மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்திய அலுவலக கட்டடப் பரப்பு சந்தை எதிர்பார்ப்பு 2019


இந்திய அலுவலக கட்டடப் பரப்பு சந்தை எதிர்பார்ப்பு 2019 

(Office Market Outlook for 2019: Expected in 2019)

        அலுவலக கட்டடப் பரப்பு பயன்பாடு போக்கு (Absorption trends) : சர்வதேச  நிறுவனங்களின் வருகை, டிஜிட்டல் மயமாக்கம் மூலமான பணிபுரியும் இட மாற்றம் போன்றவற்றால் இந்திய ரியல் எஸ்டேட்டில் குத்தகைக்கு (Leasing) இடத்தைப் பெறுவது மேம்பட்டிருக்கிறது. குறிப்பாக, பிரதான மற்றும் நெகிழ்வு பணியிட உத்திகள் (Core + Flexi workplace strategies) பிரிவில் தேவை அதிகரித்திருக்கிறது.  

தற்போது குத்தகைக்கு விட பயன்பாட்டில் தரமான கட்டடப் பரப்புகளின் பங்களிப்பு 60-65 சதவீத அளவுக்கு இருக்கிறது. இது 2019-20 ஆம் நிதியாண்டில் சுமார் 70-75 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது நடப்பு 2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஒட்டுமொத்த அலுவலக கட்டட பரப்பு பயன்பாட்டில் தொழில்நுட்ப துறையின் பங்களிப்பு சுமார் 30-35 சதவீதமாகஇருக்கும்.

        அளிப்பின் போக்கு (Supply trends): நடப்பு 2019 ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஆர்.இ நிறுவனத்தின் அறிக்கையில்,  அடுத்த 12 மாதங்களில் சுமார் 4 கோடி சதுர அடி (40 million sq. ft.) புதிய அலுவலக இடங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கிறது. 

இதில் சுமார் 30 சதவீத கட்டட பரப்புகள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பயன்படுத்தப்படலாம். மேலும் குறைவான செலவு மற்றும் குறுகிய இடத்தில் அதிக பயன்பாடு, தொழில்நுட்பம் மேம்பாடு மூலம் சிறந்த கட்டடங்கள் (smarter buildings) உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


        வாடகையின் போக்கு (Rental trends) : முக்கிய ரியல் எஸ்டேட்  சந்தைகளான பெங்களூர், சென்னை மற்றும் புனேயில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுழைவு வாயில்( Gateway) நகரங்களான டெல்லி-என்.சி.ஆர் மற்றும் மும்பை நகரங்களிலும் இந்த வளர்ச்சி இருக்கும். நடப்பு 2019 ஆம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அல்லாத கட்டடங்களுக்கான வாடகையிலளோர் ஒருங்கிணைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From 

சி.பி.ஆர்.இ சவுத் ஆசியா பிரைவேட் லிமிடெட் (CBRE South Asia Pvt. Ltd)  

ரியல் எஸ்டேட் மார்க்கெட் அவுட்லுக் 2019 – இந்தியா 

(Real Estate Market Outlook 2019 - India)
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...