ஐசிஐசிஐ பேங்க், மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கார் & இரு சக்கர வாகன கடன் உடனடி ஒப்புதல்
· வாகனத்தின் ஆன் - ரோடு விலைக்கு முழு நிதி உதவி
· வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு முறையே ரூ. 20 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் வரை கடன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது
· முழுமையாக டிஜிட்டல் மற்றும் முற்றிலும் காகிதமற்ற ஒப்புதல் செயல்முறை
சென்னை: ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) இன்று மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கார் மற்றும் இரு சக்கர வாகன கடன்களுக்கு (car and two-wheeler loans) உடனடி ஒப்புதல் வழங்கும் இறுதி கடிதத்தை வழங்கிய அறிவிப்பை வெளியிட்டது. இது முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த முதல் சேவை, ‘இன்ஸ்டா ஆட்டோ கடன்’ (‘Insta Auto Loan’) என அழைக்கப்படுகிறது. முன்-ஒப்புதல் அளிக்கப்பட்ட (pre-approved) இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு இறுதி ஒப்புதல் கடிதத்தை (final sanction letter) இந்த வங்கி வழங்கி இருக்கிறது. இந்தக் கடனை ஏழு ஆண்டுகள் வரை திரும்பச் செலுத்தலாம்.
இரண்டாவது முன் முயற்சி, 'இன்ஸ்டா டூ வீலர் கடன்’ (‘Insta Two-Wheeler Loan’), முன்ஒப்புதல் அளிக்கப்பட்ட 12 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான இரு சக்கர வாகான கடன் தொகைக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்தக் கடனை மூன்று ஆண்டுகள் வரை திரும்பச் செலுத்தலாம். இந்த இரு வசதிகளும் வாகனத்தின் ஆன் - ரோடு விலையில் (on-road price) 100 சதவிகிதம் கடனாக வழங்கப்படும்.
இந்தச் சலுகைகள், வாடிக்கையாளர்களின் வசதியை கணிசமாக மேம்படுத்தி இருக்கிறது. ஏனெனில் அவர்கள் இனிமேல் கடன் ஒப்புதல் கடிதத்துக்காக தங்கள் கிளைக்கு வர வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் வங்கியின் இணைய வங்கி (internet banking) வசதி மூலம் சில கிளிக்-களில் இறுதி ஒப்புதல் அனுமதி கடிதத்தை உருவாக்கி கொள்ள முடியும்.
இந்த ஒப்புதல் கடிதம் 15 நாள்களுக்கு செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள், நாடு முழுவதும் அவரது / அவளது விருப்பமான வாகன விற்பனையாளரை சந்திக்க முடியும், வாகனத்தைத் தேர்ந்தெடுத்து இறுதி ஆவணங்களைச் சமர்ப்பித்த சில வேலை நேரங்களில் கடன் வழங்கப்படும்.
பொதுவாக, ஒரு வாடிக்கையாளர் வாகனக் கடன் பெறுவதற்கான முழு செயல்முறைகளை முடிக்க வேண்டும் என்றால் சில நாள்கள் எடுத்துக்கொள்ளும். அந்த வகையில், இந்த உடனடி ஒப்புதல் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
இந்த முன்முயற்சிகளைப் பற்றி திரு. ரவி நாராயணன், தலைவர் – ரீடெய்ல் செக்யூர்ட் அசெட்ஸ், ஐசிஐசிஐ பேங்க் (Mr. Ravi Narayanan, Head - Retail Secured Assets, ICICI Bank), கூறும் போது, “ஐசிஐசிஐ வங்கி, எப்போதும் புதுமையான திட்டங்கள் மற்றும் சேவைகளை வேகமாகவும் மிகவும் வசதியாகவும் வழங்கி வருகிறது. புள்ளிவிவர பகுப்பாய்வு (data analytics) மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வங்கி பல்வேறு புதுமையான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக, உடனடி திட்டங்களை - நாட்டின் முதல் உடனடி கிரெடிட் கார்ட் (instant credit card), உடனடி தனிநபர் கடன் (insta personal loan), உடனடி டிஜிட்டல் கடன் திட்டமான பேலேட்டர் (PayLater), எம்.எஸ்.எம்.இ (MSME) நிறுவனங்களுக்கு உடனடி ஓவர்டிராஃப்ட் வசதி (insta overdraft facility), உடனடியாக பொது சேமநல கணக்கை (Public Provident Fund account) ஆரம்பிக்கும் வசதி போன்றவை.
இந்த வரிசையில் 'உடனடி' கார் மற்றும் இரு சக்கர வாகன கடன் வசதி சேர்ந்திருக்கிறது. இந்த இரு வசதிகளை மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வசதி மூலம் அளித்து வருகிறது. அந்த வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் இல்லாமல் சில மணி நேரங்களில் கடன் மூலம் வாகனம் வாங்கும் வசதியை ஐசிஐசிஐ பேங்க் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த முன் முயற்சிகள் வங்கி, வாகன கடன்களில் அதன் நிலையை உறுதிப்படுத்துவதற்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்."
ஐசிஐசிஐ பேங்க், அதன் சொந்த டிஜிட்டல் பகுப்பாய்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைன் வாடிக்கையாளர்களின் கடன் மதிப்பீட்டை நிறைவு செய்து வருகிறது. புதிய வழிமுறைகள், பல்வேறு நிதி அளவீடுகள், கடன் நுண்ணறிவு தகவல், வங்கிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அறிவார்ந்த கலவையைப் பயன்படுத்தி, வாடிக்கையாளரின் கடன் தகுதியை உறுதிப்படுத்துகிறது.
வாடிக்கையாளரின் கடன் மதிப்பீட்டை (credit-score) அடிப்படையாகக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகை, முன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இது வாகனத்தை விரைவாக கடன் மூலம் வாங்க உதவுகிறது.
வங்கியின் இணைய தளத்தை பயன்படுத்தி உடனடி கார் மற்றும் இரு சக்கர வாகனக் கடன் பெறுவதற்கு எளிய மூன்று படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியின் ஐமொபைல் (iMobile) பயன்பாட்டில் இந்த வசதிகள் விரைவில் கிடைக்கும்.
1. முதலில் வங்கியின் retail internet banking > செல்ல வேண்டும். அங்குள்ள ‘My accounts’ - ஐ க்ளிக் செய்ய வேண்டும் பிறகு > Loans > - ஐ க்ளிக் செய்ய வேண்டும். பிறகு instant sanction - car loan / two-wheeler loan - ஐ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
2. கடன் தொகை மற்றும் கடனை திரும்பச் செலுத்தும் ஆண்டுகளை தேர்வு செய்ய வேண்டும். வாகன உற்பத்தி நிறுவனம் மற்றும் டீலரை தேர்ந்தெடுப்பதற்கான வசதியும் உள்ளது.
3. விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் (terms & conditions) ஏற்றுக்கொண்டால், கடன் ஒப்புதல் கடிதம் உருவாகும். (உடனடி கார் கடன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட இ-மெயிலுக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பப்படும். உடனடி இரு சக்கர கடனுக்கு, பார்வை எண் (reference number) உடன் ஒப்புதல் கடிதம் வழங்கப்படும். வாடிக்கையாளர் தனக்கு விருப்பமான டீலரை தேர்வு செய்துக்கொள்ளலாம்.
'உடனடி' டிஜிட்டல் திட்டங்களின் தொடர் வரிசையை அறிமுகப்படுத்தும் வங்கியின் முன்முயற்சிகளின் தொடர்ச்சியாக, 'உடனடி ஆட்டோ கடன்" மற்றும் 'உடனடி இரு சக்கர வாகன கடன்' வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் வசதியில் நாட்டின் முதல் உடனடி கிரெடிட் கார்ட், உடனடி தனிநபர் கடன் , உடனடி டிஜிட்டல் கடன் திட்டம் - பேலேட்டர் , எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு உடனடி ஓவர்டிராஃப்ட் வசதி, உடனடியாக பொது சேமநல கணக்கை (Public Provident Fund account) தொடங்கும் வசதி, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட உடனடி வீட்டுக் கடன்கள் (Instant Home Loans) மற்றும் உடனடி டாப் அப் வீட்டுக் கடன் (Insta Top Up Home Loan) போன்றவை அடங்கும்.
உடனடி ஆட்டோ கடன்கள் பற்றி தெரிந்துகொள்ள
பார்வையிடவும்
உடனடி இரு சக்கர வாகன கடன்கள் பற்றி தெரிந்துகொள்ள பார்வையிடவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக