இந்திய சரக்கு போக்குவரத்து சந்தை : மாற்றத்தின் பாதையில்
(LOGISTICS MARKET: ON THE PATH TO TRANSFORMATION)
கடந்த 2018 ஆம் ஆண்டு கிட்டங்கி சந்தைக்கு (warehousing market)
ஒரு குறிப்பிடதக்க வருடம் ஆகும்.
இந்த ஆண்டில் மொத்தம் 2.4 கோடி சதுர அடி (24 million sq. ft)
கட்டடப் பரப்பு வாங்கப்பட்டிருக்கிறது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 44%
அதிகமாகும்.
இந்தத் தேவை மும்பை (22%), டெல்லி-என்.சி.ஆர் (19%)
மற்றும் பெங்களூர் (19%) என அதிகமாக உள்ளது.
இதற்கு அடுத்த இடங்களில் சென்னை மற்றும் ஹைதராபாத்
நகரங்கள் உள்ளன இவை முறையே 15% மற்றும் 12%
பயன்படுத்தி இருக்கின்றன.
இந்த வளர்ச்சிப் போக்கு நடப்பு ஆண்டிலும் தொடரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இ-காமர்ஸ், பொறியியல் மற்றும் உற்பத்தி துறை நிறுவனங்கள் (e-commerce, engineering &manufacturing firms)
இந்தத் தேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
இவற்றின் பங்களிப்பு முறையை சுமார் 35%, 23% மற்றும் 15%
ஆக உள்ளது.
சரக்கு போக்குவரத்து சந்தைக்கான தேவையில்
மும்பையின் பிவாண்டி (23%) ஹைதராபாத்தில் மேற்கு பாதை
(Western corridor) கொல்கத்தாவின் தேசிய நெடுஞ்சாலை - 6 (16%) மற்றும் சென்னையின் வடக்கு பகுதி (11%) அதிகமாக
இருக்கிறது.
• 2019 ஆம் ஆண்டுக்கான சரக்கு போக்குவரத்து எதிர்பார்ப்பு (Logistics Outlook for 2019)
• குறிப்பிடத்தக்க அளிப்பு அதிகரிப்பு (Significant supply addition), ஒட்டுமொத்த அளிப்பில் கிரேட் ஏ அளிப்பின் பங்களிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டுக்குள் கிரேட் ஏ மற்றும் உயர்தர அளிப்பு கிட்டத்தட்ட 6 கோடி சதுர அடி (60 million sq. ft) கட்டட பரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட் ஏ பிரிவு பங்களிப்பு சுமார் 2.2 கோடி சதுர அடியாக இருக்கும்.
• இ - காமர்ஸ் நிறுவனங்களிடமிருந்து தேவை (Demand from e-commerce) அதிகரிப்பு, மத்திய அரசின் கொள்கைகளின் பாதிப்புகளால் குறுகிய காலத்தில் குறைய கூடும். அதேநேரத்தில், நீண்ட காலத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சரக்கு போக்குவரத்திற்காக அதிக கட்டட பரப்பு தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
• உள்கட்டமைப்புத் துறையில் மத்திய அரசின் சாதகமான கொள்கை உருவாக்கம் (Favourable policy framework and government focus), நடப்பு 2019 ஆம் ஆண்டில் இந்தத் துறையை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
• வரும் ஆண்டுகளில் நகரங்களுக்கிடையிலான சரக்கு போக்குவரத்து. மளிகை பொருட்கள் பட்டுவாடா, குளிர்சாதன வசதிகள் கொண்ட கிடங்குகள் வசதிகள் (in-city logistics, grocery delivery and cold chain facilities ) அதிகரிப்பு போன்றவற்றால் சரக்கு போக்குவரத்து துறை சிறப்பான வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம்: சி.பி.ஆர்.இ சவுத் ஆசியா பிரைவேட் லிமிடெட் (CBRE South Asia Pvt. Ltd)
ரியல் எஸ்டேட் மார்க்கெட் அவுட்லுக் 2019 – இந்தியா
(Real Estate Market Outlook 2019 - India)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக