மூன்று ஆண்டு பிரதான கடன் சார்ந்த முதலீட்டுக் கலவை யூ.டி.ஐ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட்
யூ.டி.ஐ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட்
யூடிஐ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் (UTI Corporate Bond Fund), என்பது ‘முதலீடு செய் மற்றும் தக்கவை’ (Buy and Hold) என்கிற முதலீட்டு பாணியில் (Investment Style) முதலீட்டு மீதான வருமானத்தை பெருக்க முயற்சி செய்து வருகிறது.
இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி, உயர் தரக்குறியீடு கொண்ட ( குறைந்தபட்சம் 80% தொகை AAA & AA+ தரக்குறியீடு பெற்ற ஆவணங்கள்) 3 முதல் 4 ஆண்டுகள் முதிர்வு கொண்ட நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது..
யூ.டி.ஐ ஏ.எம்.சி-யின் நிதி மேலாளர் திரு. சுதிர் அக்ரவால் (Mr.Sudhir Agrawal, Fund Manager, UTI AMC) கூறும் போது, “ இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் அண்மை கால நிதி மற்றும் கடன் கொள்கையில் நடுநிலையாக இருந்து ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% (25 அடிப்படை புள்ளிகள்) குறைந்துள்ளது. அதேநேரத்தில், சந்தை பங்களிப்பாளர்களில் பெரும்பாலானோர் ஆர்.பி.ஐயின் நிலைப்பாட்டில் மாற்றத்தை எதிர்பார்த்திருந்தாலும், அவர்கள் வட்டி விகிதம் குறைக்கப்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. பணவீக்க விகித எதிர்பார்ப்பில் மாற்றம் செய்யப்பட்டு, சுமார் 0.6-0.8% (60- 80 அடிப்படை புள்ளிகள்) குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் வட்டி விகிதத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியம் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. அதேநேரத்தில், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக அரசு கடன் பத்திரங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது மூலம், வருமானம் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறை உயர்வு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடன் பத்திரங்களின் அளிப்பு அதிகரிப்பு போன்றவற்றால் வட்டி வருமானம் குறையக் கூடும். இந்த நிலையில் யூ.டி.ஐ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் போன்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டுக்கு சிறந்த வாய்ப்பாகவும் அதிக வருமானம் ஈட்டி தருவதாகவும் இருக்கும்.” என்றார்
மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்கு பிரதான கடன் சார்ந்த முதலீட்டுக் கலவையை (debt portfolio) உருவாக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் யூ.டி.ஐ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டை தங்களின் முதலீட்டுக்கு கவனிக்கலாம்.