மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்ஸார் குளோபல், அதன் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை அடைக்கிறது.!



உடனடி செய்தி வெளியீடு Immediate Release

எஸ்ஸார் குளோபல், அதன் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை அடைக்கிறது.!
·         எஸ்ஸார் குளோபல், அதன் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களின் கடைசி தவணை ரூ.12,000-ஐ திரும்ப செலுத்துகிறது.
·         ரூ.12,000-ஐ திரும்ப செலுத்துகிறது மற்றும் 2017 – ம் ஆண்டில் ரூ. 30,000 கோடியை(US$5 billion) செலுத்தியது.
·         இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு எஸ்ஸார் குழுமம், ரூ.1,37,000 கோடி அளவிலான மிகப் பெரிய கடனை அடைத்துள்ளது.
·       எஸ்ஸார் குளோபல், மெசாபி மெட்டாலிக்ஸ் இன்கார்ப். (எஸ்ஸார்  ஸ்டீல் மின்னேசோடா) வெளியிட்டுள்ள US$260 மில்லியன் முகமதிப்புள்ள கடன் பத்திரங்களை வாங்குகிறது.
மொரிஷியஸ் மற்றும் மும்பை , 7 ஜனவரி 2019:
எஸ்ஸார் குழும நிறுவனங்களின் பங்கு முதலீட்டு நிறுவனம்,  எஸ்ஸார் குளோபல் ஃபண்ட் லிமிடெட் {Essar Global Fund Ltd  - Essar Global}. இந்த எஸ்ஸார் குளோபல் நிறுவனம், மற்றொரு சாதனையாக அதன் கடன்களின் கடைசி தவணையான ரூ. 12,000 கோடியை  (US$1.75 billion) பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திரும்ப அளிக்கிறது. இது தவிர, கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தில் எஸ்ஸார் ஆயில் கொடுக்க வேண்டிய ரூ. 30,000 கோடி (US$5 billion)  கடனை பல்வேறு  நிறுவனங்களுக்கு திரும்ப கட்டி இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எஸ்ஸார் குழுமம். ரூ. 1,37,000 கோடி (US$21 billion)  கடனை (எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன கடனையும் சேர்த்து) திரும்பக் கட்டி இருக்கிறது. இதில், பெரும்பாலான கடன்கள் இந்திய வங்கி துறையை சேர்ந்ததாகும். இது இந்தக் குழுமத்தின் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கடனாகும்.
எஸ்ஸார் குளோபல், இப்போது சுமார் ரூ. 6,300 கோடி கடனை ஐ.சி.சி.ஐ.சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்டட் பேங்க்-களுக்கு கட்டி உள்ளது. இதையும் சேர்த்து இந்த வங்கிகளுக்கு மொத்தம் ரூ.31,500 கோடியை திரும்பக் கட்டி இருக்கிறது. இந்தத் தொகை 2008-14 ஆண்டுகளில் எஸ்ஸார் குளோபல் நிறுவனத்தின் மூலதன விரிவாக்கத்துக்காக வழங்கப்பட்ட கடன்களாகும்.
எஸ்ஸார் குளோபல் நிறுவனத்துக்கு தொடர்ந்து கடன் வழங்கும் ஒரே நிறுவனம் இப்போது விடிபி (VTB) ஆகும். இது கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக எஸ்ஸார் குளோபல் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சில சொத்துகளை மாற்றி அமைத்தது மற்றும் ஐந்தொகை (Balance Sheet) -ஐ மாற்றி அமைப்பது மூலம் எதிர்கால வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
·       ஏற்கெனவே இருந்த பாதுகாப்பான கடன் (secured debt) அனைத்தையும் திரும்பக் கட்டி வரும் எஸ்ஸார் குளோபல், முந்தைய எஸ்ஸார் ஸ்டீல் மின்னேசோடா லிமிடெட் மற்றும் நிறுவனங்களுக்கு எஸ்ஸார் குளோபலிருந்து கொடுக்கப்பட்ட பாதுகாப்பற்ற உத்தரவாதக் (Unsecured Guarantees) கடன்களை  திரும்பக் கொடுத்துள்ளது. இதில் உள்நாட்டு கடன்கள், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பாரத ஸ்டேட் பேங்க் தலைமையிலான பல்வேறு இந்திய வங்கிகள் மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், வெளிநாட்டு கடன்கள், டேவிட்சன் கெம்ப்னர் தலைமையிலான கூட்டமைப்பு மூலம் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதன்படி எஸ்ஸார் குளோபல், மெசாபி மெட்டாலிக்ஸ் இன்கார்ப். வெளியிட்டுள்ள US$260 மில்லியன் முகமதிப்புள்ள கடன் பத்திரங்களை வாங்குகிறது. இது, எஸ்ஸார் குளோபல் மீண்டும் குறைந்த செலவில் இரும்பு தாது சுரங்கப் பணியில் ஈடுபட வழி வகுக்கும். இதற்கான கட்டுமானம் அமெரிக்காவில் உள்ள மின்னேசோடாவில் நடந்து வருகிறது.
எஸ்ஸார் குழுமம்
எஸ்ஸார் குழுமம் (Essar Group), பெரிய அளவில் கடனை அடைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இது வரைக்கும் மொத்தம் ரூ. 1,37,000 கோடி  (US$21 billion)  கடனை திரும்ப அடைந்துள்ளது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வரலாற்றில் இது மிகப் பெரிய நிகழ்வாகும். கடனை முழுமையாக அடைத்ததை அடுத்து எஸ்ஸார் குழுமத்தின் ஐந்தொகை (balance sheet) எதிர்காலத்தில் வலிமையாகவும் நிலையானதாகவும் இருக்கும்.  
இந்தக் கடனை அடைக்கும் நிகழ்வு பல பகுதிகளாக நடந்தது. அதில், முக்கியமானவை:
2017 ஆம் ஆண்டில், ரோஸ்னெஃப்ட் மற்றும் டிராஃபிகுரா (Rosneft and Trafigura) தலைமையிலான நிறுவனங்களுக்கு எஸ்ஸார் ஆயில் நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் எஸ்ஸார் குளோபல், குழுமத்தின் சுமார் ரூ.  86,000  கோடி கடனை அடைத்தது. இதில் ரூ. 72,600 கோடி வங்கி கடன்களாகும்.
கடந்த இரண்டுகளாக கூடுதல் சொத்துகள் குறிப்பாக ஏஜிஸ் நிறுவனம், டெலிபெர்ஃபார்மன்ஸ் மற்றும் சிஎஸ்பி-க்கு விற்பனை செய்யப்பட்ட மூலம் கிட்டத்தட்ட ரூ.  6,000 கோடி (US$910 million) மற்றும் ஈக்கினாக்ஸ் பிசினஸ் பார்க்ஸ் நிறுவனம், புரூக்ஃபீல்ட் அஸெட் மேனேஜ்மென்ட்-க்கு விற்பனை செய்தது மூலம் கிட்டத்தட்ட ரூ. 2,400 கோடி (US$360 million) கிடைத்தன. இந்தத் தொகைகள் நிறுவனத்தின் இதர கடன்களை அடைக்க பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா தொடர்புடைய ரூ. 45,000 கோடி கடன் ஐபிசி நீதிமன்ற நடைமுறை மூலம் அடைக்கப்படுகிறது. இதனையொட்டி, கடன் கொடுத்தவர்கள், ஆர்செல்லர் மிட்டல் மூலம் ரூ. 42,000 கோடி கடன் திரும்ப அடைக்கப்பட்டது. எஸ்ஸார் குளோபல்-ன் ஒரு துணை நிறுவனம், மூலம் ரூ..54,389 கோடி கடனை அடைத்தது. இதன் மூலம், பாதுகாப்பான கடன்கள் மற்றும் செயல்பாட்டுக்காக வாங்கிய கடன்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.  எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா நிறுவனத்துக்கு இந்தியாவிலுள்ள வங்கிகள் வழங்கிய கடன் நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற நடைமுறை மூலம் முழுமையாக அடைக்கப்படுகிறது.
இவை தவிர, எஸ்ஸார் குளோபல், எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் சிறுபான்மை பங்குதாரர்களுக்கு ரூ. 3,955 கோடியை திரும்ப அளிக்கிறது. இந்த முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீட்டில் 2,420% வருமானம் கிடைக்கிறது. இதேபோல், எஸ்ஸார் போர்ட்ஸ்-ன் ரூ. 1,400 கோடி முதலீடு சிறுபான்மை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த எஸ்ஸார் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குநர் திரு. பிரசாந்த் ரூயா (Mr Prashant Ruia, Director-Essar Capital)  கூறும் போது:
கடந்த 2008 ஆம் ஆண்டு, எஸ்ஸார் ரூ.1,20,000  கோடி முதலீட்டில் எரிசக்தி, உள்கட்டமைப்பு, உலோகங்கள் மற்றும்  சுரங்கம், சேவைகள் துறையில் களமிறங்கியது. கடுமையான நெறிமுறைகள் மற்றும் அரசு ஏலங்கள் -  இந்திய அரசின் இயற்கை எரிவாயு விநியோகம் ரத்து, மற்றும் 2010 மற்றும் 2015 இடையே நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் போன்றவை எஸ்ஸார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீறி நடந்தன. இதனால், எஸ்ஸார் நிறுவனத்தின் சில வணிகங்கள் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக, இந்தக் குழுமத்தின் கடன்கள் கையை மீறி சென்றது. இருந்தாலும், வணிகத்தில் புதிய பங்கு மூலதனத்தை புகுத்தியது.
கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கடனை அடைக்கும் முயற்சியில் எஸ்ஸார் குழுமம் தீவிரமாக இறங்கியது. ரூ. 1,37,000 கோடி கடன்கள் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளன. இதில், பெரும் பகுதி இந்தியாவிலுள்ள வங்கிகள் மற்றும் கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக எஸ்ஸார் குழுமம் உருவாக்கிய வணிகங்கள் மற்றும் மதிப்பு மிக்க சொத்துகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் கடன்களை அடைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கடனை அடைக்கும் நிகழ்வு  இப்போது நிறைவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து எதிர்காலத்தில் எஸ்ஸார் குழுமத்தின் ஐந்தொகை வலிமையாகவும் நிலையானதாகவும் வளர்ச்சி  அடையும். எங்களின் வளர்ச்சி மீண்டும் நிலை நிறுத்துவதாக இருக்கும்.
கடனை அடைக்கும் நிகழ்வு நிறைவு பெற்றதால் எஸ்ஸார் குழுமத்தின் வருமானம்  $11.5 பில்லியன் ஆகவும் உள்ளது. இந்தக் குழுமம் இப்போது எரிசக்தி, உள்கட்டமைப்பு, உலோகங்கள் மற்றும்  சுரங்கம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் பரந்து விரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் குழுமம், இந்தத் துறைகள் மற்றும் புதிய துறைகளில் தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்துவதோடு, புதிய வாய்ப்புகளையும் தேடி வருகிறது.  
எஸ்ஸார் பற்றி
எஸ்ஸார் குளோபல் ஃபண்ட் (Essar Global Fund), சர்வதேச அளவில் எரிசக்தி, உள்கட்டமைப்பு, உலோகங்கள் மற்றும்  சுரங்கம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் முதலீடு செய்திருக்கிறது. இந்த நிறுவனங்களின் மொத்த வருமானம் சுமார் US$11.5 பில்லியன் ஆகவும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 4,500-க்கும் அதிகமாகவும் உள்ளது.  புதிய வாய்ப்புகளை கண்டறிந்து உலக தரமான சொத்துகளை உருவாக்குதல், மறுமுதலீடு செய்வது மூலம் அனைத்து பங்கு முதலீட்டாளர்களுக்கும் தொடர்ந்து மதிப்பை உருவாக்கி கொடுக்க இருக்கிறது.
Media Contact:
Essar
Manish Kedia, Senior Vice President - Corporate Affairs, Essar
Phone: +91 98197 30092, Email:  manish.kedia@essar.com
Ravi Muthreja, Vice President - Corporate Communication, Essar
Phone: +91 99301 34566, Email: Ravi.Muthreja@essar.com
Adfactors PR
Hiral Vora
Phone: +91 9769998892, Email: hiral.vora@adfactorspr.com

Engage with us on Social Media
Facebook
Twitter
YouTube
Instagram


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பா.ஜெயவேல் - இரவுக்குறி நூல் வெளியீட்டு விழா Book

  பா.ஜெயவேல் - இரவுக்குறி நூல் வெளியீட்டு விழா   பா.ஜெயவேல் எழுதிய   இரவுக்குறி நூல் வெளியீட்டு விழா   இடம்: படைப்பு அரங்கம், ...