என் நகரம் எனக்கு
meformycity
கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஒரு முன்முயற்சி
சென்னை, 9 பிப்ரவரி : கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் (Canara HSBC Oriental Bank of Commerce Life Insurance) நிறுவனம் “என் நகரம் எனக்கு” (meformycity) என்கிற சுத்தமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வை, முன்முயற்சியை சென்னை, பெங்களூரு மற்றும் கொச்சியில் 2019, பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது.
இந்த முன்முயற்சி, நமது நகரங்களை சுத்தமாகவும் அழகாகவும் சுவர் ஓவியங்கள் (graffiti art) மூலம் வைத்துக் கொள்ள உறுதி அளிக்கிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்கெட்சிட்டி (Phoenix Marketcity)-ல் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பங்கேற்று இதனை சிறப்பிக்கிறார்கள். இதையொட்டி தைக்குடம் பிரிட்ஜ் (Thaikkudam Bridge) குழுவினரின் நேரடி கலை நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், கனரா பேங்க், ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் அதிகாரிகள் பங்கேற்று இந்த முன் முயற்சியின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் பற்றி விளக்குகிறார்கள். டெல்லி, குருக்ராம் (Gurugram), மும்பை மற்றும் மொஹாலி (பஞ்சாப்) நகரங்களின் பரபரப்பான பகுதிகளில் சுவர் ஓவியங்கள் இடம் பெறப்போகின்றன.
கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், எளிய சித்திரங்கள் மூலம் நமது நகரங்களை சுத்தமாக, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களிலும் சுவர் ஓவியங்களை கொண்டு வர இருக்கிறது.
திரு. அனுஜ் மாத்தூர், கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (Mr. Anuj Mathur, Managing Director & Chief Executive Officer, Canara HSBC Oriental Bank of Commerce Life Insurance) கூறும் போது, “சமுதாயத்திற்காக எங்களின் இந்தச் சிறிய செயலுக்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களின் பார்வையாளர்களின் தனித்துவமான ஆதரவால் சந்தோஷமாக இருக்கிறோம். இது எங்களை மேலும் பொறுப்பானவர்களாக மாற்றி இருப்பதோசு, சிறப்பான முறையில் தொடர்ந்து பார்வையாளர்களுடன் இணைக்க உதவுகிறது. நாங்கள் ஒரு நிறுவனம் என்கிற முறையில் நிறுவனத்தில் உள்ள அனைவரையும் இதில் பங்கேற்கவும் நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க அவர்களால் முடிந்த சிறிய செயலை செய்யவும் சொல்கிறோம். பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல், சுகாதாரம் குறித்த கல்வியை அளிப்பதன் முக்கியத்துவதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மேலும் தன்னார்வத்துடன் ஆண்டு முழுக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுபட பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கிறோம்.”
திருமதி. டிரான்னம் ஹஸிப், தலைமை விநியோக அதிகாரி, கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் (Ms. Tarannum Hasib, Chief Distribution Officer, Canara HSBC Oriental Bank of Commerce Life Insurance) கூறும் போது, “நமது நகரங்களை சுத்தமாகவும் அழகாவும் வைத்துக் கொள்ள அனைவரும் பெருமளவில் ஒன்று சேர வேண்டும் என உறுதி பூண்டுள்ளோம். இதற்கான முன்முயற்சியை சென்னையில் எடுப்பதில் உண்மையிலேயே நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும், இந்திய அளவிலான இதை சென்னை, பெங்களூரு மற்றும் கொச்சி நகர சுவர்களில் கொண்டாடுகிறோம்”.
இந்த நிகழ்வு குறித்து தைக்குடம் பிரிட்ஜ் (Thaikkudam Bridge) கூறும் போது, “சுத்தமான மற்றும் அழகிய நகரங்களை உருவாக்குகிற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு சமூகம் மற்றும் இந்த நாட்டின் குடிமக்கள் என்கிற வகையில் நம் அனைவருக்கும் சுத்தமான மற்றும் அழகிய சுற்றுச்சூழலை உருவாக்கும் பொறுப்பு இருக்கிறது”
இது வரைக்கும் கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், 10,000 சதுர அடிக்கு மேலாக ஏழு இந்திய நகரங்களில் சுவர் ஓவியங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிறுவனம், வாழ்வதற்கு ஏற்ற இடமாக நமது சுற்றுச்சூழலை சுத்தமானதாக மாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம், இந்த விழிப்புணர்வை குரல் வழியாக டிஜிட்டல் முறையில் கொண்டு செல்ல ரேடியோ மிர்ச்சி (Radio Mirchi) உடன் கூட்டு சேர்ந்திருக்கிறது.
கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பற்றி
(www.canarahsbclife.in)
கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ( Canara HSBC Oriental Bank of Commerce Life Insurance Company Limited), கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது இரண்டு இந்திய பெரிய பொதுத்துறை வங்கிகளான கனரா பேங்க் (பங்கு மூலதனம் 51%), ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (23%) மற்றும் உலகின் மிகப் பெரிய வங்கி மற்றும் நிதிச் சேவைகள் குழுமமான ஹெச்.எஸ்.பி.சி-ன் ஹெச்.எஸ்.பி.சி இன்ஷூரன்ஸ் (ஆசிய பசிபிக்) {HSBC Insurance (Asia Pacific)} ஹோல்டிங் லிமிடெட் (26%) உடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிறுவனம், சமூக பாதுகாப்பு மற்றும் ஆயுள் பாதுகாப்பு அளிக்கும் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் இருக்கிறது.
கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
Mr. Ishan Uppal
+91-9899759975