மொத்தப் பக்கக்காட்சிகள்

புருவங்காரா 2019-20 முதல் காலாண்டு நிகர லாபம் ரூ. 43 கோடி, 63% அதிகரிப்பு


2019-20 ஆம்  முதல் காலாண்டில் மொத்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ.646 கோடி,  64% அதிகரிப்பு
2019-20 ஆம் முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 43 கோடி, 63% அதிகரிப்பு
குழும விற்பனை 33% அதிகரித்து ரூ. 493 கோடி
                              

புருவங்காரா லிமிடெட் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர்  ஆஷிஷ் ஆர் புருவங்கரா 
(Ashish R Puravankara, Managing Director, Puravankara Limited) கூறும் போது வலுவான விற்பனை, பண வரத்து மற்றும் நிகர லாபம் ஆகியவற்றைக் கொண்ட புதிய நிதியாண்டை தொடங்கி இருக்கிறோம். சமீபத்திய மத்திய பட்ஜெட், ரியல் எஸ்டேட் துறைக்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது. புருவங்காரா குழுமத்தில், எங்கள் வலுவான திறன்கள், நம்பகமான பிராண்ட் நற்பெயரை தொடர்ந்து பயன்படுத்துவோம், மேலும் இந்தத் துறையில் எங்கள் வலிமையை மேலும் உறுதிப்படுத்துவோம். உடனே குடியேறக்கூடிய வீடுகளின் விற்பனையை நோக்கி எங்களின் கவனம் இருக்கிறது.

மகிழ்ச்சியான வாடிக்கையாளர் அனுபவத்தைக் கொண்டுவருவது எங்கள் நிறுவனத்தின் முக்கிய கொள்கையாக இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் தேவைகள் அறிந்து சேவை அளித்து வருகிறோம். வீட்டு வாழ்க்கை அனுபவத்தை மறுவரையறை செய்யும், வீட்டு ஆட்டோமேஷனின் ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்ட புதிய வீடுகளானப்ளூநெக்ஸ்’ (BluNex) - நாங்கள் சமீபத்தில் தொடங்கினோம். எங்கள்  உத்தியின் ஒரு பகுதியாக, நிலையான கட்டுமான முறைகளை மேம்படுத்துவதாக இருக்கிறது. மற்றும் விநியோக சுழற்சிகளை விரைவுபடுத்துவதற்கும் வீணாவதைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.


இந்தக் காலாண்டில் ப்ரி-காஸ்ட் புரடக்‌ஷன் (pre-cast production) தயாரிப்புக்காக பெங்களூருவில் எங்களின் தொழிற்சாலை திறக்கப்பட்டது. தொடர் புதிய பிராஜெக்ட்கள் அறிமுகம் மூலம் அடுத்து வரும் ஒவ்வொரு காலாண்டிலும் சிறப்பாக செயபடுவோம்.
புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் நிதியாண்டை எதிர்நோக்குகிறோம்”


2019-20 முதல் காலாண்டு செயல்பாட்டு சிறப்பம்சங்கள் ( Operational Highlights for Q1FY20)
காலாண்டில், இந்தக் குழுமம். மொத்தம் 638 வீடுகளை (யூனிட்) விற்றது, சராசரியாக ஒரு நாளைக்கு 10 வீடுகள் விற்கப்பட்டிருக்கிறது. விற்கப்பட்ட வீடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை உடனடியாக குடியேறத் தயராக இருந்த வீடுகளிலிருந்து (ready-to-move-in inventory) வந்தவை.

விற்பனையை அதிகரிப்பதை விரைவுபடுத்துதல் மற்றும் கடன் அளவை குறைப்பது போன்ற இந்தக் குழுமத்தின் தீர்மானத்திற்கு ஏற்ப இது அமைந்துள்ளது.

2019-20 முதல் காலாண்டில் மொத்த முன் பதிவின் மதிப்பு ரூ. 493 கோடியாக அதிகரித்தது. இது, 2018-19 முதல் காலாண்டில்  ரூ. 370 கோடியாக இருந்தது. 33%  அதிகரிப்பாகும்.

2019-20
முதல் காலாண்டில், உடனடியாக குடியேறத் தயாராக இருந்த வீடுகள் மூலமான மொத்த முன் பதிவின் மதிப்பு ரூ. 181 கோடியாக அதிகரித்தது. இது, 2018-19 முதல் காலாண்டில்  ரூ. 63 கோடியாக இருந்தது. 187%  அதிகரிப்பாகும்.

30 ஜூன் 2019 உடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த நிதி செயல்திறன் (IND-AS 115 இன் படி) {Consolidated Financial Performance (As per IND-AS 115) for the quarter ended 30th June 2019}

வருமானம் ரூ. 646 கோடி; இது 64% அதிகரிப்பு
எபிட்டா (EBITDA) ரூ. 160 கோடி;இது 49% அதிகரிப்பு
• எபிட்டா லாப வரம்பு 25% ஆக உள்ளது
• வரிக்கு முந்தைய லாபம் PBT) ரூ.65 கோடி; இது 85% அதிகரிப்பு
வரிக்கு பிந்தைய லாபம் (PAT) ரூ.43 கோடி; இது 63% அதிகரிப்பு

பண வரத்து (Cash Flows)

ஜூன் 30, 2019 உடன் முடிவடைந்த காலாண்டில் வாடிக்கையாளர் வசூல் ரூ. 441 கோடி. இது 75% அதிகரிப்பு

அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களிலும் விற்கப்பட்ட வீடுகளிடமிருந்து மீதமுள்ள வசூல் 2019 ஜூன் 30 நிலவரப்படி 2,045 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முன் ரூ. 1,897 கோடியாக இருந்தது. அறிவிக்கப்பட்ட  திட்டங்களில் விற்கப்படாத வீடுகள் மூலம் பெறப்பட்ட தொகை ரூ. 4,074 கோடி. எதிர்பார்க்கப்படும் செயல்பாட்டு உபரி தொகை ரூ.  4,222 கோடி. ஜுன் 30, 2019 நிலவரப்படி இந்த நிறுவனத்தின் நிகர கடன் ரூ. 2,687 கோடி.

கடன் (Debt)

கடன் – பங்கு மூலதன விகிதம் (Debt- Equity Ratio) 1.42

கடனின் சராசரி செலவு ஜூன் 30, 2019 நிலவரப்படி 11.22% ஆகும்


Investor Relations
Kuldeep Chawla 
Chief Financial Officer
+91-80-4343-9999

Media Relations
Minol Ajekar 
Head - Corporate Communications
+91-80-4343-9710

DISCLAIMER:
Some of the statements in this communication may be ‘forward looking statements’, within the meaning of applicable laws and regulations. Actual results might differ substantially from those expressed or implied. Important developments that could affect the company’s operations include changes in the industry structure, significant changes in the political and economic environment in India and overseas, tax laws, duties, litigation and labour relations.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...