ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பால் பவிஷ்ய யோஜ்னா (Bal Bhavishya Yojna) என்ற புதிய ஃபண்டை இளவல்களுக்காக (மைனர்கள்) அறிவித்துள்ளது.
பிள்ளைகளுக்காக அதன் பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ முதலீடு செய்யலாம்.
இந்த ஃபண்ட் வெளியீடு 2019 பிப்ரவரி 5, -ல் நிறைவுபெறுகிறது.
யூனிட்கள் ஒதுக்கப்பட்ட தேதியிலிருந்து 5 வர்த்தக நாட்களுக்குள் மறுமுதலீடு தொடங்கும்.
முதலீட்டு பூட்டுக் காலம் (லாக்-இன் பீரியட்), 5 ஆண்டுகள் அல்லது குழந்தைக்கு பதினெட்டு வயதாகும் வரை, என்பதில் எது முந்துகிறதோ அது எடுத்துக்கொள்ளப்படும்.
வெல்த் பிளான், சேவிங்க்ஸ் பிளான் என்று இரண்டு பிரிவாக உள்ளது.
வெல்த் பிளானில் முதலீட்டின் பெரும்பகுதி பங்குகள் அல்லது பங்கு சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.
சேவிங்ஸ் பிளானில் முதலீட்டின் பெரும்பகுதி, கடன் மற்றும் நிதி சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக