இந்தியாவின் ரியல் எஸ்டேட் கட்டட பரப்பு இருப்பு, 2019 -ல் 20 கோடி சதுர அடி அதிகரித்து 3.7 டிரில்லியன் சதுர அடியாக அதிகரிப்பு :சி.பி.ஆர்.இ
• கடந்த 2018 ஆம் ஆண்டு பெரும்பாலான துறைகளில் கொள்கை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் எளிதாக வணிகம் செய்யும் தரக்குறியீட்டில் இந்தியா முன்னுக்கு வந்துள்ளது .உலக அளவில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா ஒன்றாக உள்ளது.
• கடந்த 2018 ஆம் ஆண்டு 4.7 கோடி சதுர அடி அலுவலக இடங்கள் பயன்பாட்டுக்கு வாங்கப்பட்டுள்ளது. இதில், பெங்களூர், டெல்லி - என். சி.ஆர் மற்றும் ஹைதராபாத் நகரங்கள் முன்னணியில் இருக்கின்றன. இந்த நிலை 2019 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது
• பல்வேறு பிராண்ட் பிரிவுகளில் சில்லறை விற்பனை பெரும்பாலான நகரங்களில் ஆரோக்கியமான வளர்ச்சியை கண்டு வருகிறது .2018 ஆம் ஆண்டில் சுமார் 51 லட்சம் சதுர அடி இடம் முடிந்திருக்கிறது .
இது இ- காமர்ஸ் துறையில் அன்னிய நேரடி
முதலீடு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன நிலையிலும்
நடந்திருக்கிறது. இந்த வளர்ச்சி கடைகளில் நேரடியாக விற்பனை
செய்யப்படும் பிரிவிலும் 2019 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது
இது இ- காமர்ஸ் துறையில் அன்னிய நேரடி
முதலீடு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன நிலையிலும்
நடந்திருக்கிறது. இந்த வளர்ச்சி கடைகளில் நேரடியாக விற்பனை
செய்யப்படும் பிரிவிலும் 2019 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது
• சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலாக்கம், ரியல் எஸ்டேட் துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், சரக்கு போக்குவரத்து துறை வளர்ச்சி கண்டிருக்கிறது . 2018 ஆம் ஆண்டில் 2.4 கோடி சதுர அடி கட்டடப் பரப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது .
• இந்திய ரியல் எஸ்டேட் துறையில் ரெரா மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம்
குடியிருப்புகளுக்கான தேவை மற்றும் அளிப்பு 2018 ஆம் ஆண்டில்
அதிகரித்துள்ளது.
அதிகரித்துள்ளது.
திருமணம் ஆகாமல் இணைந்து வாழ்வது, மாணவர்கள், மூத்த
குடிமக்களுக்கான குடியிருப்பு தேவை, நடப்பு 2019 ஆம் ஆண்டில்
மிகவும் அதிகரித்துள்ளது
• கடந்த 2018 ஆம் ஆண்டில் சுமார் 470 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது இந்த முதலீடு, அலுவலகம், நிலம் மேம்படுத்தப்பட்ட நிலம் மற்றும் சில்லறை துறையில் செய்யப்பட்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலத்துக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. மொத்த முதலீட்டில் இதன் பங்களிப்பு 34 சதவீதமாக உள்ளது.
ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டுகள் உண்மையாகி இருக்கிறது. இது சிறு மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக