இடைக்கால பட்ஜெட் 2019-20
6 முக்கிய அம்சங்கள்
மத்திய இடைக்கால பட்ஜெட் 2019-20-ஐ பொறுப்பு நிதி அமைச்சர் திரு. பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1, 2019 அன்று தான் தாக்கல் செய்தார்.
1. ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை..!
ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ள தனிநபர்களுக்கு முழுமையாக வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர்கள் எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. பிராவிடெண்ட் ஃபண்ட் ( பி.எஃப்), ஆயுள் காப்பீடு பிரீமியம் போன்றவற்றில் முதலீடு செய்திருந்தால் ரூ. 6.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. சுமார் 3 கோடி நடுத்தர வருமான பிரிவினர் பயன் அடைவார்கள்.
இந்தச் சலுகை வருமான வரி பிரிவு 87ஏ-ன் கீழ் வழங்கப்படும். ஏற்கெனவே, இந்தப் பிரிவின் கீழ் ரூ. 3.5 லட்சம் வரை வருமான வரிக்கு உட்பட்ட வர்களுக்கு அதிகபட்சம் ரூ.2,500 வரி தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. 2019-20-ல் ரூ. 5 லட்சம் வரை வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,500 வரை வரி தள்ளுபடி வழங்கப்படும்.
அடிப்படை வருமான வரி வரம்பு மற்றும் வரி விகிதம் (5%, 20%, 30%) அடுத்த நிதி ஆண்டு வரைக்கும் தொடரும். காரணம், இடைக்கால பட்ஜெட்டில் இவற்றை ) மாற்ற முடியாது. அடிப்படை வருமான வரம்பில் மாற்றம் செய்தால்தான் அனைத்து வரிதாரர்களுக்கும் வரிச் சலுகை கிடைக்கும். அந்த வகையில், வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்தை தாண்டுபவர்களுக்கு இந்தச் சலுகை கிடையாது.
2. நிலைக் கழிவு ரூ.40,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு
சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலைக் கழிவு ரூ.40,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு.
3.ஃபிக்ஸட் டெபாசிட் டிடிஎஸ் வரம்பு ரூ.10,000-லிருந்து ரூ. 40,000 ஆக உயர்வு
வங்கி,தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கி டெபாசிட் மூலம் பெறப்படும் டெபாசிட் வட்டிக்கு இப்போது ரூ. 10,000 வரை டிடிஎஸ் பிடிப்பதில்லை. இது ரூ. 40,000 ஆக உயர்த்தப்படுகிறது.
4. வீட்டு வாடகை டிடிஎஸ் வரம்பு ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2.4 லட்சமாக உயர்வு
வீட்டு வாடகையில் பிடிக்கப்படும் டிடிஎஸ்-க்கான வரம்பு ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
5. இரண்டாவது வீட்டுக்கு சலுகை
ஒருவருக்கு இரண்டு வீடுகள் இருந்து ஒரு வீட்டில் அவர் குடியிருப்பது போல் கணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இரண்டாவது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும் அல்லது விடாவிட்டாலும் அதனை வாடகைக்கு விட்டதாக கணக்கில் கொண்டு வரி கட்ட வேண்டும் என தற்போது உள்ளது.
பட்ஜெட் 2019-20-ல் இரண்டாவது வீடும் அதன் சொந்தக்காரர் அவரின் சுய பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்கிறார் என கொள்ளப்படும் என மாற்றப்பட்டிருக்கிறது.
6. சொத்து நீண்ட கால மூலதன ஆதாய வரியில் சலுகை..!
சொத்தை / வீட்டை விற்றது மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரியை தவிர்க்க இப்போது இன்னொரு வீடு வாங்கிக் கொள்ளலாம் என இருக்கிறது.
இடைக்கால பட்ஜெட் 2019-20-ல் ரூ. 2 கோடி வரையிலான மூலதன ஆதாயம் மூலம் வாழ்நாளுக்குள் ஒரு முறை, ஒருவர் இரண்டு வீடுகள் வாங்கிக் கொள்ளலாம்.

Thanks to ET |

Interim Budget 2019-2020 Overview from Economic Times |