சி.பி.ஆர்.இ கேப்பிட்டல் மார்கெட்ஸ்,
சந்தை பங்களிப்பில் 50% உடன்
இந்தியாவில் முதல் இடம்..!
- இந்திய வர்த்தக ரியல் எஸ்டேட்-ல் 2018 ஆம் ஆண்டில் 4.7 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஆர்.இ-ன் கேப்பிட்டல் மார்கெட்ஸ் குழு, 2 பில்லியன் டாலருக்கு மேல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருக்கிறது.
- ஒட்டு மொத்த தொழில்துறையில் 40 சதவிகிதத்துக்கும் மேலான சந்தை பங்களிப்புடன் மும்பை முதல் இடத்தில் உள்ளது.
-
சி.பி.ஆர்.இ சவுத் ஆசியா பிரைவேட் லிமிடெட் (CBRE South Asia Pvt. Ltd) இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமாக உள்ளது. அது அதன் சி.பி.ஆர்.இ-ன் கேப்பிட்டல் மார்கெட்ஸ் குழு (Capital Markets team) கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொண்ட வணிக வளர்ச்சி விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி, கேப்பிட்டல் மார்கெட்ஸ் குழு, சந்தை பங்களிப்பில் 50% உடன் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த நிறுவனம், விரிவான ஒருங்கிணைந்த சேவைகளாக மூலதனம் திரட்டுதல், நிலம் தொடர்பான சேவைகள் குறிப்பாக நிலம் விற்பனை, கூட்டு அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி நிர்வாக உடன்படிக்கைகள் ; முக்கிய சொத்துகள் விற்பனை, அதிக சொத்து கொண்ட தனிநபர்கள் (HNI) மற்றும் குடும்ப அலுவலக ஆலோசனை மற்றும் நிதித் திரட்ட ஆலோசனை போன்றவற்றில் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. குறிப்பாக, முதலீட்டு விற்பனை, அந்நிய நேரடி முதலீடு (FDI), கட்டமைக்கப்பட்ட கடன்கள், கட்டுமான நிதி உதவி மற்றும் எல்.ஆர்.டி (LRD), தனிப்பட்ட பங்கு முதலீடுகள், முக்கிய சொத்து விற்பனை போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.
இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தக (Commercial Real Estate - CRE)) பிரிவில் கடந்த 2018 ஆம் ஆண்டில் 4.7 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சி.பி.ஆர்.இ-ன் கேப்பிட்டல் மார்கெட்ஸ் குழு, 2 பில்லியன் டாலருக்கு மேல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருக்கிறது.
திரு. அன்ஷூமான் மேகஸின், சேர்மன் மற்றும் முதன்மை செயல் அதிகாரி - இந்தியா, தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா, சி.பி.ஆர்.இ {Mr. Anshuman Magazine, Chairman and Chief Executive Officer (India, South-East Asia, Middle East and Africa), CBRE} கூறும் போது, “மூலதனம் திரட்டுதல், நிலம் சார்ந்த சேவைகள், அதிக சொத்து கொண்ட தனிநபர்களுக்கான சேவைகள் மற்றும் முக்கிய அலுவலகங்கள் கையக்கப்படுத்துதல் மற்றும் விற்பனை தொடர்பான சேவைகளில் கேப்பிட்டல் மார்கெட்ஸ் குழு ஒருங்கிணைந்த சேவைகளை அளித்து முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இது வரைக்கும் இல்லாத அளவில் 2018 ஆம் ஆண்டில் வணிகம் புதிய உச்சத்தை அடைத்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நிலம் சார்ந்த சேவைகள், மூலதனச் சந்தைகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறோம்.”
2018 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த ரியல் எஸ்டேட் செயல்பாடு குறித்து கௌரவ் குமார், நிர்வாக இயக்குநர் மற்றும் கேப்பிட்டல் மார்கெட்ஸ்-ன் துணைத் தலைவர், சி.பி.ஆர்.இ, (Gaurav Kumar, MD & Co-Head Capital Markets, CBRE) கூறும் போது, “முந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் முக்கிய இடங்களில் விரிவாக்கத்தை மேற்கொண்டோம். இதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட முக்கிய சில பரிமாற்றங்கள், சி.பி.ஆர்.இ-ன் பங்களிப்பை அதிகரித்து முக்கிய இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.”
முக்கிய மூலதன தேவைகளை நிறைவேற்றுவது மூலம், தொழில் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை, கேப்பிட்டல் மார்கெட்ஸ் குழு வழங்கியுள்ளது. மேலும், வர்த்தக ரியல் எஸ்டேட் தொழில்துறையின் அனைத்து மூலதனம் மற்றும் முதலீட்டு தேவைகளுக்கும் ஒரு வெற்றிகரமான ஒருங்கிணைந்த தீர்வாக தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்தி கொண்டுள்ளது.
‘’2018 ஆம் ஆண்டு சி.பி.ஆர்.இ-க்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாகும். எங்கள் வளர்ச்சி ஒரு தொடர்ச்சியான சாதகமான போக்குகளைக் கொண்டுள்ளது மற்றும் மூலதன சந்தைகள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. வரும் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியை பெறுவோம் என நம்புகிறோம்” என்றார், நிஹில் பாடியா, நிர்வாக இயக்குநர் மற்றும் கேப்பிட்டல் மார்கெட்ஸ்-ன் துணைத் தலைவர், சி.பி.ஆர்.இ (Nikhil Bhatia, MD & Co-Head Capital Markets, CBRE)
கடந்த 2018 ஆம் ஆண்டில் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் குழு, இந்தியாவில் சில முக்கிய ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசனை ஒப்பந்தங்களுக்கு ஆலோசனை வழங்கியது மூலம் முதலிடத்தை பெற்றுள்ளது.
நாட்டின் ரியல் எஸ்டேட் தொழில் மேம்பாடு பற்றி பேசிய பாடியா, “ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையின் முதலீடு, முந்தைய ஆண்டுகளிலிருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சி.பி.ஆர்.இ-ன் நிபுணத்துவம், ஆலோசனை, தரம் மற்றும் அளவு பகுப்பாய்வு மூலம் வர்த்தக ரியல் எஸ்டேட் துறைக்கு அதிக முதலீடுகளை கொண்டு வந்து சேர்த்தன.”
நடப்பு 2019 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் முதலீடுகளின் போக்கு பற்றி குமார் பேசுகையில்.‘’நடப்பு ஆண்டில், அலுவலகம் மற்றும் சில்லறை விற்பனைகள், ஓட்டல்கள், நிலம் கையக்கப்படுத்துதல், நில கூட்டுத் திட்டங்கள் போன்றவற்றில்நிறுவனங்களின் பங்கு முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”
அவர் மேலும் கூறும் போது, ‘’சந்தையில் அதிக கவனம் செலுத்துவது மூலம் கடன் தரம் மேம்படும். ஆனால், செலவுகளும் அதிகரிக்க கூடும்” என்றார்
2019 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மூலதன சந்தைகளில் காணப்படும் சில முக்கிய போக்குகள் (Some key trends to be witnessed in Capital Markets in 2019):
- என்.பி.எஃப்.சி-களின்ஒருங்கிணைப்பு(Consolidation amongst NBFCs) – வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களின் (NBFC) சந்தை தற்போது இந்தியாவில் நெருக்கடியான நிலையில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், நிதி உதவி பெறுவதில் பெரிய என்.பி.எஃப்.சிகள் பொது வெளியீடுகள் மூலம் நிதித் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், சிறிய நிறுவனங்கள் நிதித் திரட்டுவதற்கு மாற்று ஆதாரங்களை தேடி வருகின்றன.
- கடன்களின் தரம் மேம்பாடு (Loan Quality to Improve) – ஆர்.பி.ஐ சரியாக செயல்படாத, விதிமுறைகளை பின்பற்றாத என்.பி.எஃப்.சி-களின் உரிமைகளை தீவிரமாக ரத்து செய்து வருகிறது. (2018 அக்டோபர் வரையில் சுமார் 4,500 என்.பி.எஃப்.சிகளின் உரிமங்களை ரத்து செய்திருக்கிறது.) இதனால், இந்தப் பிரிவில் உள்ள மோசமான நிறுவனங்கள் களை எடுக்கப்படுள்ளன. இதன் விளைவாக தரமான என்.பி.எஃப்.சிகள் நிறுவனங்கள்தாம் இயங்கி வருகின்றன என கூறலாம்.
- கூடுதல் கவனம் செலுத்த விடாமுயற்சி(Due diligence to come in sharper focus)– முதலீட்டாளர்கள் கூடுதல் கவனத்துடன் சொத்துகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாககிரேடு ஏ சொத்துகளில் முதலீடு செய்வதை ஆதாயமாக பார்க்கிறார்கள்.
-
- முக்கியச் சொத்துகள் மற்றும் எல்.ஆர்.டி க்களுக்கு மாற்றம் (Shift towards core assets and LRDs) – புதிய விநியோகங்கள் (disbursements) குறைந்து வருகின்றன. புதிய சொத்துகள் மற்றும் நிலங்கள், அடமானத்தில் இருக்கும் சொத்துகள் போன்றவற்றில், முதலீடு செய்யும் நிறுவனங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றன. அதேநேரத்தில், புதிய நல்ல சொத்துகளில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. தற்போதுள்ள பங்குதாரர்கள் மற்றும் நில ஒப்பந்தங்கள் மூலம் நிதி / மறு-நிதி அளிப்பு வாய்ப்புகள் மெதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- REIT நிஜமானது (REIT becoming a reality) – இந்திய ரியல் எஸ்டேட் துறை மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட பெரும் பணக்காரர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய ( HNIs and NRIs) முதலீட்டாளர்கள் சொத்துகளில் நேரடியாக முதலீடு செய்வது, வர்த்தக சொத்துகளை நிர்வகிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர அவர்கள், ஆவண முதலீடுகள் அடிப்படையில் ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்யும் REIT -கள் மூலமும் பங்கேற்று வருகிறார்கள்.
-
முதலீட்டு வருமானம் உயர்வு (The yield conundrum) – அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, நிதி சார்ந்த முதலீடுகளை பணமாக்குவதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றால் 10 ஆண்டுகள் முதிர்வு கொண்ட பாண்டுகளின் வருமானம் 2018 ஆம் ஆண்டில் 8% ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், இந்திய ரியல் எஸ்டேடில் அலுவலகம் மற்றும் சில்லறை துறைகளுக்கான கட்டிடங்கள் மூலமான வருமானம் சுமார் 8.0-8.5% ஆக உள்ளது. அதேநேரத்தில், வாடகை மற்றும் மூலதன மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டின் வளர்ச்சி வரைபடங்களில் ( 2018 In Graphs):
படம்-1 முக்கியத் துறைகளில் முதலீடு – 2018
படம் -2முக்கிய நகரங்களில் முதலீடு - 2018
சி.பி.ஆர்.இ குழுமம் பற்றி (About CBRE Group, Inc.)
சி.பி.ஆர்.இ குழுமம் [CBRE Group, Inc. NYSE:CBRE), என்பது ஃபார்ச்சூன் 500 மற்றும் எஸ்& பி 500 பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நிறுவனம். இதன் தலைமை அலுவலகம் லாஸ் ஏஞ்செல்ஸ்-ல் உள்ளது. இது உலக அளவில் மிகப் பெரிய வர்த்தக ரியல் எஸ்டேட் சேவைகள் மற்றும் முதலீட்டு (2017 ஆம் ஆண்டின் வருவாய் அடிப்படையில்) நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்துக்கு 80,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுக்க சுமார் 450 அலுவலகங்கள் இருக்கின்றன. சி.பி.ஆர்.இ, ரியல் எஸ்டேட் துறையின் ஒருங்கிணைந்த சேவைகளை அளித்து வருகிறது. வசதிகள், பரிமாற்றம், திட்ட மேலாண்மை, முதலீட்டு மேலாண்மை, சொத்து மதிப்பீடு, சொத்து குத்தகை, ஆலோசனை உத்திகள், சொத்து விற்பனை, அடமான சேவைகள் மற்றும் சொத்து அபிவிருத்தி சேவைகளை அளித்து வருகிறது.
கடந்த 1994 ஆம் ஆண்டில் இந்தியாவில் அலுவலகம் அமைந்த முதல் சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனம் (International Property Consultancy) சி.பி.ஆர்.இ ஆகும். ஆரம்பம் முதல் நல்ல வளர்ச்சியில் இருக்கும் இந்த நிறுவனத்தில், இந்தியா முழுக்க 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் 10 அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 8,000-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிபுணர்கள் சேவை அளித்து வருகிறார்கள். முன்னணி சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனம் என்கிற முறையில், பல்வேறு விதமான ரியல் எஸ்டேட் தீர்வுகளை குறிப்பாக, பிரத்யேக ஆலோசனைகள், மதிப்பீடுகள், மூலதன சந்தைகள், முகவர் சேவைகள், சொத்து சேவைகள் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றை அளித்து வருகிறது.
சி.பி.ஆர்.இ-ன் வழிகாட்டும் கொள்கை (guiding principle) மூலதன ஆதாயங்களை மேலும் உற்பத்தி செய்யும் தீர்வுகளை வழங்குவதாக இருக்கிறது. மேலும், வர்த்தக ரியல் எஸ்டேட்டின் அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை அளிப்பதாகவும் இருக்கிறது.
கடந்த 2008 ஆண்டு ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் சி.பி.ஆர்.இ சேர்க்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி இது 207-வது இடத்தில் இருக்கிறது.இது லிப்சே நிறுவனத்தால் (Lipsey Company) தொடர்ந்து 17 ஆண்டுகளாக தொழிற்துறையின் சிறந்த பிராண்ட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்றும்
ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஃபார்ச்சூன் நிறுவனத்தின் "மிகவும் விருப்பப்படும் நிறுவனங்கள்" (Most Admired Companies) என்கிற விருதை பெற்று வருகிறது.
Follow us:
For more information:
Anshuman Dutta
Anshuman.gunjan@cbre.com
Mobile: +91 9971553969
Supreet Ahuja
supreet.ahuja@adfactorspr.com
Mobile: +91 99992 02252
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக