மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆர்.பி.ஐ எச்சரிக்கும் Anydesk செயலி: இதை பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்!


ஆர்.பி.ஐ எச்சரிக்கும் செயலி: இதை பயன்படுத்தாதீங்கபணம் திருடப்படலாம்!

அண்மையில் பாரத ரிசர்வ் வங்கி‘Any desk’ என்றமொபைல்செயலிபற்றிஎச்சரிக்கை செய்திருந்தது.

UPI மூலம் இந்தஆப்நம்பணத்தைத் திருடுகிறது என்பதேஅந்தஎச்சரிக்கை.
அதைத்தொடர்ந்து2019  மார்ச் மாதம் UPI பேமென்ட்களுக்கு பொறுப்பான NCPI (National Payments Corporation of India) அமைப்பும் Anydesk செயலி பற்றி ஓர்எச்சரிக்கை செய்தது.

அதில், Anydesk ஆப்மூலம்போலியான UPI பேமென்ட்கள் நடப்பதால் அந்தஆப்பையாரும்தரவிறக்கம் செய்யவேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும் குறுஞ்செய்தி மூலமும் இந்தச்செயலிபற்றிஃபார்வர்டுகள் அதிகரிக்கத் தொடங்கின. உண்மையில், இந்தச்செயலியால் பிரச்னையா அல்லதுவாட்ஸ்அப்பில் சுற்றும் எண்ணற்ற போலிஃபார்வர்டுகளில் இதுவும் ஒன்றாஎன்றசந்தேகம் எழுந்திருக்கிறது.

RBI மற்றும் NCPI அமைப்புகள் ANYDESK பற்றி எச்சரித்திருப்பது உண்மைதான். எனவே, இந்தச்செயலிபிரச்னைக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ANYDESK-தான்பிரச்னை எனநாம்எடுத்துக்கொண்டால் அடுத்து இதேவேலையைஇன்னொரு பெயரில் வேறுஒருசெயலியும் செய்யலாம், நமக்கேதெரியாமல். எனவே, ANYDESK என்னசெய்துஏமாற்றுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

முதலில் குறுஞ்செய்தி மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ ANYDESK செயலியைத் தரவிறக்கச் சொல்லிவிளம்பரம் வரும். அதிலிருக்கும் இணைப்பைக் க்ளிக்செய்தால் செயலிநம்மொபைலில் இன்ஸ்டால் ஆகிவிடும்.

பின், நம்மொபைலில் 9 டிஜிட்கோடுஎண்ஒன்றுஉருவாகும். அந்தஎண்ணைப் பகிரச்சொல்லிகேட்பார்கள். நாமும்எதற்குஎனத்தெரியாமல் தந்துவிட்டால், அந்தஎண்ணைஅவர்கள் மொபைலில் உள்ளீடு செய்துவிடுவார்கள். இதன்மூலம்நம்மொபைலின் ஆக்ஸஸ்முழுவதும் அவர்களுக்குக் கிடைத்துவிடும். அதற்கான செக்தான் அந்தக்கோடு. அதுஎதற்கெனத் தெரியாமலே நாம்பகிர்ந்திருப்போம்.
இப்போது, நம்மொபைலில் நம்கையிலிருந்தாலும் ஏமாற்றுக்காரர்கள் நாம்செய்வது போன்றநிதிசார்ந்த டிரான்ஸாக்ஷன்களைஅவர்களில் மொபைலிலிருந்தே செய்யமுடியும்

NCPI-ன் எச்சரிக்கைபடி இந்தவழியில் நம்வங்கியிலிருந்து மட்டுமல்ல; பேடிஎம், ஃபோன்பே போன்றவாலட்களிலிருந்தும் அவர்களால் பணம்எடுக்கமுடியும்; நிதிப்பரிவர்த்தனைகள் செய்யமுடியும்.
மார்ச்மாதம்NCPI தந்தஅறிக்கைப்படி இதுபோன்ற ஐந்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கின்றன.

உண்மைஎன்னவென்றால் பலபேருக்குப் பணம்எடுக்கப்பட்ட பின்னர் என்னசெய்யவேண்டுமெனத் தெரியாமல் இருந்திருக்கும். இன்னும் சிலபேருக்குப் பணம்எடுத்திருக்கிறார்கள் என்பதேதெரியாமல் இருந்திருக்கும்
பிரச்னை ANYDESK மட்டுமல்ல. இப்படி, விளம்பரம் மூலம்என்னவென்றே தெரியாமல் நம்மொபைலில் இன்ஸ்டால் செய்யும் செயலிகளும், எதற்காக எனத்தெரியாமல் கால்செய்துகேட்பவர்களிடத்தில் நாம்பகிரும் OTP, CVV, Card number போன்றவையும்தான். அதைப்புரிந்துகொள்வதுதான் இதுபோன்றபிரச்னைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...