மொத்தப் பக்கக்காட்சிகள்

எம்.எஸ்.எம்.இ கடன் வேகமான வளர்ச்சி


டிரான்ஸ்யூனியன் சிபில் - சிட்பி எம்.எஸ்.எம்.இ பல்ஸ் காலாண்டு அறிக்கை:  வேகமான கடன் வளர்ச்சி மேம்பாட்டுக்கானஅறிகுறிகள் 


எம்.எஸ்.எம்.இ கடன் வேகமான வளர்ச்சி – 2013 டிசம்பர் மற்றும் 2018 டிசம்பர் இடையே ஆண்டு கூட்டு வளர்ச்சி 19.3%, அனைவருக்கும் நிதிச் சேவை வளர்ச்சிக்கான   அறிகுறி 

2018 –ம் ஆண்டில் எம்.எஸ்.எம்.இ  நிறுவன கடன் பிரிவில் புதிதாக கடன் கடன் வாங்கியவர்கள் எண்ணிக்கை 10.1 லட்சம்

டிரான்ஸ்யூனியன் சிபில் - சிட்பி எம்.எஸ்.எம்.இ பல்ஸ் அறிக்கை (TransUnion CIBIL- SIDBI MSME Pulse Report) யின் ஐந்தாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வர்த்தக கடன்  (commercial credit) வளர்ச்சி  தொடர்ந்து அதிகரித்து வருவது, தெரியவந்துள்ளது. 2018 டிசம்பர்  உடன் முடிந்த காலாண்டில் 14.4% வளர்ச்சி அதிகரித்துள்ளது இந்த அறிக்கையில் 2018 டிசம்பர் நிலவரப்படி, இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 111.1 லட்சம் கோடிகளாக உள்ளன, இதில் எம்எஸ்எம்இ கடன்கள் (MSME credit) ரூ. 25.2 லட்சம் கோடிகளாக உள்ளன. இந்தக் கடனில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வணிகத் தேவைக்கு வழங்கப்பட்ட கடன்களும் அடங்கும்.

எம்எஸ்எம்இ கடன்கள் (நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்), கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. மொத்த நிலுவை கடன் (total balance outstanding) ஆண்டுக்கு சராசரியாக 19.3% வளர்ச்சி கண்டுள்ளது. வாராக் கடன் விகிதம் (NPA rates)  நிலையாக குறைந்து வருகிறது. பெரிய  நிறுவனங்கள் பிரிவில் வாராக் கடன் விகிதம் 20% (2018 ஜூன்) லிருந்து 19% (டிசம்பர் 2018) ஆக குறைந்துள்ளது ;  மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் வாராக் கடன் விகிதம் 18% (2018 ஜூன்) லிருந்து 16.5% (டிசம்பர் 2018) ஆக குறைந்துள்ளது.  

எம்எஸ்எம்இ  பல்ஸ் என்பது காலாண்டு அடிப்படையில்,  டிரான்ஸ்யூனியன் சிபில் வர்த்தக பிரிவு (TransUnion CIBIL Commercial Bureau) 70 லட்சத்துக்கும்  (7 million)  மேற்பட்ட  இயங்கிக் கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்களை கொண்டுள்ளது.  இந்தப் பட்டியலில் தனி உரிமை நிறுவனங்கள் / கூட்டு நிறுவனங்கள் (proprietorship/partnership firms) முதல் பட்டியலிடப்பட்டநிறுவனங்கள் (listed entities) வரை என பல தரப்பட்ட நிறுவனங்கள்  இடம் பெற்றுள்ளன. 

இந்தக் கடன் சார்ந்த புள்ளி விவரங்கள், வங்கிகள், வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப் புற வங்கிகள் (Banks, NBFCs, HFCs, Cooperative banks, Regional Rural Banks) மற்றும் இதர ஒழுங்குப்படுத்தப்பட்ட கடன்வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு மாதம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த அறிக்கை குறித்து சிட்பி-ன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. முஹம்மத் முஸ்தபா (Mr. Mohammad Mustafa, Chairman and Managing Director, SIDBI) கூறும் போது,’’ வாராக் கடன் குறைந்து வருவதோடு, எம்.எஸ்.எம்.இ. கடன் வளர்ச்சி கண்டு வருவது இந்தப் பிரிவின் உறுதியான வளர்ச்சியை சுட்டிக்காட்டுவதோடு பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருவதையும் குறிக்கிறது. எம்.எஸ்.எம்.இ பல்ஸ்-ன் இந்தப் பதிப்பின் மூலம், எம்.எஸ்.எம்.இ  நிறுவன கடன் பிரிவில் புதிதாக கடன்  வாங்கியவர்கள் (New-to-Credit MSME borrowers) எண்ணிக்கை அதிகரித்திருப்பதை காணலாம். இந்தப் போக்கு, இந்தியாவில் எளிதாக வணிகம் (ease of doing business) மேற்கொள்ளும் தன்மை மேம்பட்டிருப்பதை காட்டுகிறது. மற்றும் ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தையிலிருந்து  எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன் தேவை அதிகரித்திருப்பதை குறிக்கிறது. மேலும், இந்தத் துறையில் அனைவருக்கும் நிதிச் சேவை என்பது வேகமாக வளர்ச்சிகண்டு வருவதற்கும் உதவி செய்கிறது.” 

எம்.எஸ்.எம்.இ பல்ஸ்-ன் இந்தப் பதிப்பின்  அறிக்கையிலிருந்து மற்றொரு முக்கிய விஷயம் வெளிபட்டியிருக்கிறது. அதாவது, எம்.எஸ்.எம்.இ கடன் பிரிவில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏற்பட்டிருப்பதை காணமுடிகிறது. இந்தப் பகுப்பாய்வின் மூலம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலான காலத்தில் எம்.எஸ்.எம்.இ கடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 4% (400 basis points) அதிகரித்து, 2018 டிசம்பரில் 13.6% உயர்ந்துள்ளது. இது 2013 டிசம்பரில் 9.6% ஆக இருந்தது. இந்த வேகமான அதிகரிப்பு, எம்.எஸ்.எம்.இ கடன் பெற்றதில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பிரிவில் முறையே 1.3% மற்றும் 2.6% வளர்ச்சி கண்டிருக்கிறது.

குறிப்பிடத்தக்க விஷயமாக, எம்.எஸ்.எம்.இ கடன் பிரிவில், நிலுவையிலுள்ள எம்.எஸ்.எம்.இ கடன்கள் (MSME loans outstanding) மற்றும் எம்.எஸ்.எம்.இ மொத்த மதிப்பு அதிகரிப்பு {(MSME GVA (Gross Value Added)} இடையேயான விகிதம் 2013 டிசம்பரில் 32.2% ஆக இருந்தது. இது 2018 டிசம்பரில் 47.6% ஆக அதிகரித்துள்ளது. அதாவது, சாதனை அளவாக 15.4% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, நிறுவனங்கள் பிரிவில் 5.8% ஆகவும், தனிநபர்கள் பிரிவில் 9.7% ஆகவும் இருந்ததால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.

கடன் வளர்ச்சி குறித்து டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. சதீஷ் பிள்ளை (Managing Director and CEO of TransUnion CIBIL –Mr. Satish Pillai) கூறும்போது, “  கடந்த இரு ஆண்டுகளில் கடன்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி வேகம் இருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். ஆனால், இந்த அளவிலான வேகமான வளர்ச்சி கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும், கடன் வளர்ச்சியில் விரைவான வேகம் ஏற்படும்போது, கடன் துறையில் அழுத்தம் ஏற்படக்கூடும். கடன் கொடுப்பவர்கள் தங்களுடைய கடன் போர்ட்ஃபோலியோக்களை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும், மேலும், கடனை நெறிபடுத்துபவர்கள் கடன் துறையில் உள்ள இடர்ப்பாட்டை (risks) கவனித்து வரவேண்டும்.”

திரு. பிள்ளை மேலும் கூறும் போது, பிரதான கடன் புள்ளி விவரங்களில்  மாற்று தரவு ஆதாரங்களை சேர்ப்பதற்கான தேவையை மீண்டும் வலியுறுத்தினார். “ கடன் அமைப்பை விரைவாக செயல்படுத்த — கடன் தகவல் நிறுவனங்கள் (credit information companies), டிரெட்ஸ் (TREDS) மற்றும் வங்கிகளிடமிருந்து வர்த்தக கடன் விவரங்களை அணுக கட்டாயம் அனுமதி அளிக்க வேண்டும். பிரதான கடன் புள்ளி விவரங்களில் மாற்று தரவு ஆதாரங்களை சேர்ப்பது மூலம் கடன் இடர்ப்பாட்டை கண்காணிப்பது மேம்படும்.”  

எம்எஸ்எம்இ பல்ஸ் நான்காம் பதிப்பு  முக்கிய அம்சங்கள் (MSME Pulse Fourth Quarter Edition Highlights)

இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ. 111.1 லட்சம் கோடிகள் (Total credit exposure in India stands at ₹111.1 Lakh Crores): 

2018 டிசம்பர் நிலவரப்படி, இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 111.1 லட்சம் கோடிகளாக உள்ளன. இதில் நடுத்தர மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் 43% ஆக அதாவது ரூ. 47.5 லட்சம் கோடிகளாக உள்ளன. இதில் நுகர்வோர் கடன்கள் (சில்லறை, விவசாயம் மற்றும் முன்னுரிமை துறை கடன்கள்), இரண்டாவது பெரிய பிரிவாக உள்ளது. இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட கடன்கள் 35% ஆக அதாவது ரூ. 38.4 லட்சம் கோடிகளாக உள்ளன. இந்தக் கடனில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு (கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்) வழங்கப்பட்ட கடன்கள் மூன்றாவது இடத்தில்  23% பங்களிப்புடன்  உள்ளது..

கடன் வளர்ச்சி தொடர்கிறது: (Credit growth resumes in earnest:) 

2018 டிசம்பர் காலாண்டில், வர்த்தக கடன்  வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 14.4% அதிகரித்துள்ளது.  பெரிய நிறுவனங்கள் (ரூ.100 கோடிக்கு மேல் கடன்) குறிப்பிட்டத்தக்க அளவு அதிகமான வளர்ச்சியை பெற்றிருந்தது. இந்தப் பிரிவு, 14.9% வளர்ச்சி கண்டு, தொடர்ந்து அதிக வளர்ச்சியை பெறும் என்கிற அறிகுறியை வெளிக்காட்டியுள்ளது. நுண் நிறுவனங்கள் (ரூ. 1 கோடிக்கு குறைவான கடன்)  மற்றும் எஸ்எம்இ நிறுவனங்கள் (ரூ. 1 கோடி முதல் ரூ. 25 கோடிகள்)  பிரிவுகளுக்கு ரூ. 14.8  லட்சம் கோடி கடன்கள் (மொத்தம் வழங்கப்பட்ட கடன்களின் இப்பிரிவுகளின் பங்களிப்பு 23.7%) வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகள் முறையை ஆண்டு கணக்கில் 19.2% மற்றும் 15.9% வளர்ச்சிக் கண்டுள்ளன. 

நடுத்தர நிறுவனங்களில்  (ரூ. 25 கோடிகள் முதல் ரூ. 100 கோடிகள்), 2017 டிசம்பரிலிருந்து 2018 டிசம்பர் வரை   5% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  

மீட்சிப் பாதையில் வங்கி துறை (Banking Sector on the way to recovery): 

நீண்ட காலமாக மந்த நிலையில் இருந்த வங்கித் துறை, வாராக் கடன் விகிதம் குறைந்து வருவதை அடுத்து மீட்சிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது. வாராக் கடன் விகிதம், 2018 மார்ச் மற்றும் 2018 ஜூன் இடையே பெரிய  நிறுவனங்களில் மிக அதிகமாக இருந்தது. இது 2018 ஜூன் மாதத்தில் 20% ஆக இருந்தது. 2018 டிசம்பர் மாதத்தில் 19% ஆக குறைந்துள்ளது. 

இதேபோல் சிறிய நிறுவனங்களில் வாராக் கடன் விகிதம், 2018 ஜூன் மாதத்தில் 18% ஆக இருந்தது. இது 2018 டிசம்பர் மாதத்தில் 16.5% ஆக குறைந்துள்ளது

உறுதியான நிலையில் எம்.எஸ்.எம்.இ கடன் வளர்ச்சி (MSME credit growth on a firm footing). 

ஒட்டு மொத்த எம்எஸ்எம்இ கடன்கள் (நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்), கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேகமான வளர்ச்சியை கண்டு வருகின்றன.. மொத்த நிலுவை கடன்கள் (Total balance outstanding), 2013 டிசம்பர் மாதத்தில் ரூ. 10.4 லட்சம் கோடிகளாக இருந்தது. இது 2018 டிசம்பர் மாதத்தில் ரூ. 25.2 லட்சம் கோடிகளாக அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு சராசரியாக வளர்ச்சி (CAGR)    19.3% ஆகும். 

ஒட்டு மொத்த எம்.எஸ்.எம்.இ. கடன் வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 15.7% ஆக உள்ளது. தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட கடன்  26.1%வளர்ச்சி கண்டுள்ளது.

எம்.எஸ்.எம்.இ கடன்களில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு குறைவு (PSBs Share in MSME lending has been reducing):

எம்.எஸ்.எம்.இ கடன்களில் பொதுத்துறை வங்கிகளின் (Public Sector Banks) பங்களிப்பு, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பிரிவில் கடந்த ஐந்தாண்டுகளில் (2013 டிசம்பர் – 2018 டிசம்பர்)  58%லிருந்து 39% ஆக குறைந்துள்ளது எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்குவதில் தனிப்பட்ட பெரிய அமைப்பு பொதுத்துறை வங்கிகள் என்றாலும், அவற்றுக்கும் தனியார் வங்கிகளுக்கும் இடையே கடன் அளிக்கும் பங்களிப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது. இது   2013 டிசம்பர் மாதத்தில் 37% ஆக இருந்தது.  இது 2018 டிசம்பர் மாதத்தில் வெறும் 7% ஆக குறைந்துள்ளது. 

பி.சி.ஏ ஃபிரேம்ஒர்க் ஏற்பட்ட பிறகு, பொதுத்துறை வங்கிகளின் கடன் பங்களிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களுக்கு தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கலாம்.

சிட்பி பற்றி..!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank of India -SIDBI). இது, நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) பிரிவின் மேம்பாடு, நிதி மற்றும் அபிவிருத்திக்கான பிரதான நிதி நிறுவனம். 

மேலும், இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. சிட்பியின் வணிகம்  என்பது நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) பிரிவை சார்ந்துள்ளது.  சிட்பி, எம்.எஸ்.எம்.இ துறைக்கு தேவையான நிதி உதவி மற்றும் மேம்பாட்டு தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது.

கூடுதல் விவரங்களுக்கு பார்வையிடவும் www.sidbi.in.

 டிரான்ஸ்யூனியன்  சிபில் பற்றி..!

இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனமாக டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) உள்ளது. இது உலக அளவிலான கடன் தகவல்களை மிகப் பெரிய களஞ்சியமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் , அனைத்து முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிச் சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் உட்பட 3000- க்கும் அதிகமான உறுப்பினர்கள்  இணைந்துள்ளனர்.  தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் 100 கோடிக்கும் (1000 million)  மேற்பட்ட கடன் பதிவுகளை பராமரித்து வருகிறது.

இதன் நோக்கம் என்பது  வணிகம் விரைவாகவும், குறைந்தக் கட்டணத்தில் கடன் தகவல்களை அளித்து தகவல் தீர்வுகளை கொடுப்பதாக இருக்கிறது. இந்த அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு கடன் சார்ந்த இடர்பாட்டை நிர்வகிக்க உதவுவதன் மூலம், செலவுகளைக் குறைக்கவும், லாபத்தை  கூட்டவும் சரியான வணிக உத்திகளை திரட்ட உதவுகிறது.  

நுகர்வோர் மற்றும் வணிக கடனாளர்களுக்கு விரிவான, நம்பகமான தகவல்களை அளித்து, தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களும் கடன்  வழங்குவதற்கான முடிவை சுலபமாக எடுக்க உதவுகிறது.  தகவல்களின் சக்தி (Power of Information) மூலம்  டிரான்ஸ்யூனியன் சிபில், அதன் உறுப்பினர்களுக்கு கடன் குறித்த தகவல்களை அளிப்பதோடு, அனைவருக்கும் நிதிச் சேவை மூலம் வலிமையான  பொருளாதாரத்தை உருவாக்க உதவுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு பார்வையிடவும்: www.transunioncibil.com



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...