மொத்தப் பக்கக்காட்சிகள்

சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க்-ன் நிகர லாபம் 2018-19 -ல் 169% அதிகரித்து ரூ. 201 கோடி..!


சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க்

நிகர லாபம் 2018-19 ஆண்டில் 

169% அதிகரித்து ரூ.201 கோடி..!
  
தொழில்நுட்பம், செயல்முறை உந்துதல் அணுகுமுறை, பரவலான  விரிவாக்கம், தயாரிப்புகளை  பல்வகைப்படுத்தல் மற்றும்   போர்ட்ஃபோலியோவின் தரம் போன்றவை  வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக உள்ளன.

சாடின்கிரெடிட்கேர் நெட்ஒர்க்  (Satin Creditcare Network Limited  - SCNL, BSE: 539404; NSE: SATIN], முன்னணி நுண்கடன் (microfinance) நிறுவனம். இந்த நிறுவனம் முடிவடைந்த 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது. 2018-19 –ல் இதன் ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய லாபம் (PAT -நிகர லாபம்) 169% அதிகரித்து ரூ. 201 கோடியாக (2017-18-ல் ரூ.75 கோடி) ஆக உள்ளது. இதே கால கட்டத்தில், இந்த நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் (PBT) 173% அதிகரித்து ரூ. 316 கோடியாக (2017-18-ல் ரூ.116 கோடி)  சொத்து மூலமான வருமானம் மற்றும் மூலதனம் மூலமான வருமானம் (RoA and RoE) முறையே 3.1 % மற்றும் 19.8 %  ஆக உள்ளது. இந்த நிதி நிலை முடிவுகள் இன்று நடந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நிதி நிலை செயல்பாடு

 (Financial Performance, On consolidated basis) :

·         மொத்தம் வழங்கப்பட்ட கடன் ரூ. 7,068 கோடிநிதி ஆண்டில் 23 %  மற்றும் காலாண்டில் 14% அதிகரிப்பு

·         முடிந்த காலாண்டில் புதிதாக 45 கிளைகள் தொடங்கப்பட்டு, மொத்த கிளைகளின் எண்ணிக்கை 2019 மார்ச் நிலவரப்படி 1,163 ஆக உயர்ந்துள்ளது. இது நிதி ஆண்டில் 17 %  மற்றும் காலாண்டில் 4%  அதிகரிப்பு

·         2018-19 –ல் வருமானம் ரூ. 1,448  கோடி. இது ஆண்டு கணக்கில்  40 % அதிகரிப்பு

·         2018-19 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் வருமானம் ரூ. 350  கோடி. இது காலாண்டு கணக்கில்   19% அதிகரிப்பு

·         2018-19 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம்  ரூ. 87 கோடி. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (Q4FY18) இது ரூ.  57 கோடி மற்றும் 2018-19 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3FY19) வரிக்கு முந்தைய லாபம்  ரூ. 116 கோடி. இது 51%  உயர்வு 

·         2018-19 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம்  ரூ. 56  கோடி. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (Q4FY18) இது ரூ.  38  கோடி மற்றும் 2018-19 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3FY19) வரிக்கு பிந்தைய லாபம்  ரூ. 71 கோடி. இது 50%  உயர்வு 

வணிகச் செயல்பாடு (Business Performance):

·         இண்டஸ் இந்த் வங்கி உடனான வணிகம் ரூ. 633 கோடியை எட்டியுள்ளது.

·         சாடின் நிறுவனத்தின் எம்.எஸ்.எம்.இ பிரிவான சாடின் ஃபின்சர்வ் லிமிடெட்(Satin Finserv Ltd) –க்கு வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனத்துக்கான (NBFC) உரிமம் பெற்றப்பட்டது.

·          முதல் நுண்கடன் நிறுவனமாக லோன் டோஸ்ட் (Loan Dost) என்கிற செயலி (app) அடிப்படையிலான டிஜிட்டல் கடன் வழங்கும் முறை அறிமுகம்

·         சமூக தரக்குறியீடு மேம்பாட்டை மைக்ரோஃபினான்ஸா (Microfinanza) நிறுவனத்திடமிருந்தும், சி1 நடத்தை விதிமுறைகளுக்கான அங்கீகாரத்தை (COCA) இக்ரா (ICRA)  நிறுவனத்திடமிருந்தும் பெற்றுள்ளது.

·        2018-19 ஆம் நிதி ஆண்டில்  தமிழ்நாடு, மேகாலயா, திரிபுரா, பாண்டிச்சேரி மற்றும்  கர்நாடகாவில்  மைக்ரோஃபைனான்ஸ் செயல்பாடு ஆரம்பிக்கப்பட்டது. 

2019-20 நிதி ஆண்டு எதிர்பார்ப்பு  (Outlook for FY20):      
·        
2019-20  ஆம் நிதி ஆண்டில் சிறப்பான நிதி நிலை செயல்பாடு

·         2020 ஆம் ஆண்டுக்குள் நிர்வகிக்கும் தொகையில் ஒரு மாநிலத்தின் பங்களிப்பை 20 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்தல்

·         2019-20  ஆம் நிதி ஆண்டுக்குள் ரொக்கமில்லா வசூல் (Cashless Collections)  50% -ஐ எட்டுதல்
·         உளவியல் பகுப்பாய்வை (Psychometric analysis) அனைத்து கிளைகளிலும் செயல்படுத்துதல்
நிறுவனத்தின் ஆண்டு செயல்பாடுகள் குறித்து நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஹெச் பி சிங் (Mr. H P Singh, Chairman and Managing Director) கூறும் போது , “எதிர்பார்க்கப்பட்டது போலவே, ஆரோக்கியமான செயல்பாடுகள் மற்றும் வலுவான நிதி செயல்திறன் உள்ளதால்  நாங்கள்  மகிழ்ச்சி கொள்கிறோம். நிகர லாபம் 169% அதிகரித்து ரூ. 201 கோடியாக அதிகரித்திருப்பது மூலம் சாதனை படைத்துள்ளோம்.

 எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை 35.5 லட்சமாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 26% அதிகமாகும்.  மற்றும் 2018-19 ஆம் ஆண்டில் 168 புதிய கிளைகள் திறக்கப்பப்பட்டுள்ளன.

சாடின் -ஐ தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நிறுவனமாக மாற்ற  நாங்கள் தீவிரமாக  செயல்பட்டு வருகிறோம்..

அவர் மேலும் கூறும் போது,’’எங்கள் வியாபாரத்திற்கான அடித்தளமாகத் திகழும் துணை 
நிறுவனங்களான டாராஷ்னா (Taraashna), சாடின் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் சாடின் ஃபின்சர்வ் லிமிடெட் ஆகியவற்றின் மூலம்  ஒருங்கிணைந்த அடிப்படையில்  நிர்வகிக்கும் தொகையை 1 பில்லியன்  டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.”

2018 ஜனவரி  முதல் வழங்கப்பட்ட கடன்களுக்கான வசூல் திறன் 99.5%  ஆக உள்ளது. இது நிறுவனத்தின்  போர்ட்ஃபோலியோவில் 89% ஆக உள்ளது. சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க் லிமிடெட், கிளைகளில் ரொக்கமில்லா கடன் விநியோகம் மற்றும் டிஜிட்டல் ஆவணமாக்கம் போன்றவற்றை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வருகிறது. அதன் விளைவாக 100% கிளைகள் இப்போது ரொக்கமில்லா கடன் விநியோக்கத்தை மேற்கொள்ளும் வசதியை பெற்றுள்ளன.

சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க் லிமிடெட் பற்றி (About Satin Creditcare Network Limited)

சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க் லிமிடெட்  ((SCNL or Satin), இந்தியாவின் முன்னணி நுண்கடன் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.. இது 22 மாநிலங்களில் சுமார் 78,000 கிராமங்களில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் குறிக்கோள், குடும்பங்களின் அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஒரு தீர்வாக விளங்குவதாக இருக்கிறது.

இந்த நிறுவனம், நுண் கடன் அல்லா பிரிவில் நிதித் திட்டங்களை (குறிப்பாக எம்.எஸ்.எம்.இ கடன்கள்) அளித்து வருகிறது. மேலும், எஸ்.சி.என்.எல்-ன் 100% துணை நிறுவனமான டாராஷ்னா சர்வீசஸ் லிமிடெட் (Taraashna Services Limited) மூலம் நிதிச் சேவை அளித்து வருகிறது. 2017 ஏப்ரலில் எஸ்.சி.என்.எல், முழுமையான துணை நிறுவனமாக வீட்டு வசதிக் கடன் வழங்கும் சாடின் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் அல்லது எஸ்.ஹெச்.எஃப்.எல் (Satin Housing Finance Limited or SHFL) மூலம் வாங்கக் கூடிய விலையிலான குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு (affordable housing segment) வீட்டுக் கடன் வழங்கி வருகிறது.

2019 ஜனவரி மாதத்தில் எம்.எஸ்.எம்.இ (MSME) வணிகத்தை தொடங்க  தனியை வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனத்துக்கான ( NBFC)  உரிமத்தை சாடின் ஃபின்சர்வ் லிமிடெட் என்கிற பெயரில் பெற்றது. இளைஞர்களான மில்லினியன்களை (millennials) இலக்காக வைத்து டிஜிட்டல் வழி கடன் செயலி லோன் டோஸ்ட்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.  
2019 மார்ச் நிலவரப்படி எஸ்.சி.என்.எல், 1,163 கிளைகளை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் 22 மாநிலங்களில் இயங்கி வருகின்றன. மொத்தம் 11,831 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். மொத்தம் 35.5 லட்சம் பேருக்கு சேவை அளித்து வருகிறது. எஸ்.சி.என்.எல், உத்தரப் பிரதேசம், பீகார், வடகிழக்கு இந்தியா, மத்திய பிரதேசம் போன்றவற்றில் மிகவும் வலிமையாக செயல்பட்டு வருகிறது.

Disclaimer:

This document may contain certain forward looking statements within the meaning of applicable securities law and regulations. These statements include descriptions regarding the intent, belief or current expectations of the Company or its directors and officers with respect to the results of operations and financial condition of the Company. Such forward-looking statements are not guarantees of future performance and involve risks and uncertainties, and actual results may differ from those in such forward-looking statements as a result of various factors and assumptions which the Company believes to be reasonable in light of its operating experience in recent years. Many factors could cause the actual results, performances, or achievements of the Company to be materially different from any future results, performances, or achievements. Significant factors that could make a difference to the Company’s operations include domestic and international economic conditions, changes in government regulations, tax regime and other statutes. The Company does not undertake to revise any forward-looking statement that may be made from time to time by or on behalf of the Company

Satin Creditcare Network Ltd.

CIN:L65991DL1990PLC041796

Corporate Office: 1st & 3rd Floor, Plot No. 97, Sector 44, Gurugram – 122 003

Landline No: +91 124 471 5400

Registered Office: 5th Floor, Kundan Bhawan, Azadpur Commercial Complex, Azadpur, Delhi-110 033




For further information, please contact:

Ms. Asleen Kaur
Satin CreditCare Network Ltd
Mob: 9711306384
Mr. Harsh Trivedi
Adfactors PR
(M): 9987218372




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...