மொத்தப் பக்கக்காட்சிகள்

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு : ரூ. 50 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு


ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்-ன் செஞ்சுரி எஸ்.ஐ.பி மூலம் முதலீட்டாளருக்கு ரூ. 50 லட்சம் வரை ஆயுள் காப்பீடு

 முக்கிய அம்சங்கள்

·  பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் என ஒருங்கிணைந்த பட்டிலியலுள்ள சொத்து பிரிவுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கப்படுகிறது.
·   முதலீட்டு காலம் அல்லது முதலீட்டாளரின் 60 வயது, எது முந்துகிறதோ அதுவரை ஆயுள் காப்பீடு
·         ஒரு முதலீட்டாளருக்கு அனைத்து திட்டங்கள்/ ஃபண்ட்கள்/ ஃபோலியோ என அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை ஆயுள் காப்பீடு


ஆதித்ய
 பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் (Aditya Birla Capital Limited) குழுமத்தின் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவான  ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் (Aditya Birla Sun Life Mutual Fund - ABSLMF) இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் அதன்  செஞ்சுரி எஸ்.ஐ.பி (Century SIP -CSIP) வசதி மூலம் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் சீரான முதலீட்டு திட்டமான (SIP -Systematic Investment Plan) எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் வரை ஆயுள் காப்பீடு (life cover) சலுகையை அளிக்கிறது.

இதற்கு முன் சி.எஸ்.ஐ.பி வசதியில் குறிப்பிட்ட பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களுக்கு (equity oriented schemes) மட்டும் இப்படி ஆயுள் காப்பீடு சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது,  தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் சந்தை சார்ந்த திட்டங்களுக்கும் (debt schemes) சி.எஸ்.ஐ.பி வசதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம்  ஏ.பி.எஸ்.எல்.எம்.எஃப் (ABSLMF), அதன் முதலீட்டாளர்களுக்கு பரந்துவிரிந்த சொத்துகளுக்கு சி.எஸ்.ஐ.பி  வசதி மூலம் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பு அளிக்கிறது. இந்த ஆயுள் காப்பீடு, மொத்த முதலீட்டு காலம் அல்லது முதலீட்டாளரின் 60 வயது வரை, எது முந்துகிறதோ அதுவரை அளிக்கப்படும்.

சி.எஸ்.ஐ.பி  தவணையை போல் 100 மடங்குகள் வரை அல்லது ரூ. 50 லட்சம் (எது குறைவோ அது) ஆயுள் காப்பீடு அளிக்கப்படும். இது, ஒரு முதலீட்டாளருக்கு அனைத்து ஸ்கீம்கள்/பிளான்கள்/ஃபோலியோகள் (schemes/plans/folios) என அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை ஆயுள் காப்பீடு அளிக்கிறது.

சி.எஸ்.ஐ.பி வசதியை பெற முதலீட்டாளர் முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும். அதேநேரத்தில், இந்த மூன்றாண்டுகள் நிறைவு பெறும் முன் முதலீட்டாளர் இடையில் முழுத் தொகை அல்லது பகுதி தொகையை எடுத்து விட்டால், ஆயுள் காப்பீடு வசதி தொடராது.


சி.எஸ்.ஐ.பி வசதி குறித்து ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட்-ன் முதன்மை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் (A. Balasubramanian, CEO, Aditya Birla Sun Life AMC Limited) கூறும் போது,மியூச்சுவல் ஃபண்ட்-ல் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்பவர்கள் மத்தியில் இந்த ஆயுள் காப்பீடு கூடுதல் சலுகை மிகவும் பிரபலமான விருப்பமாக இருக்கிறது. எஸ்.ஐ.பி  முதலீட்டின் நோக்கத்தை சி.எஸ்.ஐ.பி விரிவாக்கம் செய்கிறது. செஞ்சுரி எஸ்.ஐ.பி வசதியை பெற ஒரு முதலீட்டாளர் முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வருவது தேவையாக இருக்கிறது. இந்தக் கட்டாய காலம் என்பது முதலீட்டாளர்கள் இடையே ஒரு முதலீட்டு ஒழுங்கு ஏற்பட உதவிகரமாக இருக்கிறது.  இதனை கடந்துவிட்டால், அவர் நீண்ட காலத்திற்கு கூட்டு வளர்ச்சியின் பலனை அனுபவிப்பார்.  முதலீடு சிறக்க, நாங்கள் முதலீட்டாளர்களை நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய ஊக்கப்படுத்துகிறோம். மிக முக்கியமாக முழு முதலீட்டுக் காலமும் முதலீட்டாளரின் 60 வயது வரை, எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆயுள் காப்பீட்டு சலுகையை அளித்து வருகிறோம்.”.

எங்களின் சமீபத்திய இரண்டு புதிய ஃபண்ட் வெளியீடுகளான (NFO) ஏ.பி.எஸ்.எல் பால பவிஷ்ய யோஜனா (ABSL Bal Bhavishya Yojna) and  ஏ.பி.எஸ்.எல் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் (ABSL Retirement Fund)  ஆகியவற்றில் முதலீட்டு பூட்டுக் காலம் (lock-in period) இருந்தாலும் அதனையும் தாண்டி நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதன் அவசியத்தை முதலீட்டாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த இரு ஃபண்களிலும் மொத்த எஸ்.ஐ.பி. விண்ணப்பங்கள், சி.எஸ்.ஐ.பி  எண்ணிக்கைகள் குறிப்பிடத்தக்க விகிதாச்சாரத்தில் இருக்கின்றன. இது முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாகும்.”.

சி.எஸ்.ஐ.பி-ன் கீழ் 18 முதல் 51 வயதுள்ளவர்கள் விரும்பத் தேர்வாக ஆயுள் காப்பீட்டை பெறலாம். ஆயுள் காப்பீடு தொகை, எஸ்.ஐ.பி முதலீட்டை தொடரும் காலம் மற்றும் முதலீட்டாளரின் மாத எஸ்.ஐ.பி. தொகையை சார்ந்துள்ளது. ஆயுள் காப்பீடு தொகை, எவ்வளவு என்பதற்கான எளிமையான கணக்கீட்டு சூத்திரம், 10-50-100 மடங்குகளாகும். முதல் மூன்று ஆண்டுகளில் ஆயுள் காப்பீடு தொகை தொடர்ந்து அதிகரித்து வரும். முதல் ஆண்டில் சி.எஸ்.ஐ.பி மாதத் தொகையை போல் 10 மடங்குகள்,  இரண்டாம் ஆண்டில் 50 மடங்குகள் மற்றும் மூன்றாம் ஆண்டில் 100 மடங்குகள் என இருக்கிறது. இந்த ஆயுள் காப்பீட்டு தொகை, நிபந்தனைக்கு உட்பட்டு அதிகபட்சம் ரூ. 50 லட்சமாகும். 

மூன்றாண்டுகள் நிறைவு பெறும் முன் முதலீட்டாளர் இடையில் சி.எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிட்டால், ஆயுள் காப்பீடு வசதி தொடராது. மூன்று ஆண்டுகள் சி.எஸ்.ஐ.பி முதலீட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டால், முதலீட்டாளரின் 60 வயது வரை ஆயுள் காப்பீட்டு வசதி தொடரும். முதலீட்டாளர் மூன்றாண்டுகளுக்கு பிறகு எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தி விட்டார், ஆனால், பணத்தை எடுக்கவில்லை என்றால் சி.எஸ்.ஐ.பி மூலம் சேர்ந்திருக்கும் பணத்தின் மதிப்பு பாலிசி ஆண்டின் ஆரம்பத்தில் என்னவாக இருக்கிறதோ, அந்தத் தொகைக்கு இணையாக அல்லது நிபந்தனைக்கு உட்பட்டு மாதத் தவணையை போல் அதிகபட்சம் 100 மடங்குக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பங்குச் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது, முதலீடு செய்யும் முன், திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்
 (Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.)


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....