மொத்தப் பக்கக்காட்சிகள்

கட்டணங்கள் எதுவானாலும் ஆக்சிஸ் பேங்க் இருக்க கவலை ஏன்? ஆதார் மாற்றங்களையும் மேற்கொள்ளலாம்.. !


கட்டணங்கள் எதுவானாலும் ஆக்சிஸ் பேங்க் இருக்க கவலை ஏன்?  ஆதார் மாற்றங்களையும் மேற்கொள்ளலாம்.. !

ஆக்சிஸ் வங்கி, தமிழ்நாடு மீதான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது..!

ஆக்சிஸ்  வங்கியின் தலைவர் மற்றும்  வங்கிக் கிளைகள் தலைவர் திரு ரவி நாராயணன், (Mr. Ravi Narayanan, President & Head Branch Banking, Axis Bank),  வங்கி கிளைகளின் முக்கியத்துவம் மற்றும் தமிழ்நாட்டில் ஆக்சிஸ் வங்கி எடுத்து வரும் முன்முயற்சிகளை சுருக்கமாக விளக்கி கூறினார்.

ஒட்டுமொத்த வளர்ச்சி  உத்தியாக, வங்கிக் கிளைகள் விரிவாக்கம் மற்றும் சில்லறை வங்கியில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
தனியார் வங்கிகளில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியான இது இந்தியா முழுவதும் வலுவான கிளை ஒருங்கிணைப்பை கொண்டுள்ளது.

2019 மார்ச் 31, நிலவரப்படி, நாடு முழுவதும் இந்த வங்கிக்கு 4,050 கிளைகள், 11,801 ஏ.டி.எம் மையங்கள் மற்றும் பணம் டெபாசிட் செய்யவும் எடுக்கவும் வசதி கொண்ட 4,917  ரீசைக்ளர்கள் (recyclers)  உள்ளன.


2018-19 ஆம் நிதி ஆண்டில் இந்தியா முழுக்க புதிதாக 347 கிளைகளை திறந்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் 314 கிளைகளும் 1,400 ஏ.டி.எம் மையயங்களும் உள்ளன

நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டிற்குள் தமிழகத்தில் 28 கிளைகளையும் 34 ஏ.டி.எம் மையங்களையும் அமைப்பதன் மூலம் தமிழகத்தில் தனது கால்களை வலுவாக ஊன்ற இந்த வங்கி  திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதும் ஆதார் பதிவு மற்றும் தகவல் புதுப்பிப்பு (Aadhaar enrolment and updation) பணிக்கு என 31 சிறப்பு  கிளைகள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள், சென்னை  மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம் (Municipal Corporations of Tamil Nadu, Greater Chennai Corporation, Tamil Nadu Electricity Board) போன்ற பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டண தீர்வுகளை வழங்க ஆக்சிஸ் வங்கி, தமிழக அரசுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

விவசாயம் மற்றும் கால்நடை  (Farming & Livelihood)

1.     தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) (Tamil Nadu Milk Producers Cooperative Federation Ltd - AAVIN): பண மேலாண்மை சேவைகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இணையம் மூலம் தொகை வழங்குதல்

2.     தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு நிறுவனம் (Tamil Nadu Horticulture Development Agency): பணம் செலுத்துதல் தீர்வு - பி.எஃப்.எம்.எஸ் என்கிற பொது நிதி மேலாண்மை அமைப்பு(PFMS- Public Financial Management System) மூலம் பயனாளிகளுக்குபணம் வழங்குதல். மாவட்ட அளவிலான முன்னோடி சிறப்பு கணக்குகள் (nodal accounts)

3.      தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் (Tamil Nadu Agri Marketing Board):  மாநிலம் முழுவதும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் விவசாயிகளுக்கு இணையம் மூலம் பணம் செலுத்துவற்காக, சந்தைப்படுத்தல் வாரியம் மற்றும் என்.இ.எம்.எல் (என்.சி.டி.எக்ஸ் மார்க்கெட் லிமிடெட்) ஆகிய இரண்டு உடனும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது 

4.     தமிழ்நாடு கால்நடை நிறுவனம் (Tamil Nadu Livestock Agency): மத்திய மற்றும் மாநில அரசு திட்ட நிதிகள் மற்றும் செயல்படுத்தும் முகவர் நிறுவனங்களுக்கான பணம் செலுத்துதல்கள்

5.     கால்நடை பராமரிப்புத் துறையின் இலவச செம்மறி மற்றும் வெள்ளாடு திட்டம் (Department of Animal Husbandry for Free sheep and goat scheme:) மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கான  பணம் வழங்குதல்

6.     தமிழகத்தின் மாநகராட்சிகள் (Municipal Corporations of Tamil Nadu): ஸ்வச் பாரத் மிஷன், திடக்கழிவு மேலாண்மை (Swaach Bharat Mission, Solid Waste Management) போன்ற பல்வேறு  திட்டங்களுக்கான வரி வசூல் மற்றும் பணம் செலுத்துவதை நிர்வகித்தல்.


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான கட்டண தீர்வுகள் (Payment Solutions for Schools & Colleges)

1.      ..டி சென்னை (IIT Chennai): ஸ்பான்சர்ஷிப்கள் (sponsorships)  தொகைகளை பெற்றுக்கொடுத்தல் 

2.     சென்னை பல்கலைக்கழகம் (University of Madras): அந்நியச் செலாவணித் தீர்வு (Forex solution) - வெளிநாட்டு தேர்வாளர்களுக்கு பணம் செலுத்துதல்

3.     அழகப்பா பல்கலைக்கழகம் & பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Alagappa University & Bharatidasan University): மாணவர்களுக்கான கட்டண வசூலுக்கு எளிதான இணையத்  தீர்வு

4.     அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் (Government Medical Colleges and Hospitals): கோயம்புத்தூர், சேலம், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மதுரையில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு பி.எஃப்.எம்.எஸ் மூலம் மத்திய மற்றும் மாநில திட்டங்களுக்கான  பணம் செலுத்தல்களை கையாளுதல்

5.     தமிழ்நாடு பாடநூல் கழகம் (Tamilnadu Textbook Corporation): தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக் கூடங்களிலிருந்து பாடநூல்களின் விற்பனை மூலமான பணம் வசூல்  (சுமார் 4,000 பள்ளிக் கூடங்கள்).

மற்றவை
1.     தமிழ்நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board - TANGEDCO): தமிழ்நாட்டில் மின்சார கட்டணங்களை இணையம் மற்றும் வங்கி கிளை மூலம் வசூலிப்பது

2.     பாதுகாப்பு பிரிவு (Defence Segment): தமிழகம் முழுவதும் சலுகை விலை உணவகங்களில் (canteen)  பண மேலாண்மை சேவைகள் மற்றும் பி.ஓ.எஸ் (POS) இயந்திரங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு மாதாந்திர நுகர்வு செலவுகளுக்கான பணம் செலுத்த என்.ஏ.சி.ஹெச் (NACH) தீர்வு வழங்கப்பட்டுள்ளது

3.     கிராம மேம்பாடு & பஞ்சாயத்துராஜ் (Rural Development & Panchayatraj): பணப்பட்டுவாடா தீர்வு- திட்ட நிதியை பயனாளிகளுக்கு வழங்குதல்

4.     நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Limited) : இந்த நிறுவனத்தின் 500 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு 950 கோடி ரூபாய் கடன்

5.     காமராஜர் துறைமுகம் (Kamarajar Port): நிறுவனத்தின் பணியாளர்களுக்கு சம்பளத் தீர்வு மற்றும் துறைமுக கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுக்காக 47 மில்லியன் டாலர் (47 million USD) கடன்

6.     தூத்துக்குடி துறைமுகம் (Tuticorin Port): சுங்க வரி (customs duty) வசூலுக்கான சுலப இணைய வசதி

வங்கியின் அடிப்படை செயல்பாடுகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், ரூபே அட்டை (RUPAY card) பயன்பாடு,  ஆக்சிஸ் ஓகே (Axis OK) திட்ட பயன்பாடு, மைக்ரோ ஏ.டி.எம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) போன்றவை பற்றி சொல்லிக்கொடுக்க கிராமப்புறங்கள் மற்றும் வங்கிச் சேவை சென்று சேராத இடங்களில், ஆக்சிஸ் வங்கி 2018-19 ஆம் நிதி ஆண்டில் 791 நிதி எழுத்தறிவு பிரச்சாரங்களை (Financial Literacy Campaigns) நடத்தியுள்ளது.

ஆக்சிஸ் வங்கி, அதன் சமூக பொறுப்புணர்வு முயற்சிகளின் (CSR initiatives) ஒரு பகுதியாக, ஆக்சிஸ் வங்கி அறக்கட்டளை (Axis Bank Foundation- ABF)  மூலம் உள்ளூர் சமூக சேவை நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாடுகள் தொடர்பான திட்டங்களில் பணியாற்றியுள்ளது.

சில முன்முயற்சிகள் வருமாறு:
சமுதாய அணிதிரட்டல் (community mobilization) மூலம் குடும்பவ வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்காக ஏ.பி.எஃப், தான் வயலகம் (டேங்க்) அறக்கட்டளை - (டி.வி.டி.எஃப்) { Dhan Vayalagam (Tank) Foundation - DVTF) உடன்  கூட்டு சேர்ந்துள்ளது. முதல் நிலையில்  இந்தத் திட்டம் 49,114 தனி நபர்களை சென்றடைந்தது. முதல் நிலையில்  இந்தத் திட்டம் 70,000 குடும்பங்களை சென்றடைந்தது. ஐந்தாண்டு திட்டமான இது 2017  ஏப்ரல் முதல் நடந்து வருகிறது.


யூத் 4 ஜாப்ஸ் ஃபவுண்டேஷன் என்கிற ஒய் 4 ஜேஎஃப் (Youth 4 Jobs Foundation - Y4JF)) உடனான கூட்டு மூலம் சந்தை இணைக்கப்பட்ட பயிற்சிகள் மூலம் 15,750 மாற்று திறனாளிகளுக்கு (
Persons With Disabilities -
PwDs)  வாழ்வாதார வாய்ப்புகளை வழங்க ஏ.பி.எஃப் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலைகள் மற்றும் பி.டபிள்யூ.டிகளின் திறன்களைப் பற்றி முதலாளிகளுக்கு உணர்த்துகிறது.  இந்தத் திட்டம் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில்  1,940 பி.டபிள்யூ.டி களை எட்டும். நடப்பு 2019-20 ஆம் நிதி ஆண்டில் இந்தத் திட்டம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, ஜார்க்கண்ட், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது.

இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி அளிக்க ஏ.பி.எஃப், டான் போஸ்கோ டெக் சொசைட்டி (டி.பி டெக்) (Don Bosco Tech Society - DB Tech)) உடன் இணைந்துள்ளது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் 150 இளைஞர்களை சென்றடைய  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2019-20 ஆம் நிதி ஆண்டில் இந்தத் திட்டம், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மத்தியப்
பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் சண்டிகரில் அமல்படுத்தப்படுகிறது.


ஆக்சிஸ் வங்கி பற்றி:
                                        
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)  இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தனியார் வங்கி. ஆக்சிஸ் வங்கி, பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், எஸ்.எம்.இ., வேளாண் மற்றும் சில்லறை வர்த்தக வணிகங்கள் உள்ளடக்கிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு முழு அளவிலான சேவைகளை வழங்குகிறது. 2018 டிசம்பர்   31 ஆம் தேதி நிலவரப்படி, இந்த வங்கி,இந்தியாவில் 3,964 கிளைகள் (விரிவாக்க மையங்களையும் சேர்த்து) மற்றும் நாடு முழுக்க 12,705 ஏ.டி.எம் மையங்களை கொண்டுள்ளது.  ஆக்சிஸ் வங்கி, 2,321 நகரங்களில் இயங்கி வருகிறது.  இந்த வங்கி, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் (டி.ஐ.எஃப்.சி-ல்), ஷாங்காய் மற்றும் கொழும்பு உள்ளிட்ட 10 வெளிநாட்டு அலுவலகங்களை (overseas offices) கொண்டுள்ளது. துபாய், அபு தாபி, ஷார்ஜா மற்றும் டாக்காவில் பிரதிநிதி அலுவலகங்களையும் (representative offices), இங்கிலாந்தின் லண்டன் நகரில் வெளிநாட்டு துணை நிறுவனம்   ஒன்றையும் கொண்டுள்ளது.




Axis Bank
Shruti Mudup
AdfactorsPR

Timothy J

+919962629240


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...