மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆதித்ய பிர்லா சன் லைஃப் பார்மா & ஹெல்த்கேர் ஃபண்ட் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000


 ஆதித்ய  பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆதித்ய பிர்லா சன் லைஃப்  பார்மா & ஹெல்த்கேர் ஃபண்ட்  அறிமுகம்

பார்மா & ஹெல்த்கேர் சேவைகள் துறையில் முதலீடு செய்யும் ஓப்பன் எண்டெட் ஈக்விட்டி திட்டம்.

முக்கிய அம்சங்கள்

· ஃபண்ட் வெளியீடு ஜூன் 20, 2019 அன்று ஆரம்பிக்கிறது,  ஜூலை 4,2019 அன்று  நிறைவடைகிறது
·  இந்தியமருத்துவ துறை, மருத்துவமனைகள், நோயறிதல், ஆரோக்கியம்மற்றும் சிறப்புரசாயனங்கள், ஒப்பந்தஆராய்ச்சி மற்றும்உற்பத்தி சேவைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளில் இந்த ஃபண்டில் திரட்டப்படும்நிதி முதலீடுசெய்யப்படும்.
·       குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் (Aditya Birla Capital Limited) குழுமத்தின் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனமான ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் (Aditya Birla Sun Life Mutual Fund),  ஆதித்ய பிர்லா சன் லைஃப் பார்மா & ஹெல்த்கேர் ஃபண்ட் (Aditya Birla Sun Life Pharma & Healthcare Fund) -ஐ அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டெட் ஈக்விட்டி திட்டமான இதில் பார்மா & ஹெல்த்கேர் சேவைகள் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. 

 இந்த ஃபண்ட் வெளியீடு ஜூன்  20, 2019 அன்று தொடங்கியது.  
வரும் 2030 ஆம் ஆண்டில்இந்திய மருந்துத் துறையின் மதிப்பி 10,000 கோடிஅமெரிக்க டாலராக (US $100 bn) வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருந்துத்துறை ஆண்டுக்கு10-12% வளர்ச்சி காணும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை / பொதுவான  மருந்துஉற்பத்தியில் (generic drug manufacturing)இந்திய மருந்துதயாரிப்பு நிறுவனங்கள், உலக அளவில் முன்னணியில் உள்ளன. உண்மையில் அமெரிக்காவில் விற்கப்படும் மூன்று மருந்துகளில் ஒன்று இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டதாகும். படிப்படியாக வணிக முத்திரை (branded) பதிக்கப்பட்ட மருந்துகளிலிருந்து அடிப்படை மருந்து தயாரிப்பு நிறுவனங்களாக இந்திய நிறுவனங்கள் மாறி வருகின்றன. இது இந்திய மருந்து நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது.
ஆயுஷ்மான் பாரத்’ (Ayushman Bhara) போன்ற திட்டங்கள் மூலம் பொது ஆரோக்கியத்துக்கான அரசு செலவினங்களை அதிகரித்துள்ளது. ஆரோக்கிய  காப்பீடுகள் எடுப்பது அதிகரிப்பு, அதிக ஆயுள்காலம் மற்றும் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான செலவுகள் அதிகரிப்பு ஆகியவை இந்தத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு தூண்டுதலாக செயல்படுகிறது. .

 இந்தப் புதிய திட்ட அறிமுகம் குறித்து ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி லிமிடெட்-ன் தலைமை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் (A. Balasubramanian, CEO, Aditya Birla Sun Life AMC Ltd,) கூறும் போது, ‘’கடந்த2-3 ஆண்டுகள் தவிர, கடந்த 10 ஆண்டுகாலப் பகுதியில் இந்தத்துறை நல்ல நீண்ட கால செயல்திறனைக்கொண்டுள்ளது. வலுவானமீட்சிக்கு இந்தத் துறை தயாராக உள்ளது, வரவிருக்கும் சந்தைசுழற்சியில் முதலீடுசெய்யும் வாய்ப்புஉள்ளது.மேலும், கவர்ச்சிகரமான பங்கு மதிப்பீடுகள் மற்றும் இந்தத் துறை சாத்தியமான வளர்ச்சி காண வாய்ப்பு இருக்கிறது.”.

ஒருபுதிய வணிகசுழற்சி செயல்பாட்டுக்குவருகிறது. அதிக வளர்ச்சி திறன் கொண்ட புதிய வணிகங்கள் மற்றும் நோய் கண்டறிதல், ஆரோக்கியம் மற்றும் சிறப்பு ரசாயனங்கள் போன்ற லாபகரமான நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டுக்கு கிடைக்கின்றன. இந்தத் துறை முன்பை விட துடிப்பாக வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஃபண்ட் முதலீட்டில் புதுமையைச் சேர்க்க உள்ளோம். அதாவது, உலகளாவியசந்தைகளில் புதுமையான கண்டுபிடிப்புகள், காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் சிறப்புகருவி தயாரிப்பு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும்திறன் எங்களிடம்உள்ளது”, என்று மேலும் குறிப்பிட்டார் ஏ. பாலசுப்பிரமணியன்.
 

முக்கிய மருந்து தயாரிப்பு மற்றும்ஆரோக்கிய பராமரிப்பு தவிர, ஆண்டுக்கு சராசரியாக 20%  வளர்ச்சி கண்டு வரும்,  மருத்துவமனைகள்மற்றும் நோயறிதல்போன்ற துறைகளில்பெரிய முதலீட்டு வாய்ப்புகளையும்இந்த ஃபண்ட்  ஆராயும்; ஆரோக்கிய வணிகங்கள்ஒவ்வொரு ஆண்டும்10-12%  வளர்ச்சி அடைகின்றன. உலகளாவிய ஒப்பந்த ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சேவைகள் (CRAMS)  ஆண்டுக்கு 7% வளர்ந்து வருகிறது.ரிசர்வ் வங்கிமற்றும் செபி அமைப்புகளின் வழிகாட்டுதல்களின்படி, பட்டியலிடப்பட்ட வெளிநாட்டுநிறுவனங்களின் பங்குகளிலும்,இந்தத் திட்டத்தில் திரட்டப்பட்ட நிதி முதலீடுசெய்யப்படும்.

இந்த ஃபண்டை திரு தவால் ஷா  (Mr. Dhaval Shah) நிர்வகிப்பார். இந்த ஃபண்டின் வருமான ஒப்பீடு  குறியீடாக (benchmark index) எஸ்&பி பி.எஸ்.இ ஹெல்த்கேர் டி.ஆர்.ஐ (மொத்த வருவாய் குறியீடு- Total Return Index) உள்ளது.


Data Source: IBEF, Internal Estimate, Evaluate Pharma, pmjay.gov.in, UN World Population Prospects, Mckinsey Global Institute report, National Health Profile 2015, 2018, IRDA Statistical Handbook 2016-17, Edelweiss Research


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பங்குச் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது, முதலீடு செய்யும் முன், திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் குழுமத்தின் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி!

கடந்த 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட  ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்  (Aditya Birla Sun Life Mutual Fund -ABSLMF), ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனம் (Aditya Birla Capital Limited -- ABCL)) மற்றும் சன் லைஃப் (இந்தியா) ஏ.எம்.சி. இன்வெஸ்ட்மென்ட்ஸ் இன்கார்ப்பரேஷன் (Sun Life (India) AMC Investments Inc) இணைந்து உருவாக்கப்பட்டது. .


இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான  ஆம்ஃபி (Association of Mutual Funds of India -AMFI) வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி நிர்வகிக்கும் சொத்தின் அடிப்படையில் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாக ஏ.பி.எஸ்.எல் எம்.எஃப் நிறுவனம்  உள்ளது.

2019 மார்ச் 31 ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில் உள்நாட்டில் மொத்தம் ரூ. 2,46,400 கோடி (Rs. 2464 billion) –க்கு மேல் சொத்தை நிர்வகித்து வருகிறது. பங்குச் சந்தை, கடன் சந்தை, கலவை (equity, debt, balanced) திட்டங்களுடன் சிறப்பு சொத்து வகை திட்டங்களையும் கொண்டுள்ளது. 2019 மார்ச் 31 நிலவரப்படி சுமார் 70 லட்சம் (7 million) மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு கணக்குகளை (investor folios) கொண்டுள்ளது.

இந்தியா முழுக்க 270 இடங்களில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஏ.பி.எஸ்.எல் எம்.எஃப் செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு இந்தியா முழுக்க தொய்வில்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மேம்படுத்துவதற்காக சேவை அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறப்பான தீர்வுகள், சேவைகள் மற்றும் வசதிகளை முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு / விநியோகஸ்தர்களுக்கு டிஜிட்டல் முறையில் அளித்து வருகிறது.

ஏ.பி.எஸ்.எல் எம்.எஃப் துறை சார்ந்த ஈக்விட்டி திட்டங்கள், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டங்கள், மாத வருவாய் திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள், கரூவூல திட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் திட்டங்களை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது..

நிறுவனம் குறித்த தகவல் : 

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி லிமிடெட் (Aditya Birla Sun Life AMC Limited  - முந்தைய பெயர் ஆதித்ய பிர்லா சன் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்), 
ஒன் இந்தியா புல்ஸ் சென்டர், டவர் 1, 17வது தளம்
ஜூபிடர் மில் காம்பவுண்ட், ,
841, எஸ்.பி. மார்க்,
 எல்பின்ஸ்டோன் சாலை
மும்பை - 400 013. Tel.: 4356 8000. இணைய தளம்www.adityabirlacapital.com. CIN: U65991MH1994PLC080811

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் (Aditya Birla Capital Limited -ABCL),  ஆதித்ய  பிர்லா குழுமத்தின் அனைத்து நிதிச் சேவை வணிகங்களின் முதலீட்டு நிறுவனமாக உள்ளது. ஆயுள் காப்பீடு, சொத்து மேலாண்மை, தனிப்பட்ட பங்கு முதலீடு, நிறுவனங்களுக்கு கடன், சிறப்பு நிதி திட்டங்கள், திட்டங்களை நிறைவேற்ற கடன் உதவி, பொதுக் காப்பீடு தரகு,, பங்குச் சந்தை, கரன்ஸி மற்றும் கமாடிட்டி தரகு, இணையதளம் மூலம் தனிநபர் நிதி மேலாண்மை, வீட்டு வசதிக் கடன், ஓய்வூதிய நிதி மேலாண்மை, ஆரோக்கிய காப்பீடு வணிகம் ஆகியவற்றில் நிதிச் சேவைகளை நிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் / சிறு வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. ஏ.பி.சி.எல்-க்கு 18,000 க்கு மேற்பட்ட பணியாளர்கள் நாடுமுழுக்க இருக்கிறார்கள். மேலும் 2 லட்சம் முகவர்கள் / சேனல் பார்ட்னர்கள் இருக்கிறார்கள்.  

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்அதன் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் மூலம் 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரபப்டி ரூ. 3,00,000 கோடி (Rs. 3,000 billion) மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருவதோடு ரூ. 63,000 கோடி (Rs. 630 billion) கடன்களை வழங்கி இருக்கிறது.


சன் லைஃப் ஃபைனான்ஸியல் பற்றி..

சன் லைஃப் ஃபைனான்ஸியல் (Sun Life Financial), முன்னணி நிதிச் சேவை அமைப்பாகும். இது காப்பீடு, சொத்து மேலாண்மை தீர்வுகளை தனிநபர்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. சன் லைஃப் ஃபைனான்ஸியல், உலகம் முழுக்க பல்வேறு நாட்டு சந்தைகளில் குறிப்பாக கனடா, ஐக்கிய அமெரிக்க நாடுகள். இங்கிலாந்து, அயர்லாந்து, ஹாங் காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் வியட்நாம், மலேசியா, மற்றும் பர்முடா போன்ற நாடுகளில் இயங்கி வருகிறது. 2019 மார்ச் 31 நிலவரப்படி, சன் லைஃப் ஃபைனான்ஷியல் மொத்தம் $1,011 பில்லியன் தொகையை நிர்வகித்து வருகிறது. .
கூடுதல் தகவல்களுக்கு பார்வையிடவும் www.sunlife.com

சன் லைஃப் ஃபைனான்ஷியல் இன்கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் எஸ்.எல்எஃப் (SLF) என்கிற குறியீட்டில் டொராண்டோ (Toronto-TSX), நியூயார்க் (New York-NYSE)  மற்றும் பிலிப்பைன் (Philippine -PSE) பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகி வருகிறது





Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...