மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்திய வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட தினம் ஜூலை 19,

 ஜூலை 19 இந்திய வங்கிகள் 
தேசிய மயமாக்கப்பட்ட தினம்


வங்கிகள் தேசியமாக்கப்பட்ட
தினம் ஜீலை 19, 1969 ..
1969 ஆம் ஆண்டில் அன்றைய
மத்திய அரசால் ஓர் அவசர சட்டம் கொண்டு வந்து 14 பெரிய வணிக வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன.
.
இதன் தொடர்ச்சியாக  வங்கித் தொழில் நிறுவனங்கள் மசோதாவை அரசு தாக்கல் செய்து
குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது..

இதன் பின்பு 1980 ஆம் ஆண்டு மேலும் 6 வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன.
.
வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டதால் கிராமப் புறக் கிளைகள், ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத் தரம் உயர கடன்கள், விவசாயக் கடன்கள்- மானியக்  கடன்கள், கல்விக் கடன்கள் அனைவருக்கும் வங்கிச்சேவைகள்,
கந்து வட்டி முறைகள் ஒழிக்கப்பட்டு சரியான வட்டியில் பொதுமக்களுக்கான கடன்கள் வழங்குதல், பாதுகாப்பு, முன்னிரிமைக் கடன்கள் என பல்வேறுத் திட்டங்கள் மக்களுக்காக கொண்டுவரப்பட்டு இன்றளவும் வரையறைகளோடும், வரைமுறைகளோடும் நேர்த்தியாக செயல்பட்டு வருகின்றன..
2007  ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியின் போது நமது இந்திய நாடு அந்தப்  பிரச்சினையில் சிக்கிக்கொள்ளாததற்கு முக்கிய காரணமே நம் நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் அதில் மக்கள் சேமித்து வைத்திருந்த பெரும் சேமிப்புமே..

கிராமப்புற கிளைகள்:

இந்தியாவின் முதுகெலும்புகள் கிராமங்களே..
அத்தகைய கிராமங்கள் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வங்கிகள் தேசியமயமாக்கப்பிட்ட பின்
அதிக கிளைகளை திறந்ததோடு மட்டுமல்லாமல்,
கிராமப்புற வங்கிச்சேவைகளில் பொதுத்துறை வங்கிகள் தமக்கென  தனி இடம் பிடித்து மக்களுக்காக
இயங்கி வருகிறது..

விவசாயக் கடன்கள்:

இந்தியா விவசாய நாடு என்பதை மனதில் கொண்டு, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வங்கிகள் தேசியமாக்கப்பட்ட பின்னர் பல சிறப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், விவசாயம் செழிக்கவும், பயிர்க் கடன்கள், விவசாயத்திற்கு பயன்படும் காரணிகளுக்கான கடன்கள், மானியத்தோடு அளிக்கப்பட்டு வருவது சிறப்பானதொன்றாகும்..

கல்விக் கடன்கள்:
இன்றைய மாணவர்கள் நாளைய அறிஞர்கள் என்பதால், வறுமைச் சூழலால் கற்க முடியாமல் நிற்கும் மாணவர்களுக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கல்விக் கடன் திருவிழாக்களை நடத்தியும், கிளைகளின் மூலமும் எண்ணற்ற கல்விக் கடன்களை வழங்கி வருவதும் நமது நாட்டின் கல்வி வளர்ச்சியிலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்கினை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது..

அனைவருக்கும் வங்கிச்சேவை:

அரசின் நலத்திட்டங்கள், மானியத்திட்டங்கள், என
அரசு கொண்டுவரும்  எத்தகு திட்டங்களையும்
பொதுத்துறை வங்கிகள்  முதன்மை திட்டங்களாக செயல்படுத்துவதோடுஏழை, எளிய மக்களுக்காகவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்காக சிறு வங்கிச்சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு
நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிச்சேவைகளை கொண்டு சேர்த்து வருவது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சிறந்த சேவை  என்றே சொல்லலாம்..

வாராக் கடன்கள்:

இவ்வாறு நமக்காக நமக்கே செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை வராக்கடன்கள் என்கிற வாராக் கடன்கள். .
சேவை மனப்பான்மையுடன் மக்களுக்காக செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகள் இந்தப் பாதிப்பினால் தினம் தினம் தம்மை இழந்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நம் நாட்டின் வங்கித்துறைக்கு மிகப்பெரும் சவால் வராக்கடன்களே..

இதனால் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் தன்னை இழக்கும் என்றால் நமது நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்க நேரலாம்..

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், சிறப்புச்சட்டங்கள் இயற்றி,
வராக்கடன் பட்டியலில் உள்ளவர்களை சிவில் சட்டத்தில் இருந்து நீக்கி கிரிமினல் சட்டத்திற்கு மாற்றி (அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க கோரிக்கை) வங்கிகளும் கூட்டு முயற்சிகள் மேற்கொண்டு வராக்கடன்களை வசூலிக்க வேண்டும்..

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மீண்டும் (1969க்கு முன்பு) பழைய நிலைக்கு செல்லாமல் தடுக்க பொது மக்களுக்கும் இணைந்து செயல்பட வேண்டும்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை போற்றுவோம்பாதுகாப்போம்..


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...