மஹிந்திரா ஃபைனான்ஸ்
நிதி நிலை முடிவுகள் – 2018-19
வருமானம் 32% அதிகரித்து ரூ. 8,810 கோடிகள்
நிகர லாபம் 52% அதிகரித்து ரூ. 1,557 கோடிகள்
கடன் விநியோகம் 22% உயர்ந்து ரூ.46,000 கோடிகளை தாண்டியது
நிர்வகிக்கும் தொகை 27% உயர்ந்து ரூ.67,000 கோடிகளை தாண்டியது
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது
இயக்குநர் குழு 325% டிவிடெண்ட் பரிந்துரை (சிறப்பு டிவிடெண்ட் 125% சேர்த்து)
மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் (Mahindra & Mahindra Financial Services Limited - Mahindra Finance), இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் நிதிச் சேவைகளை அளித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் இயக்குநர் குழு 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நான்காம் காலாண்டு மற்றும் நிதி ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது. இந்திய பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) வழிகாட்டுதலின்படி, இந்த நிறுவனம் இந்திய கணக்கியல் தரநிலைகள் (Indian Accounting Standards - Ind AS) முறையை 2018, ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தி வருகிறது. 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நான்காம் காலாண்டு மற்றும் நிதி ஆண்டுக்கான நிதி நிலை முடிவுகள் இந்திய கணக்கியல் தரநிலையை பின்பற்றப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டம், இதே கணக்கியல் முறைக்கு மாற்றப்பட்டு ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.
2018-19 நிதி ஆண்டு தனிப்பட்ட (Standalone) நிதி நிலை முடிவுகள்
2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 32% அதிகரித்து ரூ.8,810 கோடிகளாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ.6,685 கோடிகளாக இருந்தது.
.
2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ. 1,557 கோடிகளாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ. 1,076 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 45% வளர்ச்சி ஆகும்.
2018 மார்ச் 31 ஆம் தேதி உடன் முடிந்த நிதி ஆண்டில், இதன் துணை நிறுவனமான மஹிந்திரா இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் (Mahindra Insurance Brokers Ltd) பங்குகளை விற்றது மூலமான ரூ.50 கோடிகளும் சேர்ந்ததாகும். இந்தப் பங்கு விற்பனை மூலமான லாபத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் நிகர லாப வளர்ச்சி 52% ஆகும்.
2018-19 நிதி ஆண்டு நான்காம் காலாண்டு தனிப்பட்ட நிதி நிலை முடிவுகள் (F-2019 Q4 Standalone Results)
2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் மொத்த வருமானம் 37% அதிகரித்து ரூ. 2,480 கோடிகளாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ.1,808 கோடிகளாக இருந்தது.
2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ. 588 கோடிகளாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ. 314 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 87% வளர்ச்சி ஆகும்.
2018-19 நிதி ஆண்டு ஒருங்கிணைந்த நிதி நிலை முடிவுகள் (F-2019 YTD Consolidated Results)
2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 32% அதிகரித்து ரூ.10,431 கோடிகளாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ.7,912 கோடிகளாக இருந்தது.
2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ. 1,867 கோடிகளாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ. 1,216 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 54% வளர்ச்சி ஆகும்
டிவிடெண்ட்
இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு இன்று நடைபெற்றது. அதில், 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டிற்கு 325% டிவிடெண்ட் பரிந்துரை (சிறப்பு டிவிடெண்ட் 125% சேர்த்து) செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் 200% டிவிடெண்ட் வழங்கப்பட்டது.
செயல்பாடுகள் (Operations)
2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தை (6.1 Million) தாண்டி உள்ளது.
மொத்தம் வழங்கப்பட்ட கடன்களின் மதிப்பு (Total value of assets financed), 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் ரூ. 46,210 கோடிகளாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் அது ரூ..37,773 கோடிகளாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும் போது 22% வளர்ச்சி ஆகும்.
2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி மொத்த நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (Assets Under Management - AUM) ரூ. 67,078 கோடிகளாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.52,793 கோடிகளாக இருந்தது. இது 27% வளர்ச்சி ஆகும்.
இந்த நிறுவனம், புதிய வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள், பழைய வாகனங்கள் கடன் அளிப்பதில் முன்னணி நிறுவனமாக தொடர்கிறது. முடிந்த நிதி ஆண்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு கடன் அளிப்பதில் அதிக வளர்ச்சி கண்டிருக்கிறது. அனைத்து முன்னணி கடன் திட்டங்களிலும் இதன் சந்தைப் பங்களிப்பு மற்றும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் இந்த நிறுவனத்தின் மூலதனம் மற்றும் கடன் நிலை வலிமையாக இருக்கிறது. நிறுவனத்தின் சொத்து – பொறுப்புகள் மேலாண்மை (Asset Liability Management –ALM) சமநிலையில் இருக்கிறது. முந்தைய ஆண்டை விட வாராக் கடன் குறைந்திருக்கிறது. தரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பலவீனமான சொத்துகளுக்கு, எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு முறையில் மூன்று நிலைகளில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என இந்திய கணக்கியல் தரநிலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 90 நாள்களுக்கு மேற்பட்ட வாராக் கடன்களுக்கு மூன்று நிலைகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த மொத்த மூன்று நிலைகளும் 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 5.9% ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது 9.0% ஆக இருந்தது..
இந்த நிகர மூன்று நிலைகளும் 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 4.8% ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது 6.2% ஆக இருந்தது.. இந்த மூன்று நிலைகளின் ஒதுக்கீட்டு விகிதம் 19.2% ஆக உள்ளது.
துணை நிறுவனம்
மஹிந்திரா இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் (Mahindra Insurance Brokers Limited - MIBL)
2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் எம்.ஐ.பி.எல்-ன் வருமானம் ரூ. 99.7 கோடிகளாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ. 88.4 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும் போது 13% வளர்ச்சி ஆகும். 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ. 26.7 கோடிகளாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ. 22.5 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 19% வளர்ச்சி ஆகும்.
2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் எம்.ஐ.பி.எல்-ன் வருமானம் ரூ. 323.4 கோடிகளாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ. 245.1 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும் போது 32% வளர்ச்சி ஆகும். 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ. 71.4 கோடிகளாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ. 53.6 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 33% வளர்ச்சி ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக