மொத்தப் பக்கக்காட்சிகள்

மஹிந்திரா ஃபைனான்ஸ், மேனுலைஃப் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்

மஹிந்திரா ஃபைனான்ஸ், மேனுலைஃப் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்

மஹிந்திரா ஃபைனான்ஸ் மற்றும் மேனுலைஃப் இணைந்து இந்தியாவில் கூட்டு சொத்து மேலாண்மை நிறுவனம் உருவாக்கம்

இந்த 51:49 கூட்டுத் திட்டம்,  இந்திய சிறு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு உலகளாவிய சிறந்த நடைமுறைகளையும் செயல்முறைகளையும் வழங்கும்


மஹிந்திரா & மஹிந்திரா  ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra & Mahindra Financial Services Limited) அதன் துணை நிறுவனமான மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Mahindra Asset Management Company Private Limited) மூலம் முன்னணி உலகளாவிய நிதிச் சேவை குழுமமான மேனுலைஃப் (Manulife*) உடன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை இயக்க கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த 51:49 கூட்டு முயற்சி, இந்தியாவில் நிதி வழங்கல்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் அதிகமாக முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கூட்டு முயற்சி மஹிந்திராவின் உள்நாட்டு சந்தை வலிமை மற்றும் வணிகங்களை வெற்றிகரமாக உருவாக்குவதற்காக அதன் முந்தைய அனுபவங்கள் உதவிகரமாக இருக்கும்.  இந்த நிறுவனம், வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளது.  மேனுலைஃப் நிறுவனத்தின் உலகளாவிய செல்வம் மற்றும் சொத்து மேலாண்மை திறன்கள் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் ஆசிய நாடுகளின் முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.

மேனுலைஃப் ஒரு முன்னணி சர்வதேச நிதி சேவைக் குழுமம் ஆகும். இது முதன்மையாக உலகளவில் மேனுலைஃப் (Manulife) ஆகவும், அமெரிக்காவில் ஜான் ஹான்காக் (John Hancock) ஆகவும் செயல்படுகிறது, இது உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள், குழுக்கள் மற்றும்  நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு செல்வம் மற்றும் சொத்து மேலாண்மை தீர்விகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு தீர்வுகளை வழங்கி வருகிறது. மார்ச் 31, 2019 நிலவரப்படி 84,900 கோடி அமெரிக்க டாலர் (** ரூ. 58.98 லட்சம் கோடி) மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது.

மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி என்கிற மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம் (மஹிந்திரா ஏ.எம்.சி) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது ஒன்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக ரூ. 5,019 கோடி நிதியை நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு 400 நகரங்களில் 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர் கணக்குகள் இருக்கின்றன. மஹிந்திரா ஏ.எம்.சி-க்கும் 11,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள்.

மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ரமேஷ் ஐயர் (Mr. Ramesh Iyer, Vice-Chairman & Managing Director, Mahindra Finance), கூறும் போது, “மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில்  வலுவான நிதி சேவைகள் இருக்கின்றன. நாங்கள் முதலீட்டாளர்களின் தேவை அறிந்து, அதற்கு ஏற்ப புதுமையான திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் மூலம் நாடு முழுவதும் எங்கள் முதலீட்டாளர்களுக்கு மதிப்பு சேர்க்கிறது..சிறு முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு சேவை செய்யும் சந்தையில் முன்னணி சொத்து மேலாண்மை வணிகத்தை உருவாக்குவதற்கான பொதுவான பார்வையை மஹிந்திரா & மேனுலைஃப் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவில் மிகவும் விருப்பப்படும்  சொத்து மேலாண்மை நிறுவனமாக இருக்கிறோம்.
எங்களின் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு தனித்துவமான மதிப்பு மிக்க முதலீட்டு நிறுவனமாக செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மேனுலைஃப் -ன் சொத்து மற்றும் செல்வ மேலாண்மை அனுபவம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டுள்ளது. வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த சந்தைகளில் அவர்கள் சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். வணிக உத்தியாக மேனுலைஃப் உடன் கூட்டு சேர்ந்திருப்பதை  வரவேற்கிறோம். இந்தியாவில் பரஸ்பர நிதி என்கிற மியூச்சுவல் ஃபண்ட் (mutual fund) முதலீட்டை அதிகரிப்பதற்கும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் எங்கள் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்க இந்தக் கூட்டு உதவும்.”

மேனுலைஃப் ஆசியாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் பிரசிடென்ட் திரு. அனில் வாத்வானி (Mr. Anil Wadhwani, CEO & President of Manulife Asia), கூறும் போது “ பரஸ்பர நிதிகள், முதலீட்டுடன் இணைந்த  திட்டங்கள் (investment linked products) மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை முழுமையான முதலீட்டுச் சலுகைகளுடன் அளித்து வருகிறோம்.  அதாவது, ஆசிய கண்டத்தில் உள்ள 16 நாடுகளில் கோடிக்கும் (10 million) அதிகமான வாடிக்கையாளர்களுக்கு முதலீட்டு சேவைகளை வழங்கி வருகிறோம். எங்கள் தற்போதைய வணிகத்திலிருந்து அனுபவத்தைப் பெறுவதன் மூலம் இந்தியாவில் வளர்ந்து வரும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு சேவை செய்ய மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மஹிந்திராவின் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கு எங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஒன்றாக இணைந்து செயல்படுவது மூலம் நாங்கள் முதலீட்டு முடிவுகளை எளிதாக்குவோம், இந்தியர்களின் வாழ்க்கையை சிறப்பாக மேம்படச் செய்வோம்.”

மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் மற்றும் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. அசுதோஷ் பிஷ்னோய் Mr. Ashutosh Bishnoi, MD & CEO, Mahindra Asset Management Company) கூறும் போது, “மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி, கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் பாரம்பரிய முதலீட்டு சந்தைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்தச் சந்தைகளில் முதலீட்டு திட்டங்களுக்கு மிகப் பெரிய தேவையும் வளர்ச்சிக்கான சாத்தியமும் இருப்பதை எங்கள் அனுபவம் காட்டுகிறது. மேனுலைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் (Manulife Asset Management) நிறுவனம், மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன்  சரியான  வணிக உத்தி பங்காளியாக பொருந்துகிறது. காரணம், அவர்கள் உலகளாவிய சிறந்த நடைமுறைகள், செயல்முறைகள் மற்றும் சிறந்த நிதி மேலாண்மை திறமைகளை கொண்டிருக்கிறார்கள். உலகளாவிய வளர்ந்து வரும் சந்தைகளில் மேனுலைஃப் கொண்டுள்ள அனுபவம், வளரும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.”

*மேனுலைஃப் உடனான கூட்டுக்கு மேனுலைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் (சிங்கப்பூர்) பிரைவேட் லிமிடெட் (Manulife Asset Management (Singapore) Pte. Ltd) உடன் ஒப்பந்தம் கையொப்பம் இடப்படும்
** 1$= ரூ.  69.47

மேனுலைஃப் ஆசியாவின் தலைவர் (செல்வம் மற்றும் சொத்து மேலாண்மை) திரு. மைக்கேல் டோமர்முத் (Mr. Michael Dommermuth, Head of Wealth and Asset Management, Manulife Asia), கூறும் போது, “எங்கள் அனுபவத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு அளிக்க மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு சேருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் எங்களின் உலகளாவிய முதலீட்டுச் சேவை பயணம் மேலும் விரிவடைந்திருக்கிறது. மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனம், எங்களின் கூட்டு மூலம் ஆசிய நாடுகளில் முதலீட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் முன்னணி நிறுவனமாக, சந்தைத் தலைவராக (market leader) மாறியுள்ளது.”

மஹிந்திரா பற்றி 

மஹிந்திரா குழுமம், (Mahindra Group) 2,070 கோடி அமெரிக்க டாலர் (USD 20.7 billion) மதிப்பு கொண்டது. இது, கிராமப்புற வளர்ச்சி, சிறிய நகரங்களின் வளர்ச்சி, புதிய வணிகம் போன்றவற்றில் நாட்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறது. மேலும் பயன்பாட்டு வாகனங்கள் (utility vehicles), தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சுற்றுலா  இல்லங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறது. உற்பத்தி எண்ணிக்கை அடிப்படையில்  உலகின் மிகப் பெரிய டிராக்டர் நிறுவனம். வேளாண் வணிகம், வாகன உதிரிப் பாகங்கள், வர்த்தகவாகனங்கள், விரைவுப்படகுகள், ஆலோசனை சேவைகள், எரிசக்தி, தொழிற்சாலை கருவிகள், சரக்கு போக்குவரத்து, ரியல் எஸ்டேட், உருக்கு, விமானம், ராணுவம், இரு சக்கர வாகனம் என பல்துறை நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.இந்தியாவை தலைமையிடமாக கொண்ட இந்தக் குழுமத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,40,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்,

மஹிந்திரா பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள www.mahindra.com / Twitter and Facebook: @MahindraRise

மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் பற்றி..! 

மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (மஹிந்திரா ஃபைனான்ஸ்), என்பது இந்தியாவின் முன்னணி வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான  மஹிந்திரா குழுமத்தின் ஓர் அங்கம். கிராமப்புறம் மற்றும்சிறிய நகர்புறங்களில் கவனம் செலுத்தி வரும், மஹிந்திரா ஃபைனான்ஸ் 61 லட்சம் (6.1 million) மேலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதோடு 970 கோடி அமெரிக்க  டாலருக்கு (USD 9.7 billion ) மேலான நிதிச் சொத்துகளை  நிர்வகித்து வருகிறது. மஹிந்திரா ஃபைனான்ஸ், வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் வாங்க கடன் அளிக்கும் முன்னணி நிறுவனம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) நிலையான வைப்புகளும் கடன்களும் வழங்குகிறது. இதற்கு நாடு முழுவதும் 1,300 அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் நாடு முழுக்க 7,000 நகரங்கள் மற்றும் 3,60,000 கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை அலித்து  வருகிறது.

டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டில் (Dow Jones Sustainability Index), வளர்ந்து வரும் பங்குச் சந்தைகள் பிரிவில் (Emerging Market Category) பட்டியலிடப்க போகும் இந்தியாவைச் சேர்ந்த ஒரே வங்கிசாரா நிதி நிறுவனமாக மஹிந்திரா ஃபைனான்ஸ் இருக்கும்.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான, இந்தியாவில் பணிபுரிய மிகச் சிறந்த  நிறுவனங்கள் (Best Companies to work for 2018, by Great Place to Work® Institute) என்பதில் 14வது  இடத்தை மஹிந்திரா ஃபைனான்ஸ் பிடித்துள்ளது. மேலும், த எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) -இதழின் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் சிறந்த பிராண்ட்கள் (BFSI Brands) பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த சில்லறை வங்கிசாரா நிதி நிறுவனம் (Retail NBFC) என்கிற விருதை அவுட்லுக் மணி இதழ் இந்த நிறுவனத்துக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்த நிறுவனத்தின், இன்சூரன்ஸ் தரகு துணை நிறுவனம், மஹிந்திரா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் (Mahindra Insurance Brokers Limited -MIBL)  ஆக உள்ளது. நேரடி மற்றும் மறுகாப்பீட்டு பரிமாற்ற சேவைகள் வழங்கும் உரிமம் பெற்றது மஹிந்திராஃபைனான்ஸின் துணை நிறுவனமான மஹிந்திரா ரூரல் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Mahindra Rural Housing Finance Limited - MRHFL) நாட்டிலுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகர பகுதிகளில் உள்ள தனிநபர்களுக்கு வீடு வாங்க,வீட்டை புதுப்பிக்க, வீடு கட்ட கடன் வழங்கி வருகிறது.

மஹிந்திரா ஃபைனான்ஸின் முழுமையான துணை நிறுவனம், மஹிந்திரா அஸெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Mahindra Asset Management Company Private Limited - MAMCPL),  மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளராக  (Investment Manager) செயல்படுகிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவில் மஹிந்திரா ஃபைனான்ஸ் யு.எஸ்.ஏ  எல்எல்.சி. (Mahindra Finance USA LLC)  என்கிற பெயரில் கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.  இது அமெரிக்காவில் டிராக்டர்கள் வாங்க கடன் வழங்க, ராபோ வங்கியின் (Rabo Bank) துணை நிறுவனமான டி லாஜ் லான்டன் (De Lage Landen)  கூட்டுச் சேர்ந்து செயல்பட்டு வருகிறது

மேனுலைஃப் பற்றி..!

மேனுலைஃப்  ஃபைனான்ஸியல் கார்ப்பரேஷன் (Manulife Financial Corporation) ஒரு முன்னணி சர்வதேச நிதிச் சேவைக் குழுமம் ஆகும். இது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு முடிவுகளை எளிதாக எடுக்க உதவுகிறது மற்றும் சிறப்பாக வளமாக வாழ உதவுகிறது. இந்தக் குழுமம், முதன்மையாக அமெரிக்காவில் ஜான் ஹான்காக் (John Hancock) ஆகவும் பிற நாடுகளில் மேனுலைஃப் எனவும் செயல்பட்டு வருகிறது. தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் / அமைப்புகளுக்கு நிதி ஆலோசனை, காப்பீடு, செல்வம் சேர்த்தல் மற்றும் சொத்து மேலாண்மை தீர்வுகளை வழங்கி வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு  இறுதி நிலவரப்படி, இந்தக் குழுமத்தில் 34,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 82,000-க்கும் மேற்பட்ட முகவர்கள் (agents) மற்றும் ஆயிரக்கணக்கான விநியோகஸ்தர்கள் இருந்தனர். கிட்டத்தட்ட 2.8 கோடி (28 million) முதலீட்டாளர்களுக்கு சேவை செய்கிறது.

2019 மார்ச் 31, நிலவரப்படி, மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் கீழ்  C$ 1.1 டிரில்லியன் (அமெரிக்க $ 849 பில்லியன்) சொத்துகளை நிர்வகித்து வந்தது. அதற்கு முந்தைய 12 மாதங்களில் C$29.4 பில்லியன் தொகையை அதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கி இருக்கிறது.
ஆசியா, கனடா மற்றும் அமெரிக்காவில் முதன்மையாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறோம்.

கனடாவின் டொராண்டோ நகரில் இதன் உலகளாவிய தலைமையகம் உள்ள்ளது., டொராண்டோ, நியூயார்க் மற்றும் பிலிப்பைன்ஸ் பங்குச் சந்தைகளில் எம்.எஃப்.சி (MFC) ஆகவும் ஹாங்காங் பங்குச் சந்தையில்  945 எனவும் இதன் பங்குகள்   வர்த்தகமாகி வருகின்றன.

மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பற்றி

மேனுலைஃப் ஃபைனான்ஸியல் கார்ப்பரேஷன் (Manulife Financial Corporation) குழுமத்தின் சர்வதேச செல்வம் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனமாக மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட்  (Manulife Investment Management) திகழ்கிறது.

உலகளவில்  இந்த  நிறுவனம், சிறு முதலீட்டாளர்கள் மற்றும் ஓய்வூதிய முதலீட்டு திட்ட வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் 150 ஆண்டுகளுக்கும் மேல் நிதி சேவையை அளித்து வருகிறது.

நிதி நிர்வாகத்திற்கான  இதன் நிபுணத்துவ அணுகுமுறையானது, நிலையான வருமானம், சிறப்பு வகை பங்கு முதலீடுகள், பல சொத்து முதலீட்டு தீர்வுகள் (fixed-income, specialized equity, multi-asset solutions) மற்றும் தனியார் சந்தைக் குழுக்களின் மிகவும் வேறுபட்ட உத்திகளை உள்ளடக்கியது. அத்துடன் இதன் மல்டி மேனேஜர் மாதிரி (multimanager) புகழ் பெற்றதாக உள்ளது. ஓய்வூதிய திட்டமிடலுக்கான இந்த நிறுவனத்தின்  பிரத்யேக அணுகுமுறை, புள்ளி விவரங்கள் அடிப்படையில் அமைந்தது. இதில், பங்கேற்பவர்கள் கண்ணியத்துடன் ஓய்வு பெற உதவும் வகையில் அனைத்து அளவிலான ஓய்வூதிய திட்டங்களில் நிதி ஆரோக்கியத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

டொராண்டோவை தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்காவைத் தவிர, உலகம் முழுவதும் மேனுலைஃப்  இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் (Manulife Investment Management) என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இதன் சில்லறை மற்றும் ஓய்வூதிய வணிகங்கள் முறையே ஜான் ஹான்காக் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் (John Hancock Investment Management) மற்றும் ஜான் ஹான்காக் (John Hancock) என செயல்படுகின்றன; ஆசியா மற்றும் கனடாவில், ஓய்வுதிய வணிகம் மேனுலைஃப் ஆக செயல்படுகிறது. மார்ச் 31, 20191 நிலவரப்படி, மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம்  C$837 பில்லியன் (அமெரிக்க $ 626 பில்லியன்) சொத்துகளைக் கொண்டிருந்தது.

 எல்லா சலுகைகளும் அனைத்து நீதிமன்ற வரம்புகளிலும் கிடைக்காது.(Not all offerings are available in all jurisdictions.)

கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள இணையதளத்தை பார்வையிடவும்.  manulifeinvestmentmgt.com.

1. ஆதாரம்: MFC financials. Global Wealth and Asset Management AUMA at March 31, 2019 was C$837 billion (US$626 billion) and includes C$189 billion (US$141 billion) of assets managed on behalf of other segments and C$134 billion (US$100 billion) of assets under administration.

Media Contact:
Metabelle Lobo        Biren Shah
Head – Corporate Communications        Marketing & Corporate Communication
Mahindra Finance        Mahindra Asset Management Company
Mobile: +91 9769212078        Mobile: +91 9833076076
E-mail: lobo.metabelle@mahindra.com                                         E-mail: shah.biren3@mahindra.com
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...