யூ.டி.ஐ மாஸ்டர் யூனிட் ஸ்கீம் –
30 ஆண்டுகளாக செல்வம் உருவாக்கம்
ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்ட போது
செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் முதலீடு,
2019 ஏப்ரல் 30 –ல் ரூ.11.77 கோடியாக உயர்வு
செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் முதலீடு,
2019 ஏப்ரல் 30 –ல் ரூ.11.77 கோடியாக உயர்வு
யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் (UTI Mastershare Unit Scheme), இந்தியாவின் முதல் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் (Equity Oriented Fund). இது கடந்த 1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 30 ஆண்டு காலத்துக்கும் மேலாக செல்வம் உருவாக்கத்தில் (wealth creation) ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறது, இந்த ஃபண்ட்.
யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், நீண்ட கால வரலாற்றை கொண்டுள்ளது.
இது அனைத்து பங்குச் சந்தை சுழற்சிகளிலும் அதாவது கரடிச் சந்தை மற்றும்
காளைச் சந்தைகளில் இடைவிடாது தொடர்ந்து ஆண்டு தோறும்
முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருகிறது.
யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், நீண்ட கால வரலாற்றை கொண்டுள்ளது.
இது அனைத்து பங்குச் சந்தை சுழற்சிகளிலும் அதாவது கரடிச் சந்தை மற்றும்
காளைச் சந்தைகளில் இடைவிடாது தொடர்ந்து ஆண்டு தோறும்
முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருகிறது.
யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், எப்போது வேண்டுமானலும் முதலீடு, எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி கொண்ட ஓப்பன் எண்டட் ஈக்விட்டி (open ended equity) ஃபண்ட் ஆகும். இதில், திரட்டப்படும் நிதி பெரும்பாலும், அதிகப் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட - லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் (large cap companies) முதலீடு செய்யப்படுகிறது.
நியாயமான விலையில் வளர்ச்சி (Growth at Reasonable Price -GARP) என்கிற முதலீட்டு பாணியில் முதலீட்டுக்கான பங்குகள் இந்த ஃபண்டில் தேர்வு செய்யப்படுகின்றன. இதன் அர்த்தம், வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள அதேநேரத்தில், தற்போது நியாயமான குறைந்த விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதாகும். அதாவது, நிறுவனங்களின் வருமானம் எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பங்குகளின் மதிப்பீடு நியாயமானதாகவும் இருக்கும்.
கடன்களை கட்டுக்குள் வைத்துக்கும் மற்றும் தொடர்ந்து வருமான வளர்ச்சி, லாபத்தில் கூடுதல் கவனம் செலுத்துதல், மூலதனம் மூலம் அதிக வருமானம் சம்பாதிக்கும் மற்றும் அதிக செயல்பாட்டு பண வரத்தைக் கொண்ட அடிப்படையில் வலுவான நிறுவனப் பங்குகள் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு யூ.டி.ஐ. மாஸ்டர் யூனிட் ஸ்கீம்-ல் முதலீடு செய்யப்படுகிறது. இது போன்ற நிறுவனங்கள், எதிர்கால விரிவாக்கத்துக்கான பண வரத்தை உருவாக்குவதோடு, முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்ட அல்லது கடன் வாங்குவதற்கு ஏற்கெனவே உள்ள பங்குகளை விற்பனை செய்ய தேவை இருக்காது. இது போன்ற நிறுவனங்களின் பங்கு விலை நீண்ட காலத்தில் சிறப்பாக இருக்கும்.
இந்த ஜி.ஏ.ஆர்.பி பிளஸ் காம்பெட்டிவ் ஃப்ரான்ஸி (GARP plus Competitive Franchise) முறையில் யூ.டி.ஐ. மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம்-க்கு நிறுவனப் பங்குகள் தேர்வு செய்யப்படுகின்றன.
- பங்குச் சந்தையானது, நிறுவனத்தின் வளர்ச்சி திறனை நீண்ட காலத்தில் குறைத்து மதிப்பீடு செய்திருக்கும் அல்லது பங்கு விலையை குறைத்து மதிப்பீடு செய்திருக்கும்.
- தேவை சுழற்சியை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், ஒழுங்குமுறை அமைப்புகளின் சிக்கல்களை தீர்த்து வைத்தல் அல்லது செலவு குறைப்பு மூலம் போட்டி நிறுவனங்களை சமாளித்தல், துணிச்சலான உற்பத்தி திறன் விரிவாக்கம்.
- தொழிலை தொடங்க, வணிக மூலதனம் அதிகமாக தேவைப்படும் நிலையிலும், கவனமாக முதலீடு செய்து, அந்தத் துறை சார்ந்த நிறுவனங்களிளேயே சிறப்பாக செயல்படும் நிறுவனகளின் பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்வது.
- பண வரத்தை மீண்டும் முதலீடு செய்யும், அதிக ஆர்.ஓ.சி.இ (RoCE - Return on Capital Employed -RoCE) கொண்ட நிறுவனப் பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்வது.
- குறிப்பிட்ட ஒரே துறையில் ஒப்பீட்டு அளவில் கவர்ச்சிகரமான பங்காக இருப்பது
இது, முதலீட்டாளர்களுக்கு தரமான நிறுவனப் பங்குகளை கொண்ட முதலீட்டுக் கலவை (portfolio) மூலம் நீண்ட காலத்தில் குறைவான ஏற்ற இறக்கத்தில் செல்வத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது. யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், லார்ஜ் கேப் ஃபண்ட் (Large Cap Fund) என வகைப்படுத்தப்படுத்துள்ளது. இதன் முதலீட்டுக் கலவையில் பெரிய நிறுவனப் பங்குகளான ஹெச்.டி.எஃப்.சிபேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐ.டி.சி, லார்சன் அண்ட்டூப்ரோ, டெக்மஹிந்திரா, ஆக்சிஸ் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க் போன்ற பங்குகள் இதன் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றுள்ளன. போர்ட்ஃபோலியோவில் இந்த முக்கிய 10 நிறுவனப் பங்குகளின் பங்களிப்பு சுமார் 50% ஆக உள்ளது. 2019, ஏப்ரல் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டத்தில் தனியார் துறை வங்கிகள், கிராமப்புற வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தும் வங்கிச் சாரா நிதி நிறுவனங்கள் (NBFC), தகவல் தொழில்நுட்பம், தொழில் உற்பத்தி போன்ற துறை சார்ந்த பங்குகள் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. எரிசக்தி, நுகர்வு மற்றும் உலோகங்கள் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் குறைவாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2019, ஏப்ரல் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டில் நிர்வகிக்கப்படும் மொத்த தொகை ரூ.6,000 கோடிக்கு மேல் உள்ளது. இந்த ஃபண்ட் 5.86 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த ஃபண்ட் நீண்ட காலத்தில், மூலதன அதிகரிப்பை இலக்காக கொண்டதாக அல்லது வருமான அளிப்பை கொண்டதாக இருக்கிறது. ஆரம்பம் முதல், தொடர்ந்து ஆண்டு தோறும் இடைவெளி விடாமல் டிவிடெண்ட் வழங்கி வருகிறது. யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் கடந்த 15 ஆண்டு காலத்தில் ரூ. 3,000 கோடிக்கு மேல் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்துள்ளது.இந்த ஃபண்ட், அதன் திரட்டப்பட்ட நிதியில் 80%க்கு மேல் லார்ஜ் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்வதை நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது. இதையே எதிர்காலத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். குறைந்த ஏற்ற இறக்கத்தில் நிலையான செயல்பாட்டை இந்த ஃபண்ட் கொண்டுள்ளது.
யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், திட்டத்தின் ஆரம்பம் முதல், 2019 ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் ஆண்டுக்கு சராசரியாக (CAGR)) 15.77% வருமானம் கொடுத்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அதன் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் ஆன எஸ்&பி பிஎஸ்இ 100 (S&P BSE 100), மொத்த வருமான குறியீடு ( Total Return Index – TRI) 14.25% வருமானம் கொடுத்திருக்கிறது.
இந்த யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்ட போது செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் முதலீடு, கடந்த 32 ஆண்டு காலத்தில் ரூ.11.77 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 117 மடங்கு வருமானத்தைக் கொடுத்து உள்ளது.
யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், பங்குச் சந்தை சார்ந்த போர்ட்ஃபோலியோ உருவாக்க விரும்பும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. கூடவே நிலையான மற்றும் தொடர்ந்த வருமான வளர்ச்சியை லார்ஜ் கேப் முதலீட்டுக் கலவை மூலம் விரும்புகிறவர்கள் மற்றும் நீண்ட காலத்தில், தொடர்ச்சியான டிவிடெண்ட், மூலதன வளர்ச்சியை விரும்புகிறவர்களுக்கு ஏற்ற ஃபண்ட் ஆக உள்ளது.