இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிறந்த செயல்பாட்டு திறன்...!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank -IOB) 9,435 தொடர்பு நிலைகளுடன்(3,280 வங்கி கிளைகள், 3,450 ஏ.டி.எம். மையங்கள்& 2,705 ஐ.ஓ.பி. மித்ரா(IOB Mitra) ஆகியவற்றுடன் சிறந்த செயல்பாட்டு திறனை (operational efficiency) அடைந்துள்ளது. அதாவது இதன் செயல்பாட்டு லாபம் (operating profit) அதிகரித்துள்ளது. வங்கியின் 82 ஆண்டு கால பயணத்தில், 2018-19 ஆம் நிதி ஆண்டில்தான் அதன் செயல்பாட்டு லாபம் இது வரைக்கும் இல்லாத சாதனை அளவாக ரூ.5,034 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் வங்கியின் வணிகம் ரூ.3,74,530 கோடியாக இருக்கிறது. இழப்பை சந்தித்து வந்த வங்கி கிளைகள் 2014-15 ஆம் நிதி ஆண்டில் 21.95% ஆக இருந்தது. இது 2018-19 ஆம் நிதி ஆண்டில் 4.79% ஆக குறைக்கப்பட்டுள்ளன.
திரு. ஆர். சுப்ரமணியகுமார், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Mr. R. Subramaniakumar, MD & CEO - Indian Overseas Bank) கூறும்போது “வங்கியின் அனைத்து வணிக அம்சங்களும் தொடர்ந்து மேம்படத் தொடங்கி இருக்கின்றன. இவை மேலும் மேம்பட்டு 2019-20 ஆம் நிதி ஆண்டில், அனைத்து பங்குதாரர்களுக்கு லாபத்தை அளிக்கும்.” என்றார்.
சில்லறைக் கடன், வேளாண் & எம்.எஸ்.எம்.இ கடன் போன்றவற்றில் பரவலாக கூடுதல் கவனத்தை ஐ.பி.ஓ செலுத்தி வருகிறது. 2017 மார்ச் நிலவரப்படி மொத்தக் கடன்களில் இந்தக் கடன்களின் பங்களிப்பு 58.74% ஆக இருந்தது. இது, 2019 மார்ச் மாதத்தில் 67.20% ஆக உயர்ந்துள்ளது.
சிக்கலில் இருக்கும் துறைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை குறைத்தல், AAA தரக்குறியீடு பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் வழங்குதல், அரசு உத்தரவாதம் உள்ள திட்டங்களில் முதலீடு மற்றும் இடர்ப்பாடு (risk) குறைந்த தங்க நகை அடமான கடன், வீட்டு வசதிக் கடன் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், வங்கியின் இடர்ப்பாடு சார்ந்த கடன் மதிப்பு ரூ. 1,69,148 கோடியிலிருந்து (நிதி ஆண்டு 2016-17) ரூ. 1,22,585 கோடியாக (நிதி ஆண்டு 2018-19) குறைந்துள்ளது.
வங்கி திரட்டும் டெபாசிட்டில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் மூலமான காசா (CASA), -ன் பங்களிப்பு 2016 மார்ச் மாதத்தில் 28.72% ஆக இருந்தது. இது 2019 மார்ச் மாதத்தில் 38.30% ஆக அதிகரித்துள்ளது. இதன் அர்த்தம் வங்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று அர்த்தம். இதனை அடுத்து வங்கியின் நிதித் திரட்டும் செலவு (cost of deposit) 7.11% (2016 மார்ச்) -லிருந்து 5.39% (மார்ச் 2019) ஆக குறைந்துள்ளது.
வங்கியின் சொத்து தரத்தை மேம்படுத்த மொத்த வாராக் கடன் மற்றும் நிகரக் கடனை காலாண்டு தோறும் குறைந்து வருகிறது. இதற்காக வாராக்கடனுக்கான ஒதுக்கீட்டு விகிதத்தை (provision coverage ratio) 53.63% (2016- 17) –லிருந்து 71.39% (2018-19) ஆக மேம்படுத்தியுள்ளது. வங்கியின் நிர்வாகச் செலவுகள், வங்கிகள் ஒருங்கிணைப்பு, புதிய ஏ.டி.எம். மையங்கள் அமைத்தல், வங்கியின் இடங்களை சரியாகப் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் வெகுவாக குறைத்து வருகிறது. இந்த வங்கி தொடர்ந்து, கட்டணம் அடிப்படையிலான இதர வருமானங்களை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வங்கியின் மொத்த வருமானத்தில் வட்டி சாரா வருமானம் (Non-Interest Income), 14% (2016- 17) லிருந்து 20% (2018-19) ஆக அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளால் வங்கியின் செயல்பாட்டு லாபம் மிகவும் அதிகரித்துள்ளது. செலவுக்கும் வருமானத்துக்குமான விகிதம் (cost to income ratio), 2016- 17 ஆம் நிதி ஆண்டில் 57.37% ஆக இருந்தது. இது 2018-19 ஆம் நிதி ஆண்டில் 46.93% ஆக மேம்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது, வங்கியின் சொத்து மூலமான வருமானம் (ROA) லாபத்துக்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனலாம்.
28 மே, 2019
28 மே, 2019
For further information, please contact:
Adfactors PR Pvt. Ltd.
Gomathi Ravishankar / Harsh Trivedi
gomathi.ravishankar@adfactorspr.com / harsh.trivedi@adfactorspr.com
9791015777 / 9987218372