மத்திய பட்ஜெட் 2019-20: பெரும் பணக்காரர்களுக்கு 43% வருமான வரி..!
மத்திய பட்ஜெட் 2019-20 இல் நடுத்தர வர்க்கத்தினரின்வருமானவரி அடிப்படை விகிதங்களில், அடுக்குகளில் (ஸ்லாப்) மாற்றம் இல்லைஎன நிதி மந்திரி திருமதி. நிர்மலாசீதாராமன் அறிவித்தார்.
அதே நேரத்தில்,கூடுதலாக வருமானம் சம்பாதிப்பவர்கள் கூடுதலாக வரி பங்களிப்பு செய்யவேண்டும் என்று கூறினார்.
அந்த வகையில் ஆண்டு வருமானம் ரூ.2 கோடிமுதல் ரூ.5 கோடிவரை உள்ள தனி நபர்கள் 25%% கூடுதல் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனி நபர்கள் 37%கூடுதல் வரியும் செலுத்த வேண்டும். அதாவது, இவர்கள் முறையே 39.00% மற்றும் 42.74% வருமான வரி செலுத்த வேண்டும்.
வருமான வரி அடிப்படை வரம்பி
|
வரி விகிதம்
|
மருத்துவம் & கல்வித் தீர்வை
|
கூடுதல் வரி
|
மொத்த வரி
|
ரூ. 2.5 லட்சம் வரை
|
வரி இல்லை – வரி விலக்கு
| |||
ரூ. 2.5 லட்சம் to ரூ. 5 லட்சம்
|
5%
|
4%
|
0%
|
5.20%
|
ரூ. 5 லட்சம் to ரூ.10 லட்சம்
|
20%
|
4%
|
0%
|
20.8%
|
ரூ.10 லட்சம் to ரூ.50 லட்சம்
|
30%
|
4%
|
0%
|
31.2%
|
ரூ.50 லட்சம் to ரூ. 1 கோடி
|
30%
|
4%
|
10%
|
34.32%
|
ரூ. 1 கோடி to ரூ. 2 கோடி
|
30%
|
4%
|
15%
|
35.88%
|
ரூ. 2 கோடி to ரூ. 5 கோடி
|
30%
|
4%
|
25%
|
39.00%
|
ரூ. 5 கோடி மற்றும் அதற்கு மேல்
|
30%
|
4%
|
37%
|
42.74%
|
மின்சார கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அதன்மீதானவரிகுறைக்கப்பட்டு இருப்பதால், அவற்றின் விலைகுறையும். மின்சார வாகனங்களை கடனில் வாங்கினால் நிதி ஆண்டில் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ. 1.5 லட்ச ரூபாய்க்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) இல்லாதபட்சத்தில், ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 10%லிருந்து 12.5 சதவிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், இவற்றின் விலை உயரக் கூடும். .
6 ஜூலை, 2019