மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த 5 விஷயங்களைக் கடைப்பிடித்தால் 50 வயதில் நிம்மதியாக ஓய்வு பெறலாம்!


இந்த 5 விஷயங்களைக் கடைப்பிடித்தால் 50 வயதில் நிம்மதியாக  ஓய்வு பெறலாம்!
 - நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷ்

இன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று, மீதமுள்ள காலத்தில் தங்களுக்குப் பிடித்த சேவை செய்ய அல்லது  நிம்மதியாக கழிக்க விரும்புகிறார்கள்.

இப்படி விரும்புகிறவர்களில் சிலர் மட்டுமே அதற்கான திட்டமிடலை செய்து தங்கள் ஆசையை / இலக்கை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

பலர் சரியான திட்டமிடல் இல்லாமல் ஆசைப் படுவதோடு நின்றுவிடுகிறார்கள்.
50  வயதில் ஓய்வுபெற என்ன செய்ய வேண்டும், எந்த மாதிரி திட்டமிடல் வேண்டும் என. விளக்கமாக பார்ப்போம்.

1. இளமையிலேயே திட்டம்

''
கல்வி பயில   வாழ்நாளின் பெரும் பகுதியை செலவு செய்யும் நாம், அடுத்ததாக வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து சம்பாதிப்பதிலேயே அதிக காலத்தைக் கழித்துவிடுகிறோம். இதற்கிடையில் கிடைக்கும் நேரத்தில் ஓய்வு, குடும்பத்தாருடன் கொண்டாட்டம், குதூகலம். ஆனால், நம் ஓய்வுக்காலத்துக்கு எந்த நிதியும் சேர்த்துவைக்காமல், பின்னர் கஷ்டப்படுகிறோம்.

பணி ஓய்வுக்கு முன்பாகவே ஓய்வுபெற விரும்புபவர்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம்,  சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதே, அதாவது, இளம் வயதிலேயே ஓய்வுக் காலத்துக்கான சேமிப்பைத் தொடங்க வேண்டும். ஏனெனில் ஓய்வுக் காலம் என்பது நீண்டகாலம் என்பதால், அதற்கு தேவையான  முதலீட்டுக்கும் கால அவகாசம் கிடைக்கும். சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல, சிறுக சிறுக முதலீடு செய்யவும் ஏதுவாக இருக்கும்.

உதாரணத்துக்கு, 25 வயதுள்ள ஒருவர் ரூ. 40,000 மாதம்  சம்பாதிப்பதாகக் கொள்வோம்.

ரூ. 20,000 குடும்பச் செலவு என்றால்  மீதி அவரிடம் முதலீட்டுக்காக ரூ. 20,000  இருக்கும்.
இந்த  ரூ.20,000யில் 43% தொகையை, அதாவது 8,500 ரூபாயைத் தனது 50வது வயது வரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டை சம்பளம் உயரும்போது  ஆண்டு தோறும் 10% அதிகரித்து வர வேண்டும் என்பது கட்டாயம்.

ஆண்டுக்கு சராசரியாக சுமார்  14% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி ஃபண்டு ளில் 8,500 ரூபாயை  முதலீடு செய்து வந்தால் அவரின் 58 வயதில் ரூ. 4.31 கோடி கிடைக்கும். இந்தத் தொகை அவர் 9% வருமானம் தரக்கூடிய கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தால்  அப்போது  தேவைப்படும் மாத செலவு  ரூ. 1.37 லட்சத்தை எளிதாக சமாளிக்க முடியும்.

அதே 30-40 வயது வரை உள்ள ஒருவர் அன்று வரை ஓய்வுக் காலத்துக்கு முதலீடு எதுவும் செய்யாதபட்சத்தில்  சம்பாத்தியம் / வருமானம் அதிகமாக இருந்தால் மட்டுமே முன்னதாகவே ஓய்வு பெறுவது குறித்து யோசிக்க வேண்டும். ஏனெனில், அன்றைய நிலையில் அவர் குடும்பச் செலவு போக மீதமிருக்கும் தொகையில் பெரும் பகுதியை ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்தாக வேண்டும்.

2. விடாமல் தொடர்ந்து முதலீடு

கல் வலிமையானதா அல்லது தண்ணீர் வலிமையானதா என்று கேட்டால், எல்லோரின் பதிலும் கல் என்பதாகவே இருக்கும்

. ஆனால், அந்தப் பலம் வாய்ந்த கல்லின் மீதும் நீரானது விழுந்து கொண்டே இருந்தால், அந்தக் கல்லும் உடைந்துவிடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதுபோலத்தான் 50 வயதில் ஓய்வுபெற நினைப்பவர்களும் ஆரம்பித்த முதலீட்டை தொடர்ந்து செய்துகொண்டே வரவேண்டும். இடையில் வரும் நிதி தடையால் ஓய்வுக்கால முதலீட்டை நிறுத்துவது கூடாது.

சம்பாதிப்பவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை சம்பள உயர்வு என்பது இருக்கும். நம்மில் பலர்  ஒவ்வொரு வருடமும் சம்பளம் உயரும் போது செலவை அதிகப்படுத்துகிறோமே தவிர, முதலீட்டை அதிகரிப்பதில் கோட்டை விட்டுவிடுகிறோம்

 ஓய்வுக்கால முதலீட்டைப் பொறுத்தவரை, முதலீட்டில் சீரான ஒழுக்கமாக இருந்தே ஆக வேண்டும். இதற்கு முதலீட்டில் சமச்சீர் முதலீட்டு திட்டத்தை (எஸ்ஐபி) பின்பற்றுவது அவசியம்.

3. சிக்கனம் தேவை!
 
50
வயதில் ஓய்வை இலக்காகக் கொண்டவர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம். சுற்றத்தாரைப் பார்த்து பந்தாவுக்காக வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சிக்கனத்தை பிள்ளைகளின் திருமணம் மற்றும் அவர்களின் கல்வியி லும்கூடக் காட்டுவது அவசியமே. ஏனெனில், பிள்ளைகளின் கல்விக்கும், திருமணத்துக்கும் பிளான் பி என்கிற ஆப்ஷன் இருக்கிறது.

அதாவது, கல்விக் கடன் மற்றும் சிக்கனமான திருமணம் போன்ற திட்டங்கள்.
ஆனால், ஒருவரின் ஓய்வுக்கால தேவைக்கு மாற்றாக வேறெந்த திட்டத்தையும் நம்மால் தீட்டிவிட முடியாது.

ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்காக அதிகமாகச் செலவு செய்துவிட்டு, ஓய்வுக் காலத்தில் அவர்களை நம்பி வாழ்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று நினைப்பதே.

இந்த இடத்தில், 'பெற்றுப் போட்ட பிரம்மாக்களே 1 முதல் 10 வயது வரை பிள்ளைகளுக்கு நீங்கள் வேலைக்காரர்கள், 15 வயது வரை பிள்ளைகள் உங்களுக்கு வேலைக்காரர்கள். 16 முதல் பாகம் பிரிக்கும் வரை தோழர்கள். பிறகு தூரத்து உறவினர்கள்என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகளை நினைத்து பாருங்கள்...



4. மிகச் சரியான முதலீட்டுத் திட்டம்

ஓய்வுக்காலத்துக்காக  தொடர்பு வைப்பு (ஆர்.டி) போட்டி ருக்கேன். வைப்பு திட்டத்தில் (எஃப்டி) பணம் சேர்க்கிறேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது.
இளம்வயதிலேயே ஓய்வுக்கால முதலீட்டை ஆரம்பித்துவிடுவதால், தாராளமாக  ரிஸ்க் எடுக்கலாம். அதனால் ஈக்விட்டி சார்ந்த முதலீட்டு திட்டங்களைத் தேர்வு செய்வது உத்தமம்.
நாம் தேர்வு செய்யும் முதலீட்டுத் திட்டங்கள் சிறப்பாக அமைந்துவிட்டால், இலக்கை அடைவதும் எளிதாகிவிடும்.

5. கடன்  கூடாது!
 
50
வயதில் ஓய்வுபெற நினைப்பதால், பெரும்பாலும் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் ஓய்வுக்குப்பிறகும் கடன் இருந்தால் நிம்மதியான ஓய்வுக்காலத்தை இழந்து தவிக்கும் நிலையே உருவாகும்.
ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அவசரத் தேவை களுக்காகக் கடன் வாங்கிவிட்டேன் என்று சொல்வார்கள். அவசரத் தேவைக்கான நிதி ஒதுக்குதல் என்கிற திட்டமே இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகளைத் தவிர்க்கத்தான் என்பதை மறக்க வேண்டாம்

கட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ள

un.subhash@gmail.com









மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் 

சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Disclaimer
Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully. The NAVs of the schemes may go up or down depending upon the factors and forces affecting the securities market including the fluctuations in the interest rates. The past performance of the mutual funds is not necessarily indicative of future performance of the schemes.
The Mutual Fund is not guaranteeing or assuring any dividend under any of the schemes and the same is subject to the availability and adequacy of distributable surplus. Investors are requested to review the prospectus carefully and obtain expert professional advice with regard to specific legal, tax and financial implications of the investment/participation in the scheme.
While all efforts have been taken to make this web site as authentic as possible, please refer to the print versions, notified Gazette copies of Acts/Rules/Regulations for authentic version or for use before any authority. We will not be responsible for any loss to any person/entity caused by any short-coming, defect or inaccuracy inadvertently or otherwise crept in the Mutual Funds Sahi Hai web site. https://www.mutualfundssahihai.com/en/disclaimer


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...