மொத்தப் பக்கக்காட்சிகள்

யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி யாத்ரா - 10,000 நிதி ஆலோசகர்கள் இலக்கு

யூ.டி.. மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் -

 யூ.டி..  எம்.எஃப்   ஈக்விட்டி யாத்ரா

நாடு முழுக்க 51 நகரங்கள் மற்றும் 10,000-க்கும் மேலான தனிப்பட்ட நிதி ஆலோசகர்கள் இலக்கு

 

யூ.டி.. மியூச்சுவல் ஃபண்ட் (UTI Mutual Fund)  நிறுவனம் யூ.டி.. எம்.எஃப்   ஈக்விட்டி யாத்ரா’ (“UTI MF Equity Yatra”) என்கிற பிரத்யேக முன்முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.  இதன் நோக்கம், இந்தியா முழுவதும் 51  நகரங்களில், 10,000-க்கும்  அதிகமான  நிதி முகவர்களை (financial intermediaries) சென்று சேர்வதாகும்.


யூ.டி.. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை (Tier II and Tier III cities) இலக்காக வைத்து பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணிக்கிறது. இந்த முகவர்கள் (intermediaries), இந்தியா முழுக்க சுமார் 1 கோடி முதலீட்டாளர்களை கொண்டிருக்கிறார்கள். 

மொத்தம் பத்து நாள்கள், இந்த யூ.டி.. எம்.எஃப் ஈக்விட்டி யாத்ரா  நடக்கிறது. இந்தப் பயணம், பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கி உள்ளது. யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்டை சேர்ந்த 15 பங்குச் சந்தை சார்ந்த நிபுணர்கள் (15 Equity Experts), நாடு முழுக்க பயணம் செய்து நிதி முகவர்களை  சந்திக்கிறார்கள். அப்போது, யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டுதத்துவம், ஆராய்ச்சி செயல்முறை, முதலீட்டு கலவை உருவாக்கம், பங்குச் சந்தையின் எதிர்காலம் (investment philosophy, research process, portfolio construction, market outlook)  மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் தற்போதைய போக்கு பற்றி விளக்கி சொல்கிறார்கள். குறிப்பாக, நீண்ட காலத்தில் பங்குகள் சார்ந்த சொத்து எப்படி செல்வம் உருவாக்குவதில் பங்கு கொள்கிறது என்கிற நம்பிக்கையை ஊட்ட இருக்கிறார்கள்.

யூ.டி.. எம்.எஃப் -  ஈக்விட்டி யாத்ரா என்பது ‘நிதி மேலாளர்கள் என்ன செய்கிறார்கள்? (What the Fund Managers do), செல்வம் உருவாக்குவதில் (wealth creation) அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை விளக்கி சொல்வதாகவும் நிதி மேலாளர்களின் முதலீட்டு செயல்முறை எப்படி வெளிப்படை தன்மையுடன் இருக்கிறது என்பதை விளக்கி சொல்வதாகவும் இருக்கிறது. இந்தப் பங்குச் சந்தை சார்ந்த பயணம், நிதி முகவர்களுடனான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் உறவை மேலும் மேம்படுத்துவதாக இருக்கிறது. முக்கியமாக, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்க காலத்தில் முதலீட்டாளர்களுக்கு சரியாக வழிகாட்டுவது எப்படி என்பதை விளக்கி சொல்வதாக இருக்கிறது. 


இது குறித்து யூ.சி.ஐ ஏ.எம்.சி-ன் நிதி மேலாளர் திரு. லலித் நம்பியார் (Mr. Lalit Nambiar, Fund Manager, UTI AMC) கூறும் போது, நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களின் பணத்தை நிலையாக நிர்வகிக்க தெளிவான ஆவணங்கள் மற்றும் முறையான முதலீட்டு செயல்முறை முக்கியமாகும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்கிற முதலீட்டு முறை மூலம் முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீடுகளை மேற்கொண்டு வருவதை பார்க்கும் போது இன்றும் இது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. யூ.டி.ஐ. எம்.எஃப். ஈக்விட்டி யாத்ராவின் போது, எங்களின் பிரத்யேக செயல்முறையை முன்னிலைபடுத்துவோம் மற்றும் முதலீட்டாளர் அனுபவத்தை பாதிக்கும் நடத்தை இடைவெளிகளை குறைக்க வலியுறுத்துவோம்.

“150 நிதி மையங்கள் (Financial Centres), 50,000-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட நிதி ஆலோசகர்கள் (Independent Financial Advisors - IFAs), 302 வணிக மேம்பாட்டு கூட்டாளிகள் (Business Development Associates) மற்றும் 1 கோடிக்கும் மேலான முதலீட்டாளர்களுடன் யூ.டி.ஐ. இயங்கி வருகிறது. பங்குச் சந்தையின் அனைத்து சுழற்சிகளிலும் முதலீட்டாளர்களின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது..” என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

யூ.டி.. மியூச்சுவல் ஃபண்ட் பற்றி..!

யூ.டி.. மியூச்சுவல் ஃபண்ட் (UTI Mutual Fund) செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனம் ஆகும். இதன் ஸ்பான்சர்களாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை உள்ளன.

யூ.டி.. மியூச்சுவல் ஃபண்ட், 1 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன், 188 முதலீட்டு திட்டங்களுடன் 2019, ஜனவரி 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

பதிவு அலுவலகம்: யூ.டி.ஐடவர், ஜிஎன்பிளாக், பாந்த்ரா- குர்லா காம்ப்ளக்ஸ், பாந்த்ரா (கிழக்கு), மும்பை - 400 051. தொலைபேசி: 022-66786666.

கூடுதல் தகவல்களுக்கு குறிப்பாக, கூடுதல் தகவல் அறிக்கை(Statement of Additional Information), திட்டதகவல் ஆவணம்(Scheme Information Document) மற்றும்விண்ணப்ப படிவத்துடன்கூடிய முக்கிய தகவல்குறிப்பாணை (Key Information Memorandum cum Application Form) போன்றவற்றை பெற, அருகிலுள்ள யூ.டி.ஐ நிதி மையம் (UTI Financial Centre) அல்லது ஆம்ஃபி / என்.ஐ.எஸ்.எம் (AMFI/NISM) சான்றிதழ் பெற்ற யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் தனிப்பட்ட நிதி ஆலோசகரை (UTI Mutual Fund independent Financial Advisor - IFA) அணுகவும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பங்குச் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது, முதலீடு செய்யும் முன், திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.

(Mutual Fund Investments are subject to market risks, read all scheme related documents carefully)

23 பிப்., 2019

ENGLISH
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...