மொத்தப் பக்கக்காட்சிகள்

லஷ்மி விலாஸ் பேங்க் 2018, டிசம்பர் காலாண்டு வணிகம் ரூ.54,910 கோடி


லஷ்மி விலாஸ் பேங்க் - 2018,  டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள்
முக்கிய நிதி நிலை முடிவுகள்:
      வங்கியின் மொத்த வணிகம் 2018, டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 54,910 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 55,851 கோடியாக இருந்தது. இது 1.68% குறைவு.
     வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 25,231 கோடியிலிருந்து  ரூ. 24,123 கோடியாக உள்ளது. இது  4.39%. குறைவு.
     மொத்த டெபாசிட் 2017, டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 30,620 கோடியாக இருந்தது. இது 2018, டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 30,787 கோடியாக உயர்துள்ளது. இது 0.55% உயர்வு
     காசா (CASA) ரூ. 6,482 கோடியிலிருந்து ரூ. 7,036 கோடியாக உயர்ந்துள்ளதுஇது, 8.56% அதிகரிப்பாகும்.
     மொத்த டெபாசிட்டில் காசாவின் பங்களிப்பு 21.17%லிருந்து 22.85% ஆக அதிகரித்துள்ளது
     2018-19 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிகர வட்டி வரம்பு (Net Interest Margin - NIM) 1.65% ஆக உள்ளது. இது  இரண்டாம் காலாண்டில்  1.74%  ஆக இருந்தது.
     வங்கியின் செயல்பாட்டு இழப்பு (Operating loss),  2018 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ..25.10 கோடியாக உள்ளது. 2018 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் (Operating Profit) ரூ.. 27.57 கோடியாக  இருந்தது. 2017 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.. 46.12 கோடியாக இருந்தது.
     வங்கியின் செலவு மற்றும் வருமானத்துக்கான விகிதம் ( Cost to Income ratio) 112.56% ஆக உள்ளது. இது, 2018-19 -ன்  இரண்டாம் காலாண்டில் 87.59% ஆக இருந்தது.
     2018 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில், வங்கியின் நிகர இழப்பு (Net Loss) ரூ.. 373.49 கோடியாக உள்ளது. 2018 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் வங்கியின் நிகர இழப்பு ரூ.. 132.31 கோடியாக உள்ளது.
     வங்கி, தொடர்ந்து அதன் வணிகத்தை பரவலாக்கி வருகிறது. 2018 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில், வங்கியின் பெரு நிறுவன வணிகம் 33%  ஆக உள்ளது. இது 2017 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில், 53% ஆக இருந்தது.

மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy):
வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio-CAR), பேசல் III விதிமுறைகளின்படி (Basel III guidelines) 2018  டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி 7.57ஆக உள்ளது. இது 2018 செப்டம்பர்  30 ஆம் தேதி நிலவரப்படி 9.67ஆக இருந்தது.

 வாராக் கடன் (NPA)
மொத்த வாராக் கடன் (Gross NPA), 2018 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, 13.95% ஆக உள்ளது. இது, 2017 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி 5.66ஆக இருந்தது. 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 12.31% ஆக இருந்தது.

நிகர வாராக் கடன் (Net NPA) 7.64% ஆக உள்ளதுமுந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 4.27% ஆக இருந்தது. 2018 செப்டம்பர் 30 இது 6.66% ஆக இருந்தது.  வாராக் கடன் ஒதுக்கீடு கவரேஜ் விகிதம்  55.93 %  (2017 டிசம்பர் 31-ல் 46.75%/ 2018 செப்டம்பர் 30-ல் 55.39%) ஆக உள்ளது.

புதிய முயற்சிகள் (New Inititatives)                                                       

  1. காசா - புதிய முயற்சிகள் 
o    லஷ்மி டைனமிக் நடப்பு கணக்குகளுக்கு (Lakshmi Dynamic Current Accounts)  நல்ல ஆதரவு இருக்கிறது. காசாவில் இதன் பங்களிப்பு 2018 டிசம்பரில் ரூ. 147 கோடியாக உள்ளது.
o    இது சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்ப குறுகிய காலத்தில் மேம்படுத்தப்படும்.  
         ஒரே ஒரு டாலர் (Just a dollar) கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 அமெரிக்க டாலரை கூட செலாவணியாக மாற்றிக் கொள்ளப்படும். இது நடுத்தர அளவு எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.                  
  1. வங்கிக்கு புதியவர்கள் நடப்பு கணக்கு (New to Bank Current Account) மூலம் சராசரி இருப்பு மூன்றாம் காலாண்டில் ரூ. 66,751 ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 50,709 ஆக இருந்தது. இது 32% வளர்ச்சியாகும். இதேபோல், வங்கிக்கு புதியவர்கள் சேமிப்பு கணக்கு (New to Bank Savings Account) மூலம் சராசரி இருப்பு மூன்றாம் காலாண்டில் ரூ. 27,247 ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 15,045 ஆக இருந்தது. இது 81% வளர்ச்சியாகும்.                                                             
  2. நுகர்வோர் வங்கி செயல்பாடு (Consumer Bank Operation – CBO)  மூலம் வங்கியின் பின்னூட்ட நடைமுறைகள் (Back end process) மையமாக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் (data repository) மற்றும் எம்.எஸ்.எம்.இ வணிக செயல்பாடு கண்காணிப்பு ஆகியவை கிட்டத்தட்ட  மையமாக்கப்பட்டுள்ளது இது, வங்கியின் செயல்பாடுகளை தெளிவாக்கி இருப்பதோடு, துணிச்சலாக இடர்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.                         
  3.  இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகத்தின் (NPCI) புள்ளிவிவரப்படி, வங்கியின் அனைத்து சேமிப்பு கணக்குகளின் பரிமாற்றத்தில் பற்று அட்டைகளின் (Debit card) பங்களிப்பு 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இது தென்னிந்திய வங்கிகளில் மிகப் பெரியதாகும்.                                                             
  4. தொழில்நுட்பத்தில் தொடர்ந்து கவனம்: -  அடுத்த காலாண்டு இறுதிக்குள் புதிய தலைமுறை ஒருங்கிணைந்த வங்கிச் சேவை மற்றும் லாபத்தை கண்காணிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்படும். இதன் மூலம் கே.ஆர்.ஏ (KRA) கண்காணிப்பு மற்றும் புள்ளி விவர மேலாண்மை வங்கிக்கு மிக துல்லியமாக இருக்கும்.                         
  5.  இதர புதிய முயற்சிகள்
        புதிய கிளைகள் திறப்பு: 7 கிளைகள்,  6 கிளைகள் தமிழ்நாட்டில், ஒன்று ஆந்திரப்பிரதேசத்தில்
        சம்பளக்கணக்கு வாடிக்கையாளர்களுக்கான சேவை முற்றிலும் சீரமைக்கப்பட்டிருப்பதோடு, வகை சம்பளக் கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
        ஒட்டு மொத்த உத்தியாக கார்ப்பரேட் நிறுவன சம்பள கணக்குகளுக்கு இணை பிராண்ட் சலுகைகள் (co-branded offerings) அளிக்கப்படும்.
  1. டிசம்பர் காலாண்டில் வங்கி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFCs,), ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்கு வழங்கி கடன் அளவு ரூ. 800 கோடி குறைக்கப்படுள்ளது. என்.பி.எஃப்.சி துறைக்கு ரூ. 2,136 கோடி கடன் வழங்கப்பட்டிருக்க்கிறது. இது மொத்த கடனில் 8.16%  ஆக உள்ளது. இந்தத் துறையில் வங்கிக்கு வாராக் கடன் எதுவும் இல்லை.                                                                                       
  2. . வங்கி, ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ. 3,742.00 கோடி கடன் வழங்கி உள்ளது. இது மொத்த கடனில் 14.3ஆக உள்ளது. இதில், ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ. 1,832 கோடி.  இதில் சிக்கலான (Stress) கடன் ரூ.  245 கோடி. சொத்து அடமானக் கடன் (LAP) ரூ. 959 கோடி. .                                                                                                 
  3. எல்.வி.பி,  TReDS (Trade Receivables Discounting System)  அமைப்பு மூலம் முதல் பரிமாற்றத்தை ஆரம்பித்திருக்கிறது. இது எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு சுலபமாக கடன் வழங்க உதவிகரமாக உள்ளது..                                                                                                              
  4. வங்கியின் கருவூலம் (treasury)  ரூபாய் சார்ந்த வட்டி விகித வர்த்தக வர்த்தகத்தில் (Rupee based Interest Rate Swaps -OIS), ஈடுபடுகிறது. இது வங்கியின் வணிகத்தை தவிர்த்து கூடுதல் வணிகமாக இருக்கிறது.

வங்கி கிளைகள் (Network)

2018  டிசம்பர் 31 நிலவரப்படி வங்கிக்கு  18 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 569 கிளைகள், 5  விரிவாக்க மையங்கள், 1046 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இந்த வங்கி பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது. நீண்ட காலத்தில் நிலையான மற்றும் உயர் தரமான வணிகத்தை மேற்கொள்ள இந்த வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. வணிகத்தில் தொடர்ந்து தமிழகம் முன்னணியில் இருக்கிறது. வங்கிகள் மற்றும் வணிக விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில்..

மாநிலம்
TN & Pud
Kar
AP & Tel
MH &Guj
NCR
வணிக பங்களிப்பு
45.11%
11.61%
12.66%
17.80%
3.77%
கிளைகள் பங்களிப்பு
53%
11%
21%
7%
2%

லஷ்மி விலாஸ் பேங்க்-ன் இயக்குநர் குழு, 2018 டிசம்பர் 31 ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளுக்கு சென்னையில் 2019 பிப்ரவரி 4 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது.
    
(P. Mukherjee)
Managing Director & CEO

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....