மொத்தப் பக்கக்காட்சிகள்

ரியல் எஸ்டேட் மார்க்கெட் அவுட்லுக் 2019 – இந்தியா


ரியல் எஸ்டேட் மார்க்கெட் அவுட்லுக் 2019 – இந்தியா Real Estate Market Outlook 2019 - India

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமாக சி.பி.ஆர்.இ சவுத் ஆசியா பிரைவேட் லிமிடெட் (CBRE South Asia Pvt. Ltd)  உள்ளது  அது, அதன் கண்டுபிடிப்புகளை ரியல் எஸ்டேட் மார்க்கெட் அவுட்லுக் 2019 – இந்தியா (Real Estate Market Outlook 2019 - India)  என்கிற பெயரில் இன்று அறிவித்துள்ளது. அதன்படி உலகின் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது.  இதன் பின்புலமாக பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டாளர்கள்  நம்பிக்கை இருக்கிறது. 

சர்வதேச நிதியத்தின் (IMF) புள்ளிவிவரம், 2000-2008 ஆம் ஆண்டுகளில் உலக  வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 7.6 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2018 ஆம் ஆண்டில் 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. சி.பி.ஆர்.இ (CBRE) அறிக்கையில், இந்திய ரியல் எஸ்டேட் துறையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்ஷூமான் மேகஸின்,  சேர்மன்& முதன்மை செயல் அதிகாரி - இந்தியா, தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா(Anshuman Magazine, Chairman & CEO - India, South East Asia, Middle East & Africa) கூறும் போது,  தற்போதைய அரசின் பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் என்பது பங்குச் சந்தை மற்றும்  முதலீட்டு  வரவுக்கு சாதகமாக இருக்கிறது. அந்த வகையில்,  தொழில்துறையில் இந்தியா முதலீட்டுக்கான சிறந்த கவர்ச்சிகரமான நாடாக இருக்கிறது.
நடப்பு  2019 ஆம் ஆண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறை, பல்வேறு காரணிகளால் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மேம்பாடு, எளிதில் தொழில் செய்யும் நாடுகளின் தர குறியீட்டில் முன்னேற்றம், ஜி.எஸ்.டி, ரெரா போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள், தேவை - அளிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் வளர்ச்சி காணும் என  எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் அனைத்து பிரிவுகளிலும் இந்திய ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறோம். அலுவலகம், சில்லறை, குடியிருப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து (office, retail, residential and logistics) பிரிவுகளில் நடப்பு 2019 ஆம் ஆண்டில் 20 கோடி சதுர அடி இடம் புதிதாக பயன்படுத்திக் கொள்ளப்படும்”.

தொழில்நுட்பம் என்கிறபோது செயற்கை நுண்ணறிவு, அக்மென்டட் ரியால்டி, இன்டர்நெட் சார்ந்த விஷயங்கள் ரோபாட்டிக் தானியங்கி  நடைமுறைகள் (Artificial Intelligence -AI, Augmented Reality, Internet of Things -IoT, Robotic Process Automation and Blockchain) போன்றவை இந்திய ரியல் எஸ்டேட் துறையின் பணிகளை புதிய கோணத்திற்கு கொண்டு செல்கிறது. உதாரணமாக, செயற்கை நுண்ணறிவு அதிக உற்பத்தி மற்றும் விரைந்து முடிவு எடுத்தல் சொத்துகளை சிறப்பாக பராமரித்தல், சுலபமாக  திட்டமிடுதல் போன்றவற்றில் உதவிகரமாக உள்ளது.
இதேபோல், இன்டர்நெட் சார்ந்த விஷயங்கள் என்பது சிறப்பான கட்டடங்கள் மற்றும் சிறப்பான நகரங்கள் (smart buildings and smart cities) உருவாக்கம் போன்றவற்றில் விஷயங்களை அளிக்கிறது. மேலும் மதிப்பீட்டை மிகவும் துல்லியமாக மேற்கொள்ள உதவுகிறது


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...