருந்தது.

o)    நிகர வாராக் கடன் விகிதம் (Net NPA ratio), ஜூன் 30, 2019 நிலவரப்படி 0.81% ஆக உள்ளது. இது, ஜூன் 30, 2018 நிலவரப்படி 0.72% ஆக இருந்தது

p)    மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio - CAR),  ஜூன் 30, 2019 நிலவரப்படி  16.06ஆக உள்ளது. மேலும், பேசல் III விதிமுறைகள்படி  டயர் I - 12.51 % மற்றும் டயர்  II - 3.55ஆக உள்ளது

q)    ஜூன் 30, 2019 நிலவரப்படி நிகர மறுசீரமைக்கப்பட்ட நிலை கடன்கள் (Net Restructured Standard Advances) சுமார் ரூ. 38 கோடி.

r)     வங்கியின் கிளைகள் எண்ணிக்கை (branch network), 2019ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 334 ஆக அதிகரித்துள்ளது. 


2019-20 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு செயல்பாடுகள் குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. முரளி எம். நடராஜன் (Mr. Murali M. Natrajan, Managing Director & CEO) கூறும் போது, " எங்களின் வைப்பு நிதிகளை மேம்படுத்துவதற்காக சில்லறை டேர்ம் வைப்பு நிதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். நீண்ட கால மறுநிதி உதவி மற்றும் வாடிக்கையாளர் வைப்புகளின் புதுப்பித்தல்  ஆகியவற்றால் இன்னும் இரண்டு காலாண்டுகளுக்கு  லாப வரம்பில் சற்று அழுத்தம் இருக்கும்.”


2019 ஜூன் உடன் முடிந்த காலாண்டில் டிசிபி பேங்க்-ன் தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகள் (DCB Bank Unaudited Results for the Quarter ended June 30, 2019)

ரூ. கோடி
முதல் காலாண்டு  2019-20
முதல் காலாண்டு 2018-19
மாற்றம்
%
நான்காம் காலாண்டு  2018-19
நிதி ஆண்டு  2018-19
வட்டி வருமானம் 
858
701
22%
827
3,041
வட்டிச் செலவு 
(553)
(428)
(29%)
(526)
(1892)
நிகர வட்டி வருமானம் 
305
273
12%
301
1,149
வட்டி சாரா வருமானம் 
87
83
5%
99
350
மொத்த வருமானம்
392
356
10%
400
1,499
செயல்பாட்டு செலவுகள்
(225)
(215)
(5%)
(215)
(853)
செயல்பாட்டு லாபம் 
167
141
18%
185
647
வரி தவிர்த்த இதர ஒதுக்கீடுகள் 
(41)
(33)
(22%)
(34)
(140)
வரிக்கு முந்தையை நிகர லாபம் 
126
108
16%
151
507
வரி 
(45)
(38)
(16%)
(54)
(181)
வரிக்கு பிந்தைய நிகர லாபம்
81
70
17%
96
325


ஐந்தொகை முக்கிய விவரங்கள் (Key Balance Sheet Parameters)

ரூ. கோடி
ஜூன் 30,
2019
மார்ச் 31,
2019
டிசம்பர்  31,
2018
செப்டம்பர் 30,
2018
ஜூன் 30,
2018
 மொத்த சொத்துகள்
36,282
35,792
34,382
32,510
31,178
டெபாசிட்கள்
28,789
28,435
27,509
26,169
25,032
வழங்கப்பட்ட நிகர கடன்கள்
24,044
23,568
22,888
22,069
21,243
முதலீடுகள்
7,995
7,844
7,516
7,003
7,053
பங்கு முதலீட்டாளர்களின் மூலதனம்
3,161
3,116
3,017
2,931
2,854
மொத்த வாராக் கடன் விகிதம்
1.96%
1.84%
1.92%
1.84%
1.86%
நிகர வாராக் கடன் விகிதம்
0.81%
0.65%
0.71%
0.70%
0.72%
ஒதுக்கீட்டு விகிதம்
75.59%
78.77%
76.99%
76.82%
76.09%
காசா விகிதம்
24.53%
23.95%
24.25%
24.30%
24.63%
கடன், டெபாசிட் விகிதம்
83.52%
82.88%
83.20%
84.33%
84.86%


டிசிபி பேங்க் பற்றி (About DCB Bank)

டிசிபி பேங்க் லிமிடெட் (DCB Bank Limited) என்பது நவீன புதிய தலைமுறை தனியார் துறை வங்கி. இந்தியாவில் 19 மாநிலங்கள்,3 யூனியன் பிரதேசங்களில் 334 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வர்த்தக வங்கியான இதனை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஒழுங்குப்படுத்தி வருகிறது. இந்த வங்கி திறமையான நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. டிசிபி பேங்க், நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் இயங்கி வருகிறது. இந்தியாவில் ஆதார் எண் மற்றும் கைரேகை அடிப்படையிலான பயோ மெட்ரிக் ஏடிஎம் மையங்களை அமைத்துள்ளது. மற்றும் தனிநபர்கள் மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கி சேவையை அளித்து வருகிறது.

சிறு வணிகம், நுண் - எஸ்.எம்.-கள் (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்), எஸ்.எம்.-கள், நடுத்தர அளவு கார்ப்பரேட் நிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்கள், வேளாண், விளைபொருட்கள், அரசு, பொது துறை, இந்திய வங்கிகள், கூட்டுறவு வங்கி மற்றும்வங்கிச் சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) போன்றவற்றில் இந்த வங்கியின் வணிகம் இருக்கிறது. டிசிபி பேங்க்-க்கு சுமார் 6,00,000 -க்கும் மேற்பட்ட துடிப்பான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
For more details please visit www.dcbbank.com

Kindly direct your enquiries to:

Gaurav Mehta, Marketing & PR DCB Bank Limited
Cell phone: +91 9870432101
Landline: +91 22 66187000 Email: gauravm@dcbbank.com
Jyothi Goswami
Adfactors PR
Cell phone: +91 9702488388
Landline: +91 22 67574325 Email: jyothi@adfactorspr.com


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...