மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐசிஐசிஐ பேங்க் புதுமையான டேர்ம் டெபாசிட், எஃப்டி எக்ஸ்ட்ரா


ஐசிஐசிஐ பேங்க், 
புதுமையான டேர்ம் டெபாசிட், 
எஃப்டி எக்ஸ்ட்ரா அறிமுகம்

·        எஃப்.டிகள் / ஆர்.டிக்களுடன் கூடுதல் லாபம்
·        ஃபிக்ஸட் டெபாசிட் உடன் இலவச ஆயுள் காப்பீட்டை வங்கி துறையில் முதல் வங்கி ஆக அறிவித்துள்ளது; ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட்  எஸ்,.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதி
                                                             
சென்னை:ஐசிஐசிஐ பேங்க்(ICICI Bank) புதுமையான குறித்த கால டேர்ம் டெபாசிட் - எஃப்டி எக்ஸ்ட்ரா (‘FD Xtra’) -ஐ அறிமுகம் செய்கிறது. இது ஃபிக்ஸட் டெபாசிட்கள் (Fixed deposits - FDs) மற்றும் தொடர் வைப்பு திட்டங்கள் (Recurring deposits - RDs) மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதுமையான பல சலுகைகளை அளிக்கிறது.

இந்தப் புதிய குறித்த கால டெபாசிட்கள் (term-deposits), வங்கி வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை நிறைவேற்றும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களின் டேர்ம் காப்பீடு, வீட்டுக் கடன் / கார் கடன் முன் பணம், ஓய்வு கால திட்டமிடல், குழந்தைகளின் கல்வித் தேவை மற்றும் சுற்றுலா ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புது வகையான டெபாசிட்கள் இன்னும் சில தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

பிரணவ் மிஸ்ரா, தலைவர் - சில்லறை பொறுப்புகள் குழு (Pranav Mishra, Head – Retail Liabilities Group) கூறும் போது, ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் தொடர் வைப்பு திட்டங்கள் நீண்ட காலமாக பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு அடிப்படை முதலீடாக இருக்கிறது. இது அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனை தாண்டியதாக இருக்கிறது.. நிதிச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட வட்டியில் முதலீடு செய்யும் விதமாக ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் தொடர் வைப்பு திட்டங்கள்அறிமுகம் செய்யப்படுகிறது. இவை கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், எளிதில் பணமாக்குதல், மூலதனத்துக்கு பாதுகாப்பு மற்றும் நிலையான வட்டி வருமானத்தை அளிப்பதாக இருக்கும். இந்தப் பிரிவில் எங்கள் வாடிக்கையாளர்கள் கூடுதல் சலுகை பெறும் விதமாக எஃப்டி எக்ஸ்ட்ரா (‘FD Xtra’) என்ற திட்டத்தை ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் தொடர் வைப்பு திட்டங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். இந்த டெபாசிட்கள், வாடிக்கையாளர்களின் பல்வேறு வாழ்க்கை இலக்குகள் குறிப்பாக டேர்ம் பிளான் மூலம் ஆயுள் காப்பீடு, பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐபி. முறையில் முதலீடு அல்லது ஓய்வு காலத்துக்கு திட்டமிடல், பிள்ளைகளின் உயர் கல்பி செலவு, சுற்றுலா பயணம் உள்ளிட்ட இதர தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கும்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் சேமிப்பு திட்டங்களுக்கு மூலத்தில்  வரி பிடிக்கும் (TDS- tax deducted at source)) வரம்பு ரூ. 10,000-லிருந்து ரூ. 40,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு வங்கி வாடிக்கையாளர்களை ஃபிக்ஸட் டெபாசிட்களில் அதிகமாக முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. அந்த வகையில் எங்களின் எஃப்டி எக்ஸ்ட்ரா திட்டத்தில் கூடுதல் ஊக்க வரிச் சலுகையை பயன்படுத்தி எஃப்டி மற்றும் ஆர்.டிகளில் அதிகம் முதலீடு செய்வார்கள் என நம்புகிறோம்.

எஃப்டி எக்ஸ்ட்ரா திட்டங்கள், பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளன, முதல் திட்டம் எஃப்டி லைஃப் (FD Life). 18-50 வயதான வாடிக்கையாளர்களுக்கு எஃப்டி மூலம் வளர்ச்சி மற்றும் இலவச டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் என்கிற இரட்டை பலனை இந்தத் திட்டம் அளிக்கிறது. இந்திய வங்கித் துறையிலே இப்படி இரட்டை பயன் தரும் வைப்பு நிதி இதுதான். மேலும் பிரத்யேக பலனாக இலவச டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ்-ஐ ஐசிஐடை புரூடென்சியல் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி (ICICI Prudential Life Insurance Company) மூலம் அளிக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 3 லட்சம் எஃப்டி போட்டால், ரூ. 3 லட்சத்துக்கு டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கப்படும். இது தவிர ஏற்கெனவே சொன்னது போல் நல்ல வட்டி வருமானம் மற்றும் ஓராண்டுக்கு இலவச இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பினால் அடுத்த ஆண்டும் இந்த இன்ஷூரன்ஸ் சலுகையை நீடித்துக் கொள்ளலாம்.

வங்கி துறைகளிலேயே முதல் முதலான அடுத்த திட்டம், எஃப்டி இன்வெஸ்ட் (FD Invest) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஃப்டி மூலம் பெறும் வட்டி வருமானத்தை ஐசிஐசிஐ புரூடென்சியல் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் (ICICI Prudential Asset Management Company) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plans -SIPs) மூலம் முதலீடு செய்ய முடியும். வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்த அல்லது தேவையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.  குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ரூ. 2 லட்சம் எஃப்டி போட முடியும். இந்த எஃப்டி இன்வெஸ்ட்-ல் மூலதனம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், கூடவே அதன் மூலமான வட்டி வருமானத்தை, வாடிக்கையாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள்.


மற்றும் ஒரு வகை எஃப்டி எக்ஸ்ட்ரா, எப்ஃடி இன்கம் (FD Income) ஆகும். இது, எஃப்டி மற்றும் ஆர்டி வடிவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இவற்றின் முதிர்வு தொகை மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கை இலக்குகளை சுலபமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  வாடிக்கையாளர்கள், மொத்த முதிர்வு தொகையை மாதம் தோறும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது. அல்லது முதிர்வு தொகையில் 30%-ஐ மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம். மீதி 70 சதவிகிதத்தை அவர்கள் விரும்பும் காலம் வரை மாதம் தோறும் பெற்றுக் கொள்ளலாம்.. அனைத்து குறித்த கால  டெபாசிடிகளுக்கும் அதிகபட்ச காலம் 10 ஆண்டுகள் ஆகும். இதில், முதலீட்டு காலம் மற்றும் முதலீட்டை திரும்ப பெற்றுக் கொள்ளும் காலம் இரண்டும் அடங்கும்.

ஐசிஐசிஐ பேங்க், அதன் எஃப்டி வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு கட்டணம் எதுவும் இல்லாமல்  உடனடி பிளாட்டினம் கிரெடிட் கார்ட் (platinum credit card) வழங்குகிறது. இப்படி வழங்குவது அந்த வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும்.


எஃப்டி எக்ஸ்ட்ரா திட்டங்களில் முதலீடு செய்ய வாடிக்கையளர்கள் அருகில் உள்ள ஐசிஐசிஐ பேங்க் கிளைகளில் விண்ணப்பிக்கவும். கூடுதலாக எஃப்டி இன்கம் திடத்தில், இணைய தள வங்கி மூலம் சேர முடியும்.


எஃப்டி வட்டி பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள  www.icicibank.com/interest-rates.page பார்வையிடவும்.

புதிய செய்திகளுக்கு பின் தொடரவும் www.twitter.com/ICICIBank

பத்திரிகை தகவல்களுக்கு எழுதவும் corporate.communications@icicibank.com

9 பிப்., 2019
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...