மொத்தப் பக்கக்காட்சிகள்

ரியல் எஸ்டேட் முதலீடு: முந்தும் பெங்களூரு நகரம்


ரியல் எஸ்டேட் முதலீட்டில் 2019 ஆம் ஆண்டில் ஆசிய பசிபிக் அளவில் முதல் இந்திய நகரமாகவும் முதல் பத்து இடங்களில் ஒன்றாகவும் பெங்களூரு திகழ்கிறது

-         பெங்களூரு நகரில் 2017-18 ஆம் நிதி ஆண்டில் செய்யப்பட்ட மொத்த  ரியல் எஸ்டேட் முதலீடு கிட்டத்தட்ட 80 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது 2018-19-ல் இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
-         முதல் இந்திய ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்ன்மென்ட் டிரஸ்ட் (REIT)  அறிமுகப்படுத்தப்பட்டதும் அதன் விளைவாக மேம்பட்ட ரியல் எஸ்டேட் சந்தை வெளிப்படைத்தன்மையும் இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் அதிக ஆர்வம் உருவாக காரணமாக அமைந்தது.

 புது டெல்லி , 19 ஜூன் 2019:  சி.பி.ஆர். சவுத் ஆசியா பிரைவேட் லிமிடெட் (CBRE South Asia Pvt. Ltd) ந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆசிய பசிபிக் முதலீட்டாளர் நோக்கங்கள் ஆய்வு 2019 (Asia Pacific Investor Intensions Survey 2019) மூலம் கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரு, ரியல் எஸ்டேட் முதலீட்டில் ஆசிய பசிபிக் அளவில் முதல் பத்து இடங்களைக் கொண்ட பட்டியலில் (top ten destinations) இடம்பிடித்திருக்கிறது.

இந்த சர்வே மூலம், முதல் இந்திய ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்ன்மென்ட் டிரஸ்ட் ஆன ரெய்ட் (எம்பஸி-பிளாக்ஸ்டோன்) (REIT- Embassy-Blackstone)  அறிமுகப்படுத்தப்பட்டதால், ஆசிய பசிபிக் அளவில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் மிகவும் விரும்பப்படும் முதல் ஐந்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா முன்னேறியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ரியல் எஸ்டேட் சந்தை வெளிப்படைத்தன்மையும் (market transparency) மேம்பட்டிருக்கிறது.
இந்தப் போக்குக்கான காரணங்களாக,  புதிய உள்கட்டமைப்பு மற்றும் சந்தையில் சாத்தியமான வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவை உள்ளன.
                     
முதல் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்ன்மென்ட் டிரஸ்ட், இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் எம்பஸி குழு மற்றும் பிளாக்ஸ்டோன் குழு எல்பி (Embassy Group and Blackstone Group LP) ஆகியவற்றால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய நாட்டில் ரியல் எஸ்டேட் முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலக சொத்துகளில் மேம்பட்ட முதலீட்டாளர் உணர்வு (sentiment)  ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு, தரமான கட்டிடங்களை கட்ட நிதி திரட்டும் சாத்தியத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும்,  இந்த முன்னேற்றம் கட்டிடங்களை குத்தகை / வாங்குதல் (lease / purchase) செயல்களை தூண்டுவதாக இருக்கிறது.


இந்த ஆய்வு முடிவுகள் குறித்து, அன்ஷூமான் மேகஸின்,  சேர்மன் மற்றும்  முதன்மை செயல் அதிகாரி - ந்தியாதென் கிழக்கு சியாமத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா, சி.பி.ஆர்.  (Anshuman Magazine, Chairman and CEO, India, South East Asia, Middle East and Africa, CBRE) கூறும் போது,ரியல் எஸ்டேட் விருப்பமான முதலீட்டு இடங்களின் பட்டியலில் பெங்களூரு முதல் இந்திய நகரமாக இடம் பெற்றுள்ளது. அதன் வளர்ச்சி  நற்பெயரால் நடந்திருக்கிறது. குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதி கொண்ட நகரமாக இருப்பதால் அலுவலகம், சில்லறை விற்பனை மற்றும் குடியிருப்பு பிரிவுகளில் பல முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.
                                                                                    
ஆசிய பசிபிக் பகுதியில் இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் ஒட்டுமொத்த நிலைப்பாடு குறித்து அவர் கூறும் போது,ஆசிய பசிபிக் பகுதியில் அலுவலக சொத்துகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் உள்ளது. இதை தொடர்ந்து, தொழில்துறை மற்றும் சரக்குப் போக்குவரத்துகள், ஹோட்டல்கள் மற்றும் சில்லறை விற்பனை ஆகியவை ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கான விருப்பமான துறைகளாக தெரிய வந்துள்ளன.  இந்தியாவில் முதலீட்டிற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன.
மேலும் சரக்குப் போக்குவரத்துத் துறையில் அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் வளர்ந்து வரும் தேவை, குறிப்பாக, இந்தச் சந்தையில் வாய்ப்புகளைத் தேட ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களைத் தூண்டும்.”

சர்வேயின் இதர முக்கிய அம்சங்கள் (Other key findings of the survey):

-        ஆசிய பசிபிக் முழுவதும் தரமான முதலீட்டுக்கான கட்டிடங்கள் கிடைப்பது முதலீட்டாளர்களுக்கு இப்போதும் சவாலாக உள்ளது. வளர்ச்சி அடைந்த சந்தைகளான குறிப்பாக சிங்கப்பூர், ஹாங் ஹாங் மற்றும் ஜப்பானில் நீண்ட கால முதலீடாக நிறுவனத் தரத்திலுள்ள சொத்துகளை வாங்குவது சிக்கலாக உள்ளது.

-        முதலீட்டு மீதான இடர்ப்பாட்டு காரணிகளை (risk factor) தாண்டி சொத்துகளை வாங்குபவர்கள் அதிக வருமானம் மற்றும் மதிப்பு மிக்க கட்டிடங்களை வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் தேடி வருகிறார்கள். இந்த சர்வே 2014-லிருந்து நடந்து வருகிறது. இப்போது முதன் முறையாக ஆசிய பசிபிக் அளவில் முதலீட்டுக்கு ஏற்ற ரியல் எஸ்டேட் இடமாக, முதல் பத்து இடங்களுக்கு பெங்களூரு முன்னேறி இருக்கிறது.

-        ஆசிய பசிபிக் நாடுகளில் அதிகமான முதலீட்டாளர்கள், நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதை விட சொத்துகளில் முதலீடு செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

-        சொத்துகளுக்கு கடன் வழங்கும் போது கடன் மற்றும் சொத்து மதிப்பு விகிதத்தை வங்கிகள் தீவிரமாக தற்போது பின்பற்றுகின்றன. ஆசிய நாடுகளில் அதிக மூத்தக் குடிமக்கள் இருப்பதால் ஓய்வு இல்லங்களில் முதலீடு செய்ய ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.


பெங்களூரு பற்றிய சில முக்கிய உண்மைகள் (Some key facts about Bengaluru):

தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உற்பத்தி மற்றும் பிற துறைகளில் முன்னணியில் இருப்பதால் பெங்களூரு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கடந்த இரண்டு பத்தாண்டுகளில், இது  ஓய்வூதியதாரர்கள்சொர்க்கம்’ (Pensioners’ Paradise)என்பதிலிருந்து இருந்து இந்தியாவின்சிலிக்கான் பள்ளத்தாக்கு’ (Silicon Valley) ஆக மாறி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறியுள்ளது.

·        நாட்டின் முக்கிய முதலீட்டு இடங்களில் ஒன்றாக அறியப்பட்ட கர்நாடகா, சுலபமாக தொழில் செய்யும் (Ease of Doing Business) மாநிலங்கள் தரவரிசை பட்டியல் 2017 ஆம் ஆண்டில், இந்திய அளவில்  மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டை விட முன்னதாக எட்டாவது இடத்தில் இருந்தது.
·         சமூக முன்னேற்ற அட்டவணை 2017 (Social Progress Index 2017) இல், டெல்லிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கர்நாடகா உள்ளது.
·        இயந்திர கருவிகள் துறையில் கர்நாடகா முன்னணி மாநிலமாக இருக்கிறது. பெங்களூரு மட்டும் 2018 ஆம் ஆண்டில் இந்திய அளவில் 60% இயந்திர கருவிகளை (மதிப்பின் அடிப்படையில்) உற்பத்தி செய்தது.
·        2018 ஆம் ஆண்டின் மெர்சர் (Mercer)-ன் 'வாழவும் வேலை செய்யவும் சிறந்த இடம்' (Best place to live and work) பட்டியலில் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்தது.
·        கடந்த 2017-18 ஆம் நிதி ஆண்டில் பெங்களூரு நகரில் மொத்த  ரியல் எஸ்டேட் முதலீடு கிட்டத்தட்ட 80 கோடி அமெரிக்க டாலராக (USD 800 million) இருந்தது. இது 2018-19-ல் இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களின் முக்கிய ரியல் எஸ்டேட்  தேர்வாக வணிக சொத்துகள் உள்ளன.
·        2018 ஆம் ஆண்டின் 'காம்பஸ்'  இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ('Compass' Infrastructure) உலகளாவிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் வளர்ச்சி குறியீட்டில் (Global Startup Ecosystem Growth Index) பெங்களூரு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.


சி.பி.ஆர். குழுமம் பற்றி (About CBRE Group, Inc.)

சி.பி.ஆர். குழுமம் [CBRE Group, Inc. NYSE:CBRE), என்பது ஃபார்ச்சூன் 500 மற்றும்  எஸ்பி 500 பட்டியலில் டம் பெற்றிருக்கும் நிறுவனம். தன் தலைமை அலுவலகம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ளது. து உலக அளவில் மிகப் பெரிய வர்த்தக ரியல் எஸ்டேட் சேவைகள் மற்றும் முதலீட்டு (2017 ஆம் ஆண்டின் வருவாய் அடிப்படையில்) நிறுவனமாகும்.

ந்த நிறுவனத்துக்கு 80,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ருக்கிறார்கள். உலகம் முழுக்க சுமார் 450 அலுவலகங்கள் ருக்கின்றன.  சி.பி.ஆர்., ரியல் எஸ்டேட் துறையின் ஒருங்கிணைந்த சேவைகளை அளித்து வருகிறது.  வசதிகள், பரிமாற்றம், திட்ட மேலாண்மை, முதலீட்டு மேலாண்மை, சொத்து மதிப்பீடு, சொத்து குத்தகை, ஆலோசனை உத்திகள், சொத்து விற்பனை, அடமான சேவைகள் மற்றும் சொத்து அபிவிருத்தி சேவைகளை அளித்து வருகிறது.

கடந்த 1994 ஆம் ஆண்டில் ந்தியாவில் அலுவலகம் அமைந்த முதல் சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனம் (International Property Consultancy) சி.பி.ஆர்.இ.  ஆரம்பம் முதல் நல்ல வளர்ச்சியில்ருக்கும் ந்த நிறுவனத்தில், ந்தியா முழுக்க 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் 10 அலுவலகங்கள் உள்ளன. வற்றில் 8,000-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிபுணர்கள் சேவை அளித்து வருகிறார்கள். முன்னணி சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனம் என்கிற முறையில், பல்வேறு விதமான ரியல் எஸ்டேட் தீர்வுகளை குறிப்பாக, பிரத்யேக ஆலோசனைகள், மதிப்பீடுகள், மூலதன சந்தைகள், முகவர் சேவைகள், சொத்து சேவைகள் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றை அளித்து வருகிறது.

சி.பி.ஆர்.-ன் வழிகாட்டும் கொள்கை (guiding principle) மூலதன ஆதாயங்களை மேலும் உற்பத்தி செய்யும்  தீர்வுகளை வழங்குவதாக ருக்கிறது. மேலும், வர்த்தக ரியல் எஸ்டேட்டின் அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை அளிப்பதாகவும் ருக்கிறது.

கடந்த 2008 ஆண்டு ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் சி.பி.ஆர். சேர்க்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி து 207-வது டத்தில் ருக்கிறது. து லிப்சே (Lipsey) நிறுவனத்தால் (Lipsey Company) தொடர்ந்து 17 ஆண்டுகளாக தொழிற்துறையின் சிறந்த பிராண்ட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்றும்
ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஃபார்ச்சூன் நிறுவனத்தின் "மிகவும் விருப்பப்படும் நிறுவனங்கள்" (Most Admired Companies) என்கிற விருதை பெற்று வந்துள்ளது.

ட்வீட்டரில் பின் தொடரவும்:
Twitter: @cbre_India


For more information:
Anshuman Dutta
Anshuman.gunjan@cbre.com
Mobile: +91 9971553969

Supreet Ahuja
supreet.ahuja@adfactorspr.com
Mobile: +91 99992 02252

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...